Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய போற்றி மந்திரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய போற்றி மந்திரம்

Posted DateAugust 2, 2024

ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். தட்சிணாயன தொடக்க காலம் ஆடி மாதம். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம் ஆகும். இது தேவர்களுக்கு மாலைப் பொழுது என்று கூட கூறுவார்கள். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மனை போற்றி வணங்குவதன் மூலம் அவளின் பரிபூரண அருளைப் பெற முடியும். இந்தப் பதிவில் ஆடி மாதம் கூற வேண்டிய அம்மன் போற்றி மந்திரம் பற்றிக் காண்போம்.

அம்மன் 108 போற்றி மந்திரம்

1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி

4. ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

5. ஓம் அரசிளங்குமரியே போற்றி

6. ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

7. ஓம் அமுதநாயகியே போற்றி

8. ஓம் அருந்தவநாயகியே போற்றி

9. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

10. ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

11. ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

12. ஓம் ஆதியின் பாதியே போற்றி

13. ஓம் ஆலால சுந்தரியே போற்றி

14. ஓம் ஆனந்த வல்லியே போற்றி

15. ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி

16. ஓம் இமயத்தரசியே போற்றி

17. ஓம் இடபத்தோன் துணையே போற்றி

18. ஓம் ஈசுவரியே போற்றி

19. ஓம் உயிர் ஓவியமே போற்றி

20. ஓம் உலகம்மையே போற்றி

21. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

22. ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி

23. ஓம் ஏகன் துணையே போற்றி

24. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

25. ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

26. ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

27. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

28. ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

29. ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

30. ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

31. ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

32. ஓம் கனகமணிக்குன்றே போற்றி

33. ஓம் கற்பின் அரசியே போற்றி

34. ஓம் கருணை ஊற்றே போற்றி

35. ஓம் கல்விக்கு வித்தே போற்றி

36. ஓம் கனகாம்பிகையே போற்றி

37. ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

38. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

39. ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி

40. ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

41. ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி

42. ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

43. ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

44. ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

45. ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

46. ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

47. ஓம் சக்தி வடிவே போற்றி

48. ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

49. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

50. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

51. ஓம் சிவயோக நாயகியே போற்றி

52. ஓம் சிவானந்தவல்லியே போற்றி

53. ஓம் சிங்காரவல்லியே போற்றி

54. ஓம் செந்தமிழ் தாயே போற்றி

55. ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

56. ஓம் சேனைத்தலைவியே போற்றி

57. ஓம் சொக்கர் நாயகியே போற்றி

58. ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

59. ஓம் ஞானாம்பிகையே போற்றி

60. ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

61. ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி

62. ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி

63. ஓம் திருவுடையம்மையே போற்றி

64. ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி

65. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

66. ஓம் திருநிலை நாயகியே போற்றி

67. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி

68. ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

69. ஓம் தென்னவன் செல்வியே போற்றி

70. ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

71. ஓம் தையல் நாயகியே போற்றி

72. ஓம் நற்கனியின் சுவையே போற்றி

73. ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

74. ஓம் நல்ல நாயகியே போற்றி

75. ஓம் நீலாம்பிகையே போற்றி

76. ஓம் நீதிக்கரசியே போற்றி

77. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

78. ஓம் பழமறையின் குருந்தே போற்றி

79. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி

80. ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

81. ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

82. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

83. ஓம் பசுபதி நாயகியே போற்றி

84. ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி

85. ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி

86. ஓம் பார்வதி அம்மையே போற்றி

87. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

88. ஓம் பெரிய நாயகியே போற்றி

89. ஓம் பொன்மயில் அம்மையே போற்றி

90. ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

91. ஓம் மலையத்துவசன் மகளே போற்றி

92. ஓம் மங்கள நாயகியே போற்றி

93. ஓம் மழலைக்கிளியே போற்றி

94. ஓம் மனோன்மணித் தாயே போற்றி

95. ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

96. ஓம் மாயோன் தங்கையே போற்றி

97. ஓம் மாணிக்கவல்லியே போற்றி

98. ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

99. ஓம் மீனாட்சி அம்மையே போற்றி

100. ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

101. ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

102. ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி

103. ஓம் வடிவழகு அம்மையே போற்றி

104. ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

105. ஓம் வேதநாயகியே போற்றி

106. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

107. ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி

108. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

ஆடி மாதம் தினமும் காலையில் எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து அம்மன் முன் விளக்கேற்றி இந்த 108 போற்றி கூறி வர வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.