Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2024 | December Matha Mithunam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2024 | December Matha Mithunam Rasi Palan 2024

Posted DateNovember 25, 2024

மிதுனம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2024

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் இந்த மாதம் சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள். காதலர்களுக்கு ஒன்றாக இணைந்து புதிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற நினைக்கும் மிதுன ராசிக்காரர்கள் சில தடைகளுக்குப் பிறகு இறுதியில் வெற்றி பெறுவார்கள். தொழிலில் மாற்றம் காணவும் பெரிய வெற்றியை அடையவும் பொறுமையாக இருக்க வேண்டும். தொழில் தொடங்கும் போது, ​​மிதுன ராசிக்காரர்கள் குறைந்த அளவிலான முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது அல்லது வெளியில் இருந்து ஆலோசனை பெறுவது நல்லதல்ல. சில வாக்குவாதங்களுக்குப் பிறகு, மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையைப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகள் வெளியிடங்களுக்கு சென்று  ஒன்றாக தங்கள் நேரத்தை அனுபவிக்கலாம்.  இளங்கலை கல்வியில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற சிறந்த நேரம். ஆராய்ச்சிக் கல்வியில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள்  ஆய்வறிக்கைக்ககான அங்கீகாரம் பெற இந்த மாதம்  நல்ல நேரம் ஆகும்.

குடும்ப உறவு

காதலர்கள் தங்கள் உறவில் சிறு இடையூறுகளை சந்திக்க நேரலாம்.  எனவே பொறுமை காக்க வேண்டியது அவசியம். உறவு சார்ந்த விஷயங்களுக்காக செலவு செய்யும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் உறவில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உங்கள் துணையுடன் வெளிநாடு செல்லும் எண்ணத்தை சற்று தள்ளிப் போடுங்கள். கணவன் மனைவி ஒன்றாக இணைந்து வெளியிடங்களுக்குச் சென்று மகிழலாம். வயதானவர்களுடன் கலந்து உறவாடுவதில் சவால்கள் காணப்படும்.  எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளுடனான உறவும் சற்று கடினமாக இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

 நிதிநிலை

மிதுன ராசியினர் இந்த மாதம் தங்கள் நிதித் திட்டமிடலில் எச்சரிக்கையையும் விடாமுயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு கொள்முதல் செய்வதற்கும் முன் விரிவான பட்ஜெட்டை உருவாக்க நேரம் ஒதுக்குவது அவசியம், ஒவ்வொரு செலவும் அவசியமானது மற்றும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. வீண்  செலவுகள் நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே பணம் எதற்கு  ஒதுக்கப்படுகிறது என்பதை கவனமாகக் கருத்தில் கொள்வது முக்கியம். இந்த காலகட்டம் நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் முதலீடுகளில் கவனம் செலுத்துவதற்கான ஒரு சிறந்த தருணத்தை அளிக்கிறது. புத்திசாலித்தனமான முதலீட்டு தேர்வுகளை நோக்கி வளங்களை செலுத்துவதன் மூலம், நிதி நிலைமையை கணிசமாக மேம்படுத்த முடியும். கூடுதலாக, குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு இந்த பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் ஊக்கமும் ஆலோசனையும் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க உதவும், இதன் மூலம் ஒட்டுமொத்த நிதி நிலையில்  சாதகமான வளர்ச்சியைக் காணலாம். உங்கள் நிதிநிலையை மேம்படுத்த உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட  சந்திரன் ஹோமம்

உத்தியோகம்

இந்த மாதம் உத்தியோக ரீதியாக முன்னேற்றம் காணலாம். உத்தியோக  மாற்றத்தை எதிர்பார்க்கும் மிதுன ராசிக்காரர்கள் நல்ல நிறுவனங்களில் வாய்ப்பு பெற இன்னும் சற்று காலம் பொறுமை காக்க வேண்டும். இந்த மாதம் உத்தியோகத்தின் மூலம் நல்ல வருமானம் பெறுவீர்கள். உங்கள் சக பணியாளர்களும் நிர்வாகமும் உங்கள் வளர்ச்சியை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளிலும் பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். மருத்துவத்  துறையில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்கள் சில பின்னடைவைச் சந்தித்த பிறகு கடுமையான வளர்ச்சியைக் காணலாம்.  IT/ITES துறையில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள்  கடின உழைப்பிறகான நற்பலனைப் பெறலாம். IT/ITES தொழில்களில் உள்ளவர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து நல்ல மற்றும் மதிப்புமிக்க ஆதரவைப் பெறலாம்.   உற்பத்தித் துறையில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்புக்கான வரவுகளைப் பெறுவதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். சட்டத் துறையில்  பணிபுரியும் மிதுன ராசியினர் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு வர ஒரு முன்னேற்றமான நேரமாக இந்த மாதம்  உள்ளது.  மீடியா மற்றும் திரைப்படத் துறைகளில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கான சிறந்த நேரம்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

 தொழில்

தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் குறைந்த தொகையில் மட்டுமே தொழில் தொடங்கலாம். நீங்கள் அதிக முதலீடு இல்லாமல் லாபம் பெரும் வகையில் உங்கள் தொழிலை நடத்தலாம். தொழில் சார்ந்த முயற்சிகளை நீங்கள் தனியாக சுதந்திரமாக மேற்கொள்வது நல்லது. மேலும் தொழில் சார்ந்த உங்கள் `செயல்பாடுகளில் மூன்றாம் தரப்பினரை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். இந்த மாதம் கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிட்டாது. தங்கள் சொந்த வியாபாரத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம்,  முழு கட்டுப்பாட்டையும் பராமரிக்க முடியும். தொழிலில் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் திருப்தியும் வெற்றியும் பெறலாம்.

ஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கலாம்.இது பல்வேறு வழிகளில் வெளிப்படலாம். குறிப்பாக அஜீரணக் கோளாறுகள் இருக்கலாம்.  சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசௌகரியம் அல்லது செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுக்கு வீக்கம் அல்லது சங்கடத்தை ஏற்படுத்தலாம். இந்த சிக்கல்களைக் குறைக்க உண்ணும் உணவில் கவனம் தேவை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவை உண்பது பாதுகாப்பானதாக இருக்கும். சுத்தமான இடத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். மசாலாப் பொருட்கள் பெரும்பாலும் செரிமான மண்டலத்தை எரிச்சலடையச் செய்து, அசௌகரியத்திற்கு வழிவகுக்கும் என்பதால், காரமற்ற உணவுகளை அவர்கள் கடைப்பிடிப்பது சிறந்தது. மிதுன ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் ஹோமம்

 மாணவர்கள்

பள்ளிக்  கல்வி பயிலும்  மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும்  கல்வி சார்ந்த விஷயங்களில் வெற்றி பெற நிறைய வாய்ப்பு  உள்ளது. உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.  உங்கள் வகுப்பு தோழர்கள் மற்றும் உங்கள் ஆசிரியர்கள் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். முதுகலை மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் சிறிது தாமதங்களை சந்தித்தாலும், வெற்றி இறுதியாக அவர்களுடையது. ஆராய்ச்சி துறை மாணவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க சிறிது காலம் எடுக்கலாம்.  எனவே,  பொறுமையாக இருக்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

 சுப தேதிகள் :  3,4, 5,6,8,9,10,11,12,14 , 19,24,23,24,25,26,27,29,31 

அசுப தேதிகள் :  1,2,7,13,15,16,17 ,18,20,21,22,28,30