ஒருவர் தனது செயலைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது அல்லது அதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அல்லது அதனை செயல்படுத்தும் போது இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் சகுனங்கள் அச்செயலின் வெற்றி தோல்வியை உணர்த்தும். மனிதன் தன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினை எனப்படும் புண்ணிய பாவ செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் அவனது செயல்களின் பலனை உணர்த்துவதே சகுனங்கள் ஆகும். சகுனம் என்பது செயலின் நன்மை தீமையை மட்டும் சுட்டிக் காட்டும் தன்மை படைத்தன. அச்செயலை வெற்றியாகவோ தோல்வியாகவோ ஆக்கும் தன்மை சகுனங்களுக்கு இல்லை.
நீங்கள் காலையில் கண் விழித்ததும் சிலந்தி மேலே ஏறுவதைப் பார்த்தால் மிகவும் நல்லதும். நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.. வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டம். அதாவது, உங்கள் பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது.
வௌவால் பறக்கும் போது உங்கள் மேல் பட்டால் உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம். அதனால் உங்களுக்கு கவலை ஏற்படலாம்.
வௌவால் உங்கள் வீட்டுக்குள் கூடு கட்டினால் நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் தேங்காயை பார்த்தால் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் பணம் உங்களை தேடி வருகிறது என்பதைக் குறிக்கும் சகுனமாகும்.
எருது ஒன்று உங்கள் வீட்டு வாயில் படி அருகே நின்று கொண்டிருந்தால் உங்கள் வீட்டில் நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்று பொருள்.
உங்கள் வீட்டு புல்வெளியில் அல்லது மிக அருகாமையில் பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் அதுநல்ல சகுனம். அது பண வரவை குறிக்கும் சகுனமாகும்.
உங்கள் கனவில் பொன்னிற அல்லது வெள்ளை நிறப் பாம்பைப் பார்த்தால் அது பண வரவைக் குறிக்கும் தெளிவான அறிகுறியாகும்.
நீங்கள் போகும் வழியில் உங்கள் வாகனத்துக்கு எதிரே குரங்கு, நாய், பாம்பு அல்லது ஏதேனும் பறவை வந்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதற்கான சகுனம் அது.
எண்ணெய், திரி இருந்து காற்று வீசாத போது நீங்கள் ஏற்றி வைத்த விளக்கு அணைந்து விட்டால் அது துர் சகுனமாகும்.
நீங்கள் வெளியே செல்லும் போது தெய்வீக ஊர்வலங்களைக் கண்டால் உங்களுக்கு இறை அருள் கிட்டியுள்ளதை அது குறிக்கும்.
நீங்கள் பயணம் செய்ய வெளியே கிளம்பும் போது நாய் உங்கள் மீதி தாவி ஏற முயல்வதும் கால்களை மிதிப்பதும் கெட்ட சகுனம் ஆகும்.
நீங்கள் வெளியே கிளம்பும் போது நாய் மாமிசத்தை வாயில் கவ்விக் கொண்டு வந்தால் உங்களுக்கு செல்வம் வரப்போகிறது என்று பொருள்.
உங்கள் கனவில் பச்சைப்பசேல் என்றிருக்கும் பசுமையான காட்சிகளைக் கண்டால் அது நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போவதன் அறிகுறியாகும்.
பால், தயிர் போன்ற பால் சம்பந்தமான பொருட்களை அதிகாலையில் கண்டால், அது உங்களிடம் பணம் சேரப் போவதற்கான சகுனமாகும்.
சங்க நாதம், கோவில் மணி, சில காதுக்கினிய பஜனைகள் போன்ற இசையை காலையில் கண்விழிக்கும் போது கேட்டால், அது உங்களுக்கு பண வரவுடன் நல்லதிர்ஷ்டத்தையும் கொண்டு வரப் போகிறது என்பதற்கான சகுனமாகும்.
நீங்கள் வேலைக்கு போகும் போது அல்லது காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வழியில் கரும்பைப் பார்த்தால், நீங்கள் விரைவில் பண வரவை பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
பயணம் புறப்படும் பொது சுமங்கலிப் பெண் எதிரில் வந்தால் பணவரவு உங்களுக்கு ஏற்படும்.
பறவை உங்கள் மீதி எச்சமிட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது என்பதற்கான சகுனம் அது.
சில சமயம் நாம் ஆடைகளை திருப்பி அணிந்து விடுவோம். அந்த மாதிரி நாம் தெரியாமல் ஆடைகளை திருப்பி அணிந்து கொண்டால் நமக்கு பணம் அல்லது புத்தாடை சேரும் என்று பொருள்.
காலையில் கண் விழித்ததும் வெள்ளை வாதத்தைப் பார்த்தால் உங்களுக்கு பண வரவு ஏற்படும்.
∙
September 12, 2025
September 12, 2025
September 11, 2025