மந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒலி அல்லது சொல், அதை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி, ஆத்ம பலத்தை அதிகரிக்க உதவுகிறது. இது சமஸ்கிருத வார்த்தையான “மந்த்ரா” என்பதிலிருந்து வந்தது, இதில் “மன்” என்றால் மனம், “த்ரா” என்றால் வழி அல்லது கருவி என்று பொருள். இறைவனை அடைவதற்கு உரிய வழிகளுள் ஒன்றாக மந்திரம் விளங்குகிறது. தியானத்தை மேம்படுத்துவதற்கும், ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதற்கும் மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உரு ஏற திரு ஏறும்” என்பார்கள். ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருந்தால் அந்த மந்திரத்திற்கு தெய்வீக சக்தி உண்டாகும். இந்த தெய்வீக சக்தியானது அனைத்து விதமான நன்மைகளையும் வழங்கக் கூடியதாக இருக்கும். நாம் என்ன நினைத்து, எந்த நோக்கத்திற்காக ஒரு மந்திரத்தை உடல் தூய்மை மற்றும் உள்ள தூய்மையுடன், உண்மையான பக்தி சிரத்தையுடன், மனதை ஒரு நிலைப்படுத்தி உச்சரித்து வருகிறோமோ அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.
ஆன்மீக அன்பர்கள் வாழ்க்கையில் இறை வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாகும். இறைவழிபாட்டில் பூஜை, அர்ச்சனை அபிஷேகம், ஆராதனை போன்றவை இருக்கும். இவை அனைத்திலும் மந்திரங்கள் இடம் பெறும். மந்திரங்கள் வலிமை வாய்ந்தவை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகை மந்திரம் உண்டு. அதே போல நமது எண்ணங்கள் நிறைவேற ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் உண்டு. எல்லா வகையான மந்திரங்களையும் எல்லாராலும் உச்சரிக்க இயலாது. சிலவற்றை வேதம் அறிந்தவர்கள் மட்டுமே உச்சரிக்க இயலும். என்றாலும் பல எளிய மந்திரங்களை நமக்கு முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளார்கள். அவற்றை நம்மால் எளிதாகக் கூற இயலும். மேலும் அவை நமது வாழ்வில் பல நல்ல பலன்களை அளிக்கும்.
நாளைய தினம் 29.04.2025 சித்திரை மாத கிருத்திகை நட்சத்திர நாள் ஆகும். மேலும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் முருகருக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் காலையில் எழுந்து நீராடி அன்றாட பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். நாளைய தினம் நீங்கள் மேற்கொள்ளும் முருகர் வழிபாடு உங்கள் வாழ்வில் வளமும் நலமும் சேர்க்கும். குடும்ப கஷ்டம் தீர, நோய்நொடி நீங்க, விரைவில் திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, நல்ல வேலை கிடைக்க, வாழ்வில் மன நிம்மதியை அடைய, இப்படி பல விதமான நன்மைகளுக்காகவும் இந்த கிருத்திகை நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யலாம். அதற்குரிய எளிய மந்திரம் ஒன்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் போதித்ததாகவும், அகத்தியர் முருகனை வழிபட்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் அகத்தியர் அருளிய இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம். இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் ஆறு முறையாவது கூறுவது வேண்டும். முருகனின் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். உடல் தூய்மையோடும் மனத் தூய்மையோடும் இந்த மந்திரத்தை நீங்கள் ஜெபித்தால் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் உருவாகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்கள் செயல்களில் நீங்கள் எளிதாக வெற்றி காண இயலும் என்பது ஐதீகம்.
ஓம் முருகா குரு முருகா
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே
ஷண்முகனே சடாக்ஷரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா
நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை நாளை ஜெபித்து முருகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றிடுங்கள்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025