Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
நல்ல வேலை கிடைக்க துர்கை வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நல்ல வேலை கிடைக்க துர்கை வழிபாடு

Posted DateSeptember 5, 2024

 நம் அனைவருக்கும் வேலை என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது. கிடைக்கும் வேலை நல்ல வேலையாக இருக்க வேண்டும். அது நமது மனதிற்கு பிடித்த வேலையாக இருக்க வேண்டும். அந்த வேலையின் மூலம் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். தற்போதைய காலத்தில் ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் வேலை கிடைப்பதில் அதிக போட்டியும் காணப்படுகிறது.

வேலை என்றால் அது நல்ல வேலையாக இருக்க வேண்டும். நாம் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். நமக்கு அளிக்கப்படும் வேலையை நன்கு செய்து அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தேவைப்படும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நாம் விரும்பும் வேலை கிடைத்தாலும் அதில் முழு மனதுடன் செயல்பட வேண்டும். நம் கவனம் சிதறாமல் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும்.

ஒரு நல்ல அரசாங்க வேலை கிடைக்க, அதற்குரிய தேர்வுகளை நாம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். வேலைக்கான தேர்வில் நடத்தப்படும் நேர்காணலில் நாம் சிறந்த முறையில் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் வேலை நமக்கு நிரந்தரமானதாக இருக்க வேண்டும். நமது இவ்வளவு உழைப்பு மற்றும் முயற்சியுடன் நமக்கு இறை அருளும் இந்த பிரபஞ்சமும் துணை நிற்க வேண்டும். அவ்வாறு இறை அருள் கிடைக்க பிரபஞ்சம் துணை நிற்க  ஒரு நல்ல வேலை கிடைக்க நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில்  காண்போம்.

எந்தவொரு பரிகாரம் செய்வதாக இருந்தாலும் முதலில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆஞ்சநேயரை உள்ளன்போடு வணங்கினால் நினைத்த காரியம் கை கூடும். சனிக்கிழமை அன்று சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வணங்கலாம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்றால்  சூரிய பகவானின் அருள் வேண்டும். இப்போழுது பரிகாரம் பற்றிக் காண்போம்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று சூரிய நமஸ்காரம் செய்து பின்  “ஸ்ரீ சிவ சூரிய நாராயணாய ஸ்வாமினே நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறி பூமியில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றினாலே உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு கிட்டும். அந்த தண்ணீரில் சிவப்பு நிற ரோஜா இதழ்களை போட்டுக் கொள்ளுங்கள்.  இந்த தண்ணீரை மண் நிறைந்த பூமியில் அல்லது செடியில் ஊற்றலாம்.

அடுத்த பரிகாரமாக ஒரு சிறிய பித்தளை அல்லது வெள்ளி தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது குத்து விளக்கு வைத்துக் கொள்ளுங்கள். தட்டு மற்றும் குத்துவிளக்கை குங்குமம் தடவி அலங்கரித்துக் கொள்ளுங்கள். குத்து விளக்கின் ஐந்து முகத்திலும் திரி போட்டுக் கொள்ளுங்கள். ஐந்து முக தீபத்தையும் ஏற்றி அந்த குத்து விளக்கை துர்கையாக பாவித்து அதற்கு மஞ்சள், குங்குமம் சாற்றுங்கள். அரளிப் பூவால் அர்ச்சனை செய்யுங்கள். தூப தீபம் காட்டுங்கள். ஐந்து வாழைப்பழத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு “அயிகிரி நந்தினி” என்ற மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை பாடுங்கள் அல்லது பாட்டை கேளுங்கள். பிறகு ஆரத்தி எடுங்கள். பிறகு ஐந்து நிமிடம் கண்களை மூடி உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம். இந்த பூஜையை தொடர்ந்து  ஒன்பது வாரங்கள் செய்யுங்கள். அதற்குள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். நடுவிலேயே வேலை கிடைத்து விட்டாலும் தொடர்ந்து ஒன்பது வாரம் இந்தப் பூஜையை மேற்கொள்ளுங்கள். வீட்டு விலக்கு போன்ற காரணத்தால் நடுவில் செய்ய இயலாவிட்டாலும் அடுத்து வரும் வாரங்களில் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.