மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் இனி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறக்கும் போதே மூன்று கடன்களுடன் தான் பிறக்கிறோம் அவை தேவ கடன், ரிஷி கடன் மற்றும் பித்ரு கடன். தேவ கடன் என்பது குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது. ரிஷி கடன் என்பது ரிஷிகளை சாதுக்களை சன்னியாசிகளை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது. பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது தாய் தந்தையைக் கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது. முற்பிறவி கடன் மற்றும் இந்தப் பிறவிக் கடன் என நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கடன் சம்பந்தமான பிரச்சினையில் தவிக்கிறோம். யாருக்கும் கடனாளியாக வாழ்வது என்பது விருப்பமில்லாத ஒன்று என்று தான் கூற வேண்டும். என்றாலும் நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கடனாளியாக ஆகி விடுகிறோம்.
இன்று பெரும்பாலோனோர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன் வாங்கத் தயங்குவதில்லை. மாதா மாதம் அந்தக் கடன் தொகை அடைக்கவே ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதிலும் சிலர் ஆசை காரணமாக தங்கள் தகுதிக்கு மீறி கடன்பட்டு விடுகிறார்கள். பிறகு அதனை நினைத்து கலங்குகிறார்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் என்ற கூற்றில் இருந்து கடன் வாங்கினால் எத்துனை அளவு கலக்கம் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். எனவே நாம் கடன் வாங்கும் போது நம்மால் அதனை திருப்பிச் செலுத்த முடியமா? என்பதனை சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து அதை வாங்க வேண்டும் இதனை வாங்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு கடனாளியாக ஆகுதல் கூடாது. அப்படி அவசியம் வாங்க வேண்டும் என்றால் தகுதிக்கு ஏற்றார் போல வாங்க வேண்டும்.
கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் ஒருபரிகாரத்தைப் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த பரிகாரத்தை தேய்பிறை சஷ்டி நாளில் மேற்கொள்ளலாம். அல்லது செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளலாம். இரண்டும் சேர்ந்து வரும் நாளாக இருந்தால் மிகவும் உத்தமம்.
ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். 27 மிளகுகளை அதில் வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து விட்டு அந்த மிளகு முடிச்சை பைரவர் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த முடிச்சு மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது மிளகு எதிர்மறை ஆற்றலை நீக்கும் தன்மை கொண்டது. மேலும் மிளகு தீபம் ஏற்றும் போது மிளகு வெடிக்கலாம். மிளகு வெடிப்பது போல உங்கள் கஷ்டங்கள் கரையும். கடன் தீர்ந்து போகும் என்பது ஐதீகம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025