இந்த மாதம் உங்கள் சுய முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் உத்தியோக முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான திறமைகள் மேம்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் உங்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவலாம். நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி திருப்தி அடைவீர்கள். நீண்ட தூர பயணம் காரணமாக செலவுகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் முதலீடு செய்வதன் மூலம் நஷ்டம் ஏற்படலாம். எனவே தொழில் முதலீடுகளைத் தவிருங்கள். ஆன்மீக முன்னேற்றம் சாத்தியம் இல்லை. இது உங்களுக்கு மனக் கவலைகளை அளிக்கலாம். தூக்கம் பாதிக்கப்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனக் கவலைகளை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பது கடினம். எனவே பொறுமை காப்பது அவசியம். புதிய முயற்சிகள் தோல்வியில் முடிவடையலாம். இந்த கடினமான தருணங்களை நீங்கள் கடக்க உங்கள் குல தெய்வ அருள் உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே தொடர்ந்து குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்லலாம். உங்கள் காதலுக்கு பெற்றோரின் அனுமதி பெற இது உகந்த மாதம். காதல் உறவில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று தங்கள் இலக்கை அடைவார்கள். இடமாற்றம் மற்றும் நீண்ட பயணங்களைத் தள்ளிப் போட முயற்சி செய்யுங்கள்.
உங்கள் காதலைச் சொல்லும் தைரியம் மற்றும் நம்பிக்கை இந்த மாதம் உங்களிடம் இருக்கும். காதலில் வெற்றி கிட்டும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் துணையை ஈர்க்க ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். காதலர்கள் திருமணம் செய்து கொள்ள இது ஏற்ற மாதம். உங்கள் காதலுக்கு பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் பெற இந்த மாதம் ஏற்ற மாதம். உங்கள் துணையின் குடும்ப உறுப்பினர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் துணையுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். அதனால் அடிபட வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் கடந்த கால சிரமங்களில் இருந்து வெளிவருவீர்கள். இந்த மாதம் திருமணம் ஆன பெண்கள் கருவுறும் வாய்ப்பு உள்ளது. மகான்களை வழிபடுவதன் மூலம் காதலர்கள் மகிழ்ச்சி காணலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
இந்த மாதம் உங்கள் வருமானம் பெருக வாய்ப்புள்ளது. உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட கால சேமிப்பிற்கு நீங்கள் திட்டமிடுவீர்கள். உங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் சொந்த ஊரில் இருக்கும் சொத்தை விற்றுப் பணம் பெறும் வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நஷ்டங்களைத் தவிர்க்க முதலீடு செய்வது மற்றும் நீண்ட தூர பயணம் முதலியவற்றை தவிர்க்கவும். வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் உள்ள நபர்களால் நீங்கள் நஷ்டம் காண வாய்ப்புள்ளது. கருப்பசாமியை வழிபடுவதன் மூலம் நீங்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
உங்கள் உத்தியோகத்தில் சிரமங்களைத் தவிர்க்க உங்கள் வழக்கமான செயல்களை மட்டும் செய்யுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள். புதிய முயற்சிகளில் நீங்கள் தோல்வி அடையக் கூடும். அதன் காரணமாக உத்தியோகத்தில் திடீர் சிரமங்களை சந்திக்க நேரலாம். வேலை இழக்கும் அபாயம் கூட உள்ளது. இது உங்களுக்கு மன கஷ்டத்தை அளிக்கலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். வேலை இழப்பைத் தவிர்க்க பணியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் நிலைமையை சமாளிக்கலாம்.
குழந்தைகளுக்கான பொருட்கள் தொடர்பான தயாரிப்புகள் சம்பந்தமான தொழில் வளர்ச்சி காணும். இளம் வயது பெண்கள் பயன்படுத்தும் பரிசு பொருட்கள் மற்றும் பிற பொருட்கள், ஆடைகள் போன்ற துறைகள் வளர்ச்சி காணும். இந்த மாதம் முதலீடுகளுக்கு ஏற்ற மாதம் அல்ல. எனவே முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் அதனை தள்ளிப் போடவும். பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுடனான பரிவர்த்தனைகள் மூலம் சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. எனவே, பணப் பரிவர்த்தனையின் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இழப்பைத் தவிர்க்க யாரையும் நம்ப வேண்டாம்.
உத்தியோகம்/ தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
கழுத்து, தொண்டை, தோள்பட்டை மற்றும் விரல்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஜூன் மாதம் ஒரு ஆதரவான காலமாகும். தூக்கம் பாதிக்கப்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது பரிசோதனை செய்து, மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை
கல்வியில் முன்னேற்றம் காண இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். என்றாலும் இந்த மாதம் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். விளையாடும் போது முகத்தில் அடிபட வாய்ப்புள்ளது. இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும். படிப்பில் கவனம் செலுத்தவும். நீண்ட பயணங்கள் மற்றும் இட மாற்றத்தை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் வளர்ச்சி காணலாம். உங்கள் திட்டங்கள் மற்றும் முடிவுகள் தவறாக போகலாம். அதன் காரணமாக உங்கள் பெற்றோருக்கு நிதி இழப்பு ஏற்படலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 3,4,5,6,15,16,19,20,21,26,27,30.
அசுப தேதிகள் : 7,8,9,12,13,14,22,23,24,25.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025