மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் நித்ய கர்மானுஷ்டங்களை முறையாக செய்ய வேண்டியது அவசியம்.ஆனால் இன்றைய அவசர உலகில் நாம் பணத்தின் பின்னே ஓடிக் கொண்டிருப்பதால் நம்மால் முறையாக சாஸ்திர விதி முறைகளை பின்பற்ற முடிவதில்லை என்பதே உண்மை. நமது அன்றாட வாழ்க்கை முறையை நாம் நிம்மதியாக வாழ்வதில் நமது முயற்சி தேவை என்றாலும் இறை அருளும் முன்னோர்கள் ஆசியும் நமக்கு அவசியம் தேவை.
இறை வழிபாட்டை தவறினாலும் முன்னோர் வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அவர்களை வழிபடுவதன் மூலம் நாம் சாபங்களில இருந்து குறிப்பாக பித்ரு சாபங்களில் இருந்து விடுபட முடியும். நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு நமது கர்ம வினைகள் காரணம் என்றாலும் பித்ருக்களின் பங்கும் அதில் இருக்கும். எனவே தான் நாம் தவறாமல் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
முன்னோர் வழிபாட்டை அமாவசை தினம் அன்று மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் 27/04/2025 அமாவாசை தினம். நாளைய அமாவாசையின் சிறப்பு யாதெனில் இது தமிழ் மாதப் பிறப்பின் முதல் அமாவாசை ஆகும். அதாவது சித்திரை மாதத்தின் அமாவாசை ஆகும். இந்த அமாவாசையை தவற விடாதீர்கள். நாளை முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து திதி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு படையல் வைக்க வேண்டும். நாளைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதோடு மட்டும் நில்லாமல் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.
சூரிய சந்திர வழிபாடு
கூடுதலாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஞாயிறு என்பது சூரியனைக் குறிக்கும். நாளைய தினம் சூரியனுக்கு உரிய தினம் ஆகும். எனவே காலையில் எழுந்து சூரியனுக்கு நீரும் அட்சதையும் விட வேண்டும். சிகப்பு மலர்களை சமர்பிக்க வேண்டும்.
அமாவாசை என்பது, சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழும் ஒரு நிகழ்வு. இந்த நாளில், பூமிக்கு எதிரே உள்ள சந்திரனின் முற்பக்கம் சூரிய ஒளியால் மறைக்கப்படுவதால், அது இருண்டதாகத் தெரிகிறது. அமாவாசையில், சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அமாவாசை என்பது சந்திர மாதத்தின் முதல் நாளாகும். எனவே அன்றைய தினம் சந்திரனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முன்னோர்களை வணங்குவதோடு நில்லாமல் இயற்கையில் ஒளி தரும் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனை நாம் அன்றைய தினம் வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு சென்று நவக்கிரக சூரியன் மற்றும் சந்திரனை நாளை வழிபடுவது சிறப்பு. நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் அரச்சனை மேற்கொள்ளலாம்.
சித்திரை அமாவாசை வழிபாட்டை மேற்கொண்டு இறை அருளும் முன்னோர்களின் ஆசிகளையும் பெற்று வாழ்வில் நலமும் வளுமும் பெறுங்கள்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025