அக்னி நட்சத்திர காலத்தில், சூரியன் பரணி, கார்த்திகை, ரோகிணி ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சரிப்பார். பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் முதல் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலம் அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.
இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்கிறோம். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாள்களாகும். அக்னி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 17-ஆம் தேதி வரை இருக்கும் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார், இதனால் அதிக வெப்பம் நிலவுகிறது.
இந்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி முதல் 28 தேதி வரை இருக்கும் காலக் கட்டம் அக்னி நட்சத்திர காலக்கட்டம் ஆகும்.
∙ பரணி:
அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்தில், சூரியன் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிப்பார்.
∙ கார்த்திகை:
அக்னி நட்சத்திரத்தின் நடுப்பகுதியில், சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.
∙ ரோகிணி:
அக்னி நட்சத்திரத்தின் முடிவில், சூரியன் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சஞ்சரிப்பார்.
இந்த நட்சத்திரங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலம், அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் அதிக வெயில் காணப்படும் என்பதால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் சில வழிகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றுள் இறை வழிபாடு முக்கியமனாதாக கருதப்படுகிறது.அக்னி நட்சத்திர காலத்தில் முருகனன் மற்றும் மீனாட்சி அம்மனை வழிபடுவது சிறப்பானது. பரணி நட்சத்திரத்திற்கு உரிய தெய்வமாக தேவி துர்கையை வழிபடலாம். கிருத்திகை நட்சத்திரத்திற்கு முருகப் பெருமான் மற்றும் அக்னி தேவனையும், ரோகிணி நட்சத்திரத்திற்கு பிரம்மாவையும் வழிபடலாம்.
துர்க்கை:
துர்க்கைக்குரிய பரணி நட்சத்திரத்தில் விரதமிருந்து வழிபடலாம். ராகு கால வழிபாடு மேற்கொள்வதன் மூலம் தேவியின் அருளால் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழியைப் பெறலாம். அக்னி காற்று, நோய் பரப்பும் தன்மை கொண்டது. துர்கை அம்மன் முன் ஒரு குடத்தில் நீர் வைத்து அதில் வேப்பிலை போட்டு வைக்க வேண்டும். பூஜைகள் முடிந்த பிறகு அந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
அக்னி தேவன்:
ஏழு நாக்குகள் கொண்ட அக்னி தேவனுக்கு ஏழு தினங்கள் முறையான வழிபாடு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர காலத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அவரை வழிபடுவதன் மூலம் ஆசீர்வாதம் பெறலாம். அக்னி தேவனைப் போற்றிப் பாடல்கள் பாடி, நீர் தானம், அன்னதானம் போன்ற தான தர்மங்களைச் செய்து, அக்னி தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்..
முருகன்:
மயிலிறகை வைத்து முருகனுக்கு வழிபாடு செய்ய்லாம். முருகரின் வாகனம் மயில் என்பதால் இது மிகவும் சிறந்த வழிபாடாக கருதப் படுகிறது. இதன் மூலம் முருகப் பெருமான் மனம் மகிழ்ந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகக் கூறப்படுகிறது.
பிரம்மா:
பிரம்மனுக்குரிய ரோகிணி நட்சத்திரத்தில் பிரம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம்.
அக்னி நட்சத்திர காலத்தில் விஷ்ணு மற்றும் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. பானகம் மற்றும் நீர் மோர் படைத்து அதனை பிறருக்கு பிரசாதமாக அளித்து நீங்களும் குடிக்கலாம். நரசிம்மர் மற்றும் விஷ்ணுவின் அருள் மழை கோடை வெப்பத்தை தணிக்கும்.
மேலே கூறிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் கோடை நோய்களிலிருந்து விடுபடலாம்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025