Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
இந்த வாழ்க்கைக்கு ஆன்மிகம் தேவையா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்த வாழ்க்கைக்கு ஆன்மிகம் தேவையா?

Posted DateJuly 5, 2024

ஆன்மீகம் என்றால் என்ன ?

நான் எனது என்னும் எண்ணம் ஒழிப்பது ஆன்மிகம். இந்த நிலையை எப்படி நாம் அடைவது? இந்த உலகில் உள்ள பொருட்களின் மீதான பற்று தான் நம்மை துன்பப்பட வைக்கிறது. இந்த பற்றினைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல. நாம் இந்த உலகில் வாழும் நாள் வரை நமக்கு லௌகீக இன்பங்களும் அவசியம் தான். என்றாலும் அதனால் ஏற்படும் துன்பங்களைத் தவிர்க்க நமக்கு ஆன்மீக ஈடுபாடும் அவசியம் தேவைப் படுகிறது எனலாம். ஆன்மீகம் என்பது இறைவழிபாடு மற்றும் இறை நம்பிக்கை காரணமாக நாம் நெற்றியில் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்து கொள்வதோ, ஆலயம் சென்று வழிபடுவதோ அல்லது துறவறம் பூனுவதோ மட்டும் அல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒழுக்க நெறிகளுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதும், பிறரை மதிப்பதும், நல்ல எண்ணங்களுடன் வாழ்வதும் இப்படி ஓரு தனிப்பட்ட மனிதர் வாழ்வில் தன்னை நெறிப்படுத்தி  வாழ்வதும்  ஒரு வகை ஆன்மீகம்  என்று கூறலாம். நமது வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ளும் வகையில் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வது.  இதற்கு உறு துணையாக இருக்க வேண்டித் தான் நாம் இறைவைனின் துணையை நாடுகிறோம்.

ஆன்மீக உணர்வு மனதில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்:

ஆன்மீகம் என்பது ஒரு வகையில் தூய்மையான வைராக்கியமான வாழ்க்கை நிலை  என்று கூறலாம். இன்றைய நவீன உலகில் ஆன்மிகம் நமக்கு துணை நிற்குமா என்றால் நிச்சம் நிற்கும் என்று கூறலாம். விஞ்ஞான வளர்ச்சி பல கண்டாலும் அவற்றையும் நாம் அரவணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் ஆன்மிகம் என்பது  விஞ்ஞான வளர்ச்சியை ஒதுக்க வேண்டும் என்று பொருள் அல்ல.அவற்றை அனுபவிப்பதுடன்  நல்ல பண்புகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதம் கூறும் சாஸ்திரங்களைத் தான் நமது முன்னோர்கள் நம்மை பின்பற்ற கூறிச் சென்றுள்ளார்கள். கால நேரம் பார்த்து நம் கடமைகளை செய்ய வேண்டும் என்பதும் அதில் ஒன்று. நல்ல நேரம் பார்த்து இறைவனை வேண்டி செய்யும் காரியங்கள் வெற்றியை அளிக்கும் என்பதை அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மனம், வாக்கு செயல் இவை அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். மூத்தோர் சொல் மதிக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், அளவுக்கு மீறி ஆசைப்படாமல் இருத்தல், பிறரைக் குறை கூறாமல் இருத்தல் போன்ற குணங்களை பின்பற்றி நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்வது கூட ஒரு வகை ஆன்மிகம் தான். இந்த குணங்கள் யாவும் நம்மை அரணாக காத்து நிற்கும். லௌகீக வாழ்வின் துன்பங்களில் இருந்து நம்மைக் காக்கும்.

ஆன்மீகமும் அறிவியலும் :

அறிவியல் விதிகளை நம்பும் இன்றைய தலை முறையினர் நமது  ஆன்மீக விதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை என்றே கூற வேண்டும். ஆலயம் செல்வதை நமது முன்னோர்கள் வலியுறுத்தி இருந்தார்கள். இளம் வயதில் இருந்தே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். எதற்கு ஆலயம் செல்ல வேண்டும்?கோயில்களில் மூல விக்ரகம் அமைந்துள்ள கருவறை, ஒலி அலைகளை வெளிப்படுத்துகின்றன. மூல விக்கிரகத்திற்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள், மந்திர உச்சரிப்புகள் விக்ரகத்தில் பட்டு
அதிர்வடைகின்றன. இது பக்தர்களின் உடல் மற்றும் , உள்ளத்தில் அமைதியை தருகிறது. மேலும்  அபிஷேகத்தின் போது எதிர்
மின்னோட்டமுடைய காற்றும், ஈரப்பதமுள்ள காற்றும் வெளிவருகின்றன. இது இன்றைய விஞ்ஞானம் கூறும் உயிர்வாழ தேவைப்படும் மின்னலைகளாகும். கோவிலில் து’ளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இதில் அதிக மின்னூட்டம் மற்றும் பலவித நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.  மாவிலையும்  வேப்பிலையும் இதே தன்மையைக் கொண்டவை தான். அது போல எலுமிச்சையும். மாவிலை தோரணம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கின்றது. நீரினை துாய்மைப்படுத்துகின்றது. அரச மரக் காற்று பெண்களின் கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்கிறது. இதனால் அந்தக் காலத்தில் அரச மரத்தை சுற்றி வரச் செய்தார்கள். இது போல எத்தனையோ கூறிச் சென்றுள்ளார்கள். இவை எல்லாம் நமது உடல் மற்றும் மனதை தூய்மைப் படுத்துபவை. எனவே இந்த நவீன யுகத்திலும் நமக்கு ஆன்மிகம் தேவை தான் என்பதை இவை வலியுறுத்துகினறன.