இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் முன்னேற்றம் காண நம்பிக்கைக்கு உரிய மாதமாக இருக்கிறது. நீங்கள் உத்தியோகத்தில் முன்னேற உங்கள் அலுவலக நிர்வாகம் ஆதரவாக இருக்கும். உங்கள் பணி மற்றும் செயல்திறன் அங்கீகாரம் பெறும். மேலதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கவனமாக செயல்பட வேண்டும். தொழில் செய்பவர்கள் தங்கள் முதலீடுகளில் இருந்து லாபம் பெற சிறிது பொறுமை காக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு இது சாதகமான மாதம் என்றாலும் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது நல்லது. காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் பரஸ்பரம் தங்களுக்குள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளலாம். மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதித்தல் கூடாது. இந்த மாதம் உங்களுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வெளி உணவைத் தவிர்ப்பது அவசியம். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சிறு கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் காதலர்கள் தங்கள் பேச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். என்றாலும் தங்கள் உறவில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதித்தல் கூடாது. அது உங்கள் உறவை பாதிக்கலாம். வீட்டில் இருக்கும் வயது மூத்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள். பணத்தை சேமிக்கவும் அதன் மூலம் லாபம் காணவும் இந்த மாதம் ஏதுவாக உள்ளது. பங்கு சந்தை நிலவரம் குறித்து நன்கு ஆராய்ந்து செயல்படுவதன் மூலம் லாபம் காணலாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்கள் பொருளாதார சூழ்நிலையை மேலும் மேம்படுத்தும். அவர்களின் வழிகாட்டுதல் நீங்கள் சிறந்த முடிவுகளை எடுக்கவும் செல்வத்தை பெருக்கவும் உதவிகரமாக இருக்கும். இவர்களுடனான கூட்டு அணுகுமுறை உங்கள் பொருளாதார நிலையை வளப்படுத்தும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரும். என்றாலும் இறுதியில் நீங்கள் பிரகாசிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேறவும் வெற்றி பெறவும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக நிர்வாகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மேலதிகாரிகள் உங்கள் புதுமையான கருத்துகளை அங்கீகரிப்பார்கள். இந்த அங்கீகாரம் உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். என்றாலும் மேலதிகாரிகளுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். கலந்துரையாடலின் போது யோசித்து பேச வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்கள் தங்கள் உத்தியோகத்தில் சில சிரமங்களை சந்திக்கலாம். பதவி உயர்வு பெற கால தாமதம் ஆகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரலாம். எனவே உங்கள் முன்னேற்றத்தில் சிறிது தாமதம் இருக்கலாம். வழக்கறிஞர்கள் வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெறலாம். ஊடகம் மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டும் பதவி உயர்வும் பெறலாம். மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகள் மூலம் மதிப்பு மரியாதை பெறலாம். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் தங்கள் ஆய்வறிக்கை வெற்றிகரமாக அங்கீகாரம் பெறக் காணலாம்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சூரியன் பூஜை
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் துறையில் வெற்றி பெறவும் லாபம் மற்றும் ஆதாயம் காணவும் பொறுமை காக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் முதலீடுகள் என்றாலும் அல்லது புதிய வாய்ப்புகளாக இருந்தாலும் வளர்ச்சி காண சிறிது காலம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலம் அதற்கு சாதகமாக இருப்பதால் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் முனைவோர் புதிய தொழிலை குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. அவ்வாறு செய்வது, ஆபத்தை குறைப்பதை மட்டுமல்லாமல் சந்தை மதிப்பீட்டை அறிந்து நடந்து கொள்ளவும் ஏதுவாகிறது. இந்த உத்தியை,முறையை பின்பற்றுவதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள முடியும்.
இந்த மாதம் நீங்கள் சில சிறு உடல் உபாதைகளை சந்திக்க நேரலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும். வீட்டில் சமைத்த உணவுகளையே உண்பது சிறந்தது. உங்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நோய் வராமல் காத்துக் கொள்ளலாம் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
இளநிலைக் கல்லூரி மாணவர்கள் இந்த முறை சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றிகளை அனுபவிக்கலாம். வெளிநாடு சென்று மேற்கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தகுந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் இந்த மாதம் தங்கள் ஆய்வறிக்கைக்கான ஒப்புதல் பெற பொறுமை காக்க வேண்டும்.என்றாலும் சிறிய தாமதத்துடன் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை
சுப தேதிகள் : 1,3,6,7,8,9,10,11,14,17,18,21,24,26,28
அசுப தேதிகள் : 2,4,5,12,13,15,16,19,20,22,23,25,27
September 19, 2025
September 17, 2025
September 15, 2025