Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2022 | November Matha mithunam Rasi Palan 2022
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha mithunam Rasi Palan 2023

Posted DateOctober 27, 2023

பொதுப்பலன் :

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதத்தில் உங்கள்  வாழ்க்கை முறையில் சுகபோகங்கள் மற்றும் வீட்டுச் சூழலில் பிரச்சினைகள் ஏற்படலாம்.  பிரச்சினைகள் மற்றும் எதிரிகளை கையாள்வதில் உங்கள் கவனம் மாறலாம். இந்த மாதத்தில் வீடு மற்றும் வாகனங்களில் புதிய பிரச்சனைகள் வரலாம். வரும் காலத்தில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது கண்டிப்பாக நல்லதல்ல. பிள்ளைகள் மீதான அக்கறையில் முன்னேற்றம் கூடும்.  இந்த நவம்பர் மாதத்தில் உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

காதல்/ குடும்ப உறவு :

திருமணமான மிதுன ராசி அன்பர்கள் குடும்ப விஷயங்களில் இருந்து விலகி இருப்பது போன்ற மனச்சோர்வை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நேரத்தை நீங்கள் சிரமமின்றி பயன்படுத்திக் கொள்வீர்கள்.  இது துணையுடனான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.   வேலை காரணமாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய காலகட்டமாக இருக்கலாம். உங்களில் சிலர் மனதில் காதல் அரும்பு மலரலாம்.  வாழ்க்கைத் துணையுடன் வலுவான உறவையும் பிணைப்பையும் உருவாக்க வேண்டும். இந்த மாதத்தில் துணையுடன்  தாம்பத்திய / திருமண இன்பத்தை அனுபவிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை  மூலம் ஆதாயம் மிகவும் சாத்தியமாகும். வாழ்க்கைத் துணை  தங்கள் இலக்குகளில் தொடர்ந்து தடைகளை சந்திக்க நேரிடும். மொத்தத்தில், காதல் மற்றும் உறவு விஷயங்களில் சராசரி மகிழ்ச்சி காணப்படுகிறது.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : கேது பூஜை

நிதிநிலை :

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நிதிநிலை இந்த மாதம் கடினமான நேரத்தைக் காணும். பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் உங்களுக்கு ஆதாயம்  இருக்காது.  தேவையற்ற செலவுகள் வரக்கூடும் என்பதை கிரக நிலை முன்னறிவிக்கிறது. உங்களின் மற்றும் உங்கள் தாயாரின் உடல்நலம் தொடர்பான செலவுகள் இந்த காலகட்டத்தில் ஏற்படலாம். எனவே, உண்மையில் தேவையில்லாத நிகழ்வுகளுக்கு செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்தக் காலக்கட்டத்தில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் நேரலாம்.  உடன்பிறந்தவர்களுக்காக மற்றும் வாழ்க்கையில் புதிய முயற்சிகள் காரணமாக செலவுகள் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் தொடர்பான செலவுகளும் இந்த காலகட்டத்தில் ஏற்படலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

மிதுன ராசிக்காரர்களின் உத்தியோக வாழ்க்கையில் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து பயம் மற்றும் பதட்டம் ஏற்படும்.  குறிப்பாக பெண் சக ஊழியர்கள் மூலம் தொழிலில் சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். அதுவும் சில சமயங்களில் விரக்தியை ஏற்படுத்தலாம். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் உத்தியோக வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மாதத்தின் பிற்பாதியில், நீங்கள் எதிரிகள் மற்றும் தொழிலில் உள்ள பிரச்சனைகளை சிறந்த நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் கையாள்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரியுடன் சிறு சிறு மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கலாம். இந்த நவம்பர் மாதத்தில் ஊதிய உயர்வு நிச்சயம் சாத்தியமாகும். பெண் ஊழியர்களுடனான பிரச்சினைகள் மற்றும் மோதல்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையெனில், இது ஒரு பெரிய பிரச்சனை / சர்ச்சையை ஏற்படுத்தலாம்.

தொழில் :

மிதுன ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரமும் உத்தியோகத்தில் குறிப்பிட்டது போன்ற பலன்களையே காணும். தவிர. வியாபாரத்தில் முதலீடு மூலம்  இந்த மாதத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். விரிவாக்கம் பற்றிய எந்தவொரு யோசனை அல்லது சிந்தனை இருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். தகவல்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம்  சார்ந்த வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, முன்பை விட வேகமாக தொழில் நடப்பதைக் காணலாம். இதன் போது பெண் பங்குதாரர் அல்லது பெண் மேலாளர்கள் கொடுக்கும் யோசனைகள் வணிகத்தில் சரியாக வேலை செய்யாமல் போகலாம். முதலீட்டில் உள்ள போர்ட்ஃபோலியோ  பற்றி மறுபரிசீலனை செய்வது, உங்களுக்கு நன்மை பயக்கும். மேலும், தேவையான இடங்களில் முதலீடுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த மாதத்தில் தலைமைத்துவத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

தொழில் வல்லுனர்கள் :

மிதுன ராசிக்காரர்களின் தொழிலைப் பொறுத்த வரையில் இந்த மாதம் கலவையான பலன்கள் இருக்கும். தொழிலில் உள்ள பிரச்சனைகளை கையாள்வதில் நீங்கள் அறிவுப்பூரவமாகவும் சாதுரியமாகவும் செயல்பட  வேண்டும். மாதத்தின் பிற்பகுதியில் சில ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். வாடிக்கையாளர்களுடன் பழகும்போது, ​​ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உணர்ச்சி / உணர்வுகள் குறித்து  மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் மிதமான நிதி வளர்ச்சி காணப்படும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் சிறப்பாக இருக்க கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். இருப்பினும், வரும் மாதங்களில் தொழிலில்  திருப்தி படிப்படியாக குறையத் தொடங்கும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற  :ராகு பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் ஓரளவுக்கு சீராக இருக்கும். உடல்நிலையில் சிறு சிறு அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்த மாதத்தில் குழந்தைகளின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தையும் சரியான முறையில் கவனிக்க வேண்டும். நீரிழிவு, எலும்புகள் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த மாதத்தில் கூடுதல் கவனம் தேவை. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த மாதத்தில் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  உணர்ச்சிகள் மற்றும் இரத்த அழுத்த அளவுகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :கேது பூஜை

மாணவர்கள் :

மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் கலவையான பலன்கள் இருக்கும். தகவல்தொடர்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே இந்த காலகட்டத்தில் வாதங்களைத் தவிர்க்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் உயர் படிப்பு படிப்பவர்கள் சில சிறிய தடைகளை சந்திக்கலாம்.எனவே இந்த மாதத்தில் கல்வியில் கூடுதல் முயற்சியும் கவனமும் செலுத்த வேண்டும்.  வாழ்விடத்தின் அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வியில் சில சிக்கல்கள் இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் பாடங்களை மனப்பாடம் செய்து புரிந்துகொள்வதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.  முன்பு கற்றுக்கொண்டதைத் தக்கவைத்துக்கொள்வது மாத இறுதியில் மிகவும் முக்கியமானது.

கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை

சுப தேதிகள் : 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 23, 24, 25 & 26 .

அசுப தேதிகள் : 1, 2, 3, 18, 19, 20, 27, 28, 29 & 30.