Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் பாடல் வரிகள் | sri ganesha pancharatnam lyrics in tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்

Posted DateMay 13, 2024

கணேசன் முழுமுதற்கடவுளாக போற்றப்படுகிறார். இவருக்கு விநாயகர், தும்பிக்கையான், கணபதி என்ற பல பெயர்கள் உண்டு. நாம் எந்தவொரு செயலை செய்ய ஆரம்பித்தாலும் கணேசனை வணங்கி விட்டுத் தான் ஆரம்பிப்பது வழக்கம். நமது செயல்கள் மற்றும் முயற்சிகளில் வரும் தடைகளை நீக்கும் வல்லமை விநாயகருக்கு உண்டு. வினாயகரை போற்றிப் பாடப் பல பாடல்கள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் கணேச பஞ்சரத்னம். இந்த பாடல் ஆதிசங்கரர் அவர்கள் அருளியது. தினமும் காலையில் எழுந்து நன்னீராடி, விளக்கு ஏற்றி, இந்த பாடலை பாராயணம் செய்வதன் மூலம் கணபதியின் அருளை நாம் பெற இயலும். நமது செயல்களில் வெற்றி கிட்டும். நோயின்றி வாழ இயலும். வாழ்வில் வரும் சிக்கல்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். அந்தப் பாடலை கீழ் வரும் பதிவில் காணலாம் வாருங்கள்.

ஸ்ரீ கணேச பஞ்சரதனம் பாடல் வரிகள்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம். -1

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம். – 2

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்.  – 3

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம். – 4

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்.- 5

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.- 6