Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Dhanusu Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Dhanusu Rasi Palan 2024

Posted DateJuly 26, 2024

தனுசு ஆகஸ்ட் 2024 பொதுப்பலன்கள்:

தனுசு ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். ஆகஸ்ட் மாதத்தில் தாயின் உடல்நிலை உங்களுக்கு கவலை அளிக்கலாம்.  உங்களின் நம்பிக்கையை குலைக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சங்கடங்களை நீங்கள்  சந்திக்க நேரிடும். நீங்கள்  அதிக ஈகோ கொண்டவர்களை சந்திக்கக்கூடும், மேலும் அவர்கள் உங்களின்  கோபத்தைத் தூண்டலாம். தொழில் ரீதியாக எதிரிகளால் பிரச்சனைகள் வரலாம். இருப்பினும், மாதத்தின் இரண்டாம் பாதியில் வழிகாட்டிகள் மற்றும் குருக்களின் வழிகாட்டுதலின் மூலம் நேர்மறையான ஆற்றலை நீங்கள் பெறலாம். நண்பர்களுடன் சில தவறான புரிதல்கள் வரலாம். நீங்கள்  ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியையும் காணலாம். இந்த மாதம் தவறான வார்த்தைகளாலும், பேச்சு முறைகளாலும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படலாம்.

காதல் / குடும்ப உறவு :

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தங்கள் மனைவி மற்றும் துணையுடன் கண்ணியமாகவும் மென்மையாகவும் உரையாடுவது கடினமாக இருக்கும்.  காதல் வாழ்க்கை குழப்பங்கள்  கலந்த உணர்வுகளின் கலவையாக இருக்கும். இருப்பினும், சரியான வழிகாட்டுதல் திருமண உறவில் மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வரலாம். காதல் வாழ்க்கையில் புதிய துணையை தேடும் தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒருவரை சந்திக்கலாம். தாம்பத்திய வாழ்வில் ஈகோ மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.  இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால்  துணையிடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். உறவில் போதுமான அன்பைப் பெறுவதற்கு கிரக நிலை சாதகமாக இருக்கும் வரை பொறுமையாக இருப்பது நல்லது. நீங்கள்  உங்கள்  துணையை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். புதிய காதல் விவகாரங்கள் சில ஆரம்ப தவறான புரிதல்களுக்குப் பிறகு சுமூகமாக முடியும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

நிதிநிலை :

தனுசு ராசிக்காரர்கள் கடன்களைத் தீர்ப்பதிலும், எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாக்குவதிலும் முதன்மையான கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஆகஸ்ட் மாதம் குறிப்பாக அதிர்ஷ்டம் மற்றும் ஊகங்கள் மூலம் அதிக அளவு பணத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயங்களை உணர முடியும். இந்த மாதம் பங்குதாரர்கள்  ஆதரவாக இருக்கலாம்.  எதிர்பாராத வெற்றிகள் அல்லது திடீர் வெற்றிகள் மூலம் ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீங்கள்  கடன்களை வாங்க வேண்டியிருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு மறைவான ஆதாரங்கள் அல்லது ரகசிய ஆதாரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பங்குதாரருக்கான செலவுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமாகச் செய்யப்படலாம். வருமான ஓட்டம் சராசரியை விட அதிகமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமற்ற சூழ்நிலைகள் காரணமாக அதிக அளவு செலவுகள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட  : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் கடினமாக இருக்கலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் மூலம் சில  ஏமாற்றங்களை சந்திக்கலாம். ஒட்டுமொத்த வருமான ஓட்டம் தடைபடும்.  பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். நீங்கள் சாதுரியமாகச் செயல்பட தவறலாம். மற்றும் தவறான தகவல்தொடர்பு பணியிடத்தில்  சிக்கலில் சிக்க வைக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் காணப்படும். அதே வேளையில் மாதத்தின் முதல் பாதியில் மேலதிகாரிகளிடமிருந்து சங்கடமான தருணங்கள் ஏற்படலாம். தொழில் ரீதியான கடமைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற காலமாகும்.  இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைப்பது கடினமாக இருக்கும். இது தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பின்னடைவைக் குறிக்கலாம். இம்மாதத்தின் இறுதி வாரம் வரை சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் துறையில் உள்ளவர்கள் தகவல் பரிமாற்றத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் வாக்குவாதங்கள் மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் வெற்றியை அனுபவிப்பார்கள்.

தொழில் :

தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் வியாபாரத்தில் வளர்ச்சியில் தேக்க நிலையைக் காண்பார்கள். விற்பனையின் அளவை மேம்படுத்துவதற்காக, வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப சந்தைப்படுத்தல் நுட்பத்தை சீர்படுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். இது  வணிக செயல்முறை மற்றும் வணிகத்தின் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப இறுதி தயாரிப்புகள் அல்லது சேவைகளை புதுமைப்படுத்துவதற்கான காலகட்டமாகும். இந்த மாதத்தின் மத்தியில் தலைமைத்துவம் மேம்படும். வணிகக் கூட்டாளிகள் / பங்குதாரர்களுடன் தவறான புரிதல்கள் இந்த மாத இறுதியில் தீர்க்கப்படும். தற்போதைக்கு விரிவாக்கத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. பணப்புழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் வியாபரத் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.  அரசாங்க விதிமுறைகள் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற  : கேது பூஜை

ஆரோக்கியம் :

தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் மனைவி மற்றும் தந்தையின் ஆரோக்கியம் சற்று கவலை அளிப்பதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவமனை மற்றும் மருந்துகளுக்கான செலவுகள் ஏற்படும். மாதத்தின் தொடக்கத்தில்  ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற இறக்கம் ஏற்படலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு கால் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட  : சூரியன் பூஜை

மாணவர்கள் :

கல்வி பயிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு கல்விக்கான இரண்டு முக்கிய கிரகங்கள் சஞ்சாரத்தில் சாதகமாக இல்லாததால் இந்த மாதம் கடினமான நேரமாக’ இருக்கும். மாணவர்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்வதிலும், பகுப்பாய்வு மனதைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். சில சமயங்களில், கணக்கீடு மற்றும் சூத்திரங்களை பயன்படுத்துவதிலும் தவறுகள் நேரலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகளில் விரும்பிய உயர்கல்வியைப் பெறுவது இந்த மாதத்தில் பலனளிக்காது.

கல்வியில் சிறந்து விளங்க  :தட்சிணாமூர்த்தி பூஜை

சுப தேதிகள் : 1, 2, 8, 9, 10, 11, 12, 20, 21, 22, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 3, 4, 5, 13, 14, 15, 16, 17, 30 & 31.