இந்த பிரபஞ்சம் முழுவதையும் காத்து ரட்சிக்கும் விஷ்ணு பகவானின் தசாவதாரம் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர் மேலும் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் ஒன்று தான் பாலாஜி என்னும் அவதாரம். இவரை வெங்கடேஸ்வரன் என்றும் அழைப்பார்கள். இது கலியுகத்தில் விஷ்ணு வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இன்றும் அவர் திருப்பதியில் குடி கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். தினமும் இவரை வழிபட பல பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர் தரிசனம் பெற பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் நாம் அறிவோம்.
கடவுள் அவதரித்த தினத்தை அவர் பெயரில் ஜெயந்தி கொண்டாடுவார்கள். திருப்பதி பாலாஜி அவதரித்த தினம் பாலாஜி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று அவர் அவதராம் செய்ததாக நூல்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அன்றைய தினம் அவரை வழிபடுவதன் மூலம் நமக்கு எல்லா நலமும் வளமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆனால் அனைவருக்கும் திருப்பதி சென்று வழிபட முடியும் என்று கூற இயலாது. நினைத்த நேரத்தில் நாம் திருப்பதி சென்று வழிபட முடியாது.
இன்று மார்கழி மாதம் 23-12 -2024 திங்கட்கிழமை பாலாஜி ஜெயந்தி. இன்று பெருமாளை வழிபட அனைத்து நலன்களும் வந்து சேரும். திருப்பதி சென்று தான் வணங்க வேண்டும் என்று இல்லை. இன்றைய தினம் உங்கள் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். கோவிலில் இரண்டு தீபங்கள் ஏற்றுங்கள். துளசி மற்றும் பூக்கள் வாங்கி பெருமாளுக்கு வழங்குங்கள். அர்ச்சனை செய்து முடித்து கோவில் தீர்த்தத்தை பிரசாதமாகப் பெறுங்கள். பெருமாள் கோவில் சடாரி சாத்துவார்கள். அதையும் மறக்காமல் சாத்திக் கொள்ளுங்கள். பிறகு கோவிலை பிரதட்சிணம் செய்யுங்கள். இருபத்தி ஏழு முறை வலம் வாருங்கள. திருப்பதி சென்றால் வாழ்வில் திருப்பம் வரும் என்பார்கள். அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார வேண்டி வந்தாலும் நல்ல திருப்பங்களை வாழ்வில் நீங்கள் காணலாம்.
அருகில் இருக்கும் கோவிலுக்கும் செல்ல இயலிவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்தை நன்கு சுத்தம் செய்து சந்தனம் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். சுத்தமான தண்ணீரை ஒரு தாமிர பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது துளசி, குங்குமப்பூ , சிறிது பச்சை கற்பூரம், கொஞ்சம் ரோஜா இதழ்களை போட்டு தீர்த்தம் தயாரித்துக் கொள்ளுங்கள். பூஜை நைவேத்தியம் முடித்த பிறகு தீர்த்தத்தை பிரசாதமாக உட்கொள்ளுங்கள். “ஓம் நமோ நாராயணா” அல்லது கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா என்று நூற்றிஎட்டு முறை நாமத்தை ஜெபியுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025