பணப்பற்றாக்குறை நீக்கும் பரிகாரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பணப்பற்றாக்குறை நீக்கும் பரிகாரம்

Posted DateJuly 1, 2025

பொருள் இல்லாருக்கு இவுலகில்லை என்ற கூற்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகில் வாழ நமக்கு பொருள் அவசியம் தேவை. அந்தப் பொருட்களை வாங்க நமக்கு பணம் அவசியம் தேவை. ஏனெனில்  உலகில் பணம் ஒன்று தான் நமது வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. பணம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாது  எனலாம். பணம் இருந்தால் தான் உறவுகள் கூட நம்மை மதிக்கும் காலமாக இந்தக் காலம் உள்ளது. எனவே தான் அனைவரும்  பணத்தை சம்பாதிப்பதிலும் அதனை சேர்ப்பதிலும் குறியாக உள்ளார்கள். ஆனால் எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஒரு சிலரிடம் அவசர தேவைக்குக் கூட பணம் இல்லாத நிலை இருக்கிறது. தேவையான பொருள் வாங்கக் கூட காசில்லாத நிலையில் பல பேர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தேவைக்கு  காசு இருக்கும். ஆனால் அவர்கள் ஆடம்பர செலவு செய்ய பணம் வேண்டும் என்று விரும்புவார்கள். தாங்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க பணம் இல்லையே என்று வருத்தப்படுவார்கள். ஒரு சிலர் பணத்தை சம்பாதிப்பார்கள். அதற்கேற்ப செலவுகளும் அவர்களுக்கு இருக்கும். அவர்களால் பணத்தை சேமிக்க இயலாத நிலை இருக்கும். அவர்கள் பணத்தை சேமிக்க விரும்புவார்கள். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பணத் தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

 நாம் எல்லாரும் விரும்புவது நமக்கு நிரந்தர பண வருமானம். பணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு பணம் வந்தாலும் இது போதும் என்று இருந்து நாம் விடுவதில்லை. நமது அவசிய மற்றும் ஆடம்பர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் அனைவரும் பணம் சேர வேண்டும் என்று தான் விரும்புவோம். பணத்தை வைத்துத் தான் நமது தேவைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அந்த பணத்தை சம்பாதிக்க நமது முயற்சி மிகவும் அவசியம். மேலும் இறை அருள் அவசியம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிர்ஷ்டம் நமது பக்கம் இருக்க வேண்டும். தடையின்றி பண வரவு இருக்கவேண்டும் என்பது தான் நமது எல்லோரின் விருப்பமாக இருக்கும்.

 பணத்தடை என்ற வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் இருக்க சில எளிய பரிகார  முறைகள் உள்ளது. அது குறித்தான விளக்கங்களை  குறித்து  இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவு இருந்தால் மட்டும் போதாது அந்த பணத்தை நாம் சேமிக்க வேண்டும். சொத்து சேர்க்க  வேண்டும். செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும். எப்பேர்ப்பட்ட பணம் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உண்டானாலும் ஒரே ஒரு ரூபாயை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் பணத் தடைகளை நீக்கி விடும்.

இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தை செய்வதற்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இது மிகவும் எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை மேற்கொள்ள ஒரு ரூபாய் நாணயம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு எதுவும் தேவை கிடையாது. வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை என்பதால் நீங்கள் முதல் நாளே வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? பூஜை அறையும் அது போல சுத்தமாகக்கிக் கொண்டிருப்பீர்கள். வழக்கம் போல விளக்கு ஏற்றி பூஜைகளை மேற்கொள்ளுங்கள்.  பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதை பன்னீர் ஊற்றி சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு பித்தளை தட்டில் வைத்து பூஜையில் வைத்து விடுங்கள். பூஜைகளை முடித்து தூப தீப ஆராதனை காட்டும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்திற்கும் காட்ட வேண்டும். பிறகு அன்றில் இருந்து தொடர்ச்சியாக 11 நாட்கள் இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு சாம்பிராணி ஊதுபத்தி தூப தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். பதினோரு நாட்களும் பூஜை செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு நிறைவு நாளில் அந்த ரூபாயை அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். அவ்வாறு சேர்க்கும் பொழுது பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்றும் வீண் விரயங்கள் குறைய வேண்டும் என்றும் விநாயகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நமக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும், பணத்தை சேமிப்பாக மாற்றுவதற்குரிய வழிகளும் உண்டாகும், வீண் விரயங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.