Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
எதிரிகளை விரட்ட சக்தி வாய்ந்த தூபம் | Ethirikalai Viratta dheepam
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

எதிரிகளை விரட்டும் சக்தி வாய்ந்த தூபம்

Posted DateFebruary 2, 2024

இந்த நவீன யுகத்தில் பிறரை நம்புவதோ பிறரிடம் பழகுவதோ கடினமாக உள்ளது என்று கூறலாம். உறவுகளே நமக்கு எதிரிகளாக செயல்படும் நிலை இருக்கக் காண்கிறோம் சில சமயங்களில் நமது எண்ணங்களே நமக்கு எதிராக இருப்பதும் உண்டு. அந்த வகையில் அக எதரி மற்றும் புற எதிரி என இரண்டு வகை எதிரிகளையும் நாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது.

நமது அக எதிரிகளாக இருப்பது கோபம், ஈகோ, சந்தேகம், ஆசை எனலாம். இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு யோகா தியானம் போன்ற வழிகள் உள்ளன. நமக்குள் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டால் படிப்படியாக அதில் இருந்து நாம் வெளிவரலாம்.

நமது புற எதிரிகள் நமக்கு தெரிந்தே இருப்பார்கள். சிலர் எதிரி என்று தெரியாத வகையில் இருப்பார்கள். இவர்கள் கூட இருந்தே குழி பறிப்பவர்கள் என்று கூறலாம். நமது முன்னேற்றம் பிடிக்காமல் நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள் இருப்பார்கள். சில சமயம் காரணமே இல்லாமல் சிலர் நம்மை எதிரிகளாக நினைப்பார்கள்.. இதில் கண்ணுக்குத் தெரியாத எதிரி எனில் இவர்கள் இதை செய்வார்கள் என்று நாம் நினைத்துக் கூட பார்க்க மாட்டோம் அப்படிப்பட்டவர்கள் தான் நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் தடையாக இருப்பார்கள். சிலர் எதிரிகளாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களின் பார்வை பட்டாலே நமது வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும். இதனை திருஷ்டி தோஷம் என்று கூறுவார்கள்.

இது போன்ற திருஷ்டி தோஷங்கள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்பொழுது தான் வாழ்வில் நம்மால் தடைகள் ஏதும் இன்றி முன்னேற இயலும். நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக வழியில் சென்று நம்மை காத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு பாதுகாப்பு கவமாக விளங்கும் தூபம் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.

இந்தத் தூபம் போட நமக்கு தேவையான முக்கியமான பொருள் எனில் அது பேய்மிரட்டி இலை. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அடுத்து மருதாணி இலை, மருதாணி விதை அல்லது மருதாணி பூ இதில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் வெள்ளை குங்கிலியம், பால் சாம்பிராணி வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த பொருட்களை எல்லாம் தூள் செய்து ஒன்றாக ஒரே டப்பாவில் போட்டு எடுத்து வைத்து விடுங்கள். இத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து விடுங்கள். சாம்பிராணி தூபம் போடுவதற்கான தூள் தயாராகி விட்டது. இந்த தூபத்தை வெள்ளிக்கிழமையில் போடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த தூபத்தை மாலையில் தான் போட வேண்டும்.  சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இந்த தூபத்தை உங்கள் வீட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் காட்டுங்கள்  

இந்த தூபம் போடுவதன் மூலம் உங்கள் வீட்டில் திருஷ்டி தோஷம் தாக்காது. எதிரிகளின் தொல்லை இருக்காது. இந்த தூபத்தின் புகையானது உங்கள் வீட்டில் காணப்படும் எதிர்மறை ஆற்றலை அகற்றும். நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். தீய சக்திகளை விரட்டி விடும். தினமும் கூட இந்த தூபததை நீங்கள் வீட்டில் போடலாம். உங்கள் எதிரிகளிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பு பெறலாம்.