இருமனம் இணையும் திருமண வாழ்வு காதல் திருமணமாகவோ, பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணமாகவோ இருக்க்கலாம். எது எப்படி என்றாலும் ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ள முதலில் பொருத்தம் பார்க்கப்படுகிறது. காதல் திருமணத்தில் இரு மனம் தானாகவே இணைந்து விடுகிறது. இந்த ஈர்ப்பு ஒன்றே அவர்களின் பொருத்தத்திற்கு சாட்சியாக அமைகிறது எனலாம். இதில் மேற்கொண்டு நாம் பொருத்தம் பார்க்க அவர்கள் இடம் அளிப்பதில்லை. பெற்றோர் பார்த்து அமைக்கும் திருமணத்தில் பலரும் பொருத்தம் பார்த்துத் தான் திருமணம் செய்கிறார்கள்.
நட்சத்திர பொருத்தம் முதலில் ஆண் பெண் நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. இதில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மாகேந்திரப் பொருத்தம் போன்ற முக்கிய பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. இந்தப் பொருத்தம் பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஆண் பெண் இருவருக்கும் உடல் ரீதியாக, மன ரீதியாக பொருத்தம் உள்ளதா என்று பார்க்கலாம். மேலும் அவர்களின் ஆயுள் நீண்ட ஆயுளாக இருக்குமா, மாங்கல்ய பலம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். தாம்பத்திய உறவு கொண்டு சந்ததிப் பேற்றை வளர்க்கும் தகுதி இருவருக்கும் பொருந்துகிறதா என்று காணலாம். அறிவியல் ரீதியாக சொல்லப் போனால் இருவரின் உடல் தன்மையும் பொருந்தியுள்ளதா என்று இரத்தம் மற்றும் குரோமோசோம்களை வைத்துக் காண்பது போலத் தான் என்று கூறலாம். இதைத் தான் நமது முன்னோர்கள் ஜாதகத்தை வைத்துக் கணித்தார்கள். செவ்வாய் தோஷம், யோனிப் பொருத்தம் போன்றவை இனிய தாம்பத்திய வாழ்வு அமையுமா என்று அறிந்து கொள்ள பார்க்கப்படுகிறது. இராசி அதிபதி பொருத்தம் இரு வீட்டாரின் ஒற்றுமையைப் பற்றி அறிந்து கொள்ள பார்க்கப்படுகிறது வசியப் பொருத்தம் என்பது குறிப்பிட்ட ஆண் மற்றும் பெண் பிறன் மனை நாடாமல் பரஸ்பரம் வசியப்பட்டு வாழ்வார்களா என்பதைக் குறிக்கிறது. நமது முன்னோர்கள் காரணம் இன்றி எந்தவொரு செயலையும் செய்ததில்லை என்பதை இவற்றின் மூலம் நாம் அறியலாம்.
திருமணப் பொருத்தம் குறித்து பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் உண்டு. நட்சத்திர பொருத்தம் மற்றும் கிரக பொருத்தம் என்று இரண்டு பொருத்தம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆண் மற்றும் பெண்ணின் திருமணத்தை நிச்சயம் செய்ய நட்சத்திரத்தை வைத்து பார்க்கும் பத்து பொருத்தம் மட்டும் போதாது. அவர்களின் ஜாதகத்தை வைத்து அதில் அமைந்து இருக்கும் கிரக நிலைகள் அவர்களின் மண வாழ்விற்கு பொருந்தி வருகிறதா என்றும் காண வேண்டியது அவசியம். இதில் கூடுதலாக நாம் விவரங்களை அறிந்து கொள்ளலாம், லக்னம் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் இருவருக்கும் இடையே நீடித்த உறவு அமையுமா? என்பதை கணித்துக் கூறலாம். கிரகங்கள் நிலை எப்படி இருக்கலாம் எப்படி இருக்கக் கூடாது என்ற விதி முறைகள் உண்டு. அவை அனைத்தையும் இந்தக் கட்டுரையில் கூற இயலாது. மேலும் இதனை நன்கு அறிந்த ஜோதிடர்கள் மட்டுமே கூற முடியும். ஜாதகத்தை வைத்து திருமண காலத்தை அறிய முயும். இதனை தசா புத்தி மூலம் அறியலாம்.
மன ஒற்றுமை மற்றும் சாதக பாதகங்கள் பற்றி அறிய நட்சத்திர பொருத்தம் மற்றும் ஜாதகப் பொருத்தம் இரண்டும் காண வேண்டியது அவசியம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025