Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வெற்றி பெறுவதற்கான மந்திரம் | வெற்றி மந்திரம் - Astroved Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெற்றி பெறுவதற்கான மந்திரம்

Posted DateAugust 5, 2024

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு வெற்றி பெறுவதற்கு முதலில் நாம் ஒரு இலக்கை அமைத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் இருக்க வேண்டும். பின் அதற்கான முயற்சி வேண்டும். நமது அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் காரியங்களில் அல்லது நடவடிக்கைகளில் வெற்றி வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்கும். கடினமான காரியங்களில் கூட வெற்றி காண வேண்டும் எனில் கண்டிப்பாக அதற்கான முயற்சி தேவை. இதற்கு நம் மனதில் உத்வேகம் மற்றும் ஆற்றல் வேண்டும். நமது குடும்பத்தாரின் ஆதரவு வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் இருந்து நமக்கு சக்தி வேண்டும். இந்த ஆற்றலும் சக்தியும் நமக்கு கிடைத்து விட்டால் நாம் வெற்றி அடையலாம். அதனைப் பெறுவது எப்படி? இதற்கு இறைவன் அனுக்கிரகம் வேண்டும். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. எனவே இறைவனின் அருள் கண்டிப்பாக வேண்டும். நமது முயற்சியுடன் இறைவனின் அருளும் சேரும் போது நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும்.

தொட்ட காரியம் துலங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நாம் ஒரு செயலை ஆரம்பிப்போம். நமது உழைப்பு மற்றும் முயற்சி இருந்தாலும்  சில எதிர்மறை எண்ணங்கள் காரணமாக அதில் நமக்கு வெற்றி கிட்டாமல் போகலாம். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கள் வேண்டியதை அடைவதில் இருந்து உங்களை தடுக்கலாம். நீங்கள் நினைத்தது நினைத்த மாதிரி நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காரிய சித்தி மந்திரம்

“ஓம் சக்ரதராய நமஹ”

இந்த மந்திரத்திற்கு மிகச் சிறப்பான சக்தி உண்டு.  இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் கூற வேண்டும்.  இந்த மந்திரத்திற்கு உங்கள் எதிர்மறை ஆற்றலை விலக்கும் சக்தி உண்டு.

இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து கூற வேண்டும் என்ற எந்தவித நிபந்தனையும் கிடையாது. வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற இயலாத  சூழ்நிலை இருந்தாலும் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கலாம். ஏதாவது ஒரு காரியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டது அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கும் பொழுது உடனே இந்த மந்திரத்தை கூறினால் அந்த இடத்திலேயே உங்கள் பிரச்சினைகள் தீரும். ஆபத்துகள் ஏற்படும் நேரத்தில் இந்த மந்திரத்தை  கூறும்பொழுது அந்த ஆபத்துகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.