Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
எதிர்மறை எண்ணங்களை விரட்டும் எண்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

எதிர்மறை எண்ணங்களை விரட்டும் எண்கள்

Posted DateDecember 4, 2024

நமது மனதில் எதிர்மறை  எண்ணங்கள்  அடிக்கடி வந்து போகும். இது இயற்கையான ஒன்றே என்றாலும். அதனை நாம் வளர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணம் என்னும் குதிரை நம்முள் ஓடிக் கொண்டே தான் இருக்கும். அதனை நாம் அடக்க நினைத்தால் அது அதிகரிக்கும் அல்லது மீண்டும் மீண்டும் எழும். எண்ணம் எழுவதற்கும் சிந்தனைக்கும் வேறுபாடு உள்ளது. சிந்தனை தான் செயல் வடிவம் எடுக்கிறது. சிந்தையில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று நேர்மறை மற்றொன்று எதிர்மறை.

தானாக ஒவ்வொருவருடைய மனதிலும் எதிர்மறை எண்ணங்கள் கண்டிப்பாக உருவாகும். அது உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும். என்றாலும் அதற்கு தீனி போட்டு  நாம் அதனை வளர்க்கக் கூடாது. நமது சிந்தனையை நேர்மறை ஆக்கிக் கொள்ள வேண்டும். எதையும் அறிவு சார்ந்து யோசிக்க வேண்டும்.

எனக்கு கிடைக்க வில்லை என்றால், இப்படி ஆகிவிட்டால், என்ன செய்வது. இவர்கள் ஏன் இப்படி பேசினார்கள்., இவர்கள் ஏன் என்னிடம் சண்டை போட்டார்கள், இவர்கள் ஏன் என்னை மதிக்கவில்லை. நான் கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வராவிட்டால் என்ன செய்வது  இப்படி பல விதமாக  எண்ணங்கள் எழுவது இயல்பே. நாம் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் நாம் இவ்வாறு சிந்த்திதுக்கொண்டே இருந்தால் அதற்கு விடிவே இருக்காது.  எனவே தான் நாம் இந்த எதிர்மறை சிந்தனைகளை விலக்க வேண்டும்.

ஒரு குழந்தையிடம் ஓரு பொருளைக் கொடுத்து இதனை உடைக்காமல் வை என்று கூறுவது எதிர்மறை ஆகும். அதுவே அந்தக் குழந்தையுடன் நீ பத்திரமாக வை என்பது நேர்மறை ஆகும். இரண்டும் ஒரே செயல் தான். ஆனால் நாம் சொல்லும் விதத்தில் அது மாறுபடுகிறது. இந்த சொல்லே செயலாகும்.  முதலில் நமது எண்ணம் சீரானால் வார்த்தைகளிலும் தெளிவு இருக்கும். எனவே நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொண்டு நேர்மறையாகப் பேச வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு தொடர்ந்து நாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

இந்த எதிர்மறை எண்ணங்கள் விலக ஒரு எளிய பரிகாரம் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

முதலில் உடைபடாத முழுதாக இருக்கும் ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலையில் 83651778 என்னும் என்னை எழுதுங்கள். இந்த எண்ணை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருங்கள். உறங்கும் போது கூட உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண் மன நிம்மதியை அளிப்பதோடு மனதில் தெளிவான சிந்தனையை அளிக்கும். உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் குறையும்.