Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
சிவனருள் பெற்றுத் தரும் ஆனி உத்திரம் (ஆனி திருமஞ்சனம்)
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிவனருள் பெற்றுத் தரும் ஆனி உத்திரம் (ஆனி திருமஞ்சனம்)

Posted DateJuly 1, 2025

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஒரு சில நட்சத்திரங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். அந்த வகையில் ஆனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரம்  சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். ஆனி உத்திரம் என்பது தமிழ் மாதமான ஆனியில் வரும் ஒரு நல்ல நாள் மற்றும் இது நடராஜப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆனி உத்திரம் 2025 தேதி ஜூலை 2ஆம் தேதி வருகிறது. இந்த விழா ஆனி திருமஞ்சனம் என்றும் அழைக்கப்படுகிறது.

நாளை  02.07.2025 ஆனி உத்திரம்

நாளைய தினம் 02.07.2025 புதன் கிழமை சிறப்பு வாய்ந்த நாளாகும். என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? நாளைய தினம் ஆனி உத்திர நட்சத்திர தினம் ஆகும். இந்த நாளை ஆனி திருமஞ்சன நாள் என்றும் கூறுவார்கள். இது நடராஜருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (சிவலிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். பொன்னம்பல நாதரான நடராஜபெருமானுக்கு ஒரு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடை பெறும். முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

தேவர்கள் செய்யும் பூஜை

மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜை; மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜை; சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை; ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை; ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம்.

ஆனித் திருமஞ்சனம்

பூ உலகில் நடராஜருக்கு மார்கழி மற்றும் ஆனி மாதத்தில் அதிகாலை பூஜை அபிஷேகம் நடைபெறும். எனவே இவை இரண்டும் சிறப்பு மிக்கவை. அதிகாலை செய்யும் பூஜைக்கு அதீத பலன் உண்டு என்பார்கள். ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான் குருந்தை மரத்தின் கீழ் மாணிக்கவாசகருக்கு காட்சி அளித்ததாகவும் அவருக்கு உபதேசம் செய்ததாகவும் நம்பப்படுகிறது. ஆனி உத்திர நாளை ஆனி திருமஞ்சனம் என்றும் கூறுவார்கள்.திருமஞ்சனம் என்றால் ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும், ஆனி திருமஞ்சன நாளில் – நடராஜர் கோயில்களில்அதிகாலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்தி வேளையில் சிவனுக்கும் அபிஷேகம் அல்லது புனித நீராடல் செய்வது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

களைகட்டும் சிவாலயங்கள்:

ஆனி உத்திரம் வந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் களைகட்டும். குறிப்பாக, நடராஜப் பெருமானுக்கு உகந்த நாளான ஆனித் திருமஞ்சனம் இருப்பதால் தில்லை நடராஜனாக சிவபெருமான் காட்சி தரும் சிதம்பரம் கோயிலில் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுவது வழக்கம்.சிதம்பரத்தில் 10 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படும்

வழிபடுவது எப்படி?

ஆனித் திருமஞ்சன தினத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு நேரில் சென்று, சிவபெருமானை வழிபடலாம். பெரும்பாலான சிவாலயங்களிலே முருகப்பெருமானுக்கும் சந்நிதி இருக்கும். இருவரையும் வணங்குவதால் பலன் உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலே சிவபெருமானின் படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு பூஜை செய்வதும் தனிச்சிறப்பு ஆகும்.

சிவனின் அருள் பெற செய்ய வேண்டியவை

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷேகங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன. அன்றைய தினம் அபிஷேகப் பொருட்களை வாங்கி அளிக்கலாம்.

அபிஷேகப் பொருட்களும் அதற்குண்டான பலன்களும்  பலன்களும்

தண்ணீர்-மன சாந்தி   பஞ்சகவ்யம்- ஆத்ம சுத்தி; நல்லெண்ணெய் – பக்தி; பச்சரிசி மாவு – கடன் பிரச்சினை நீங்கும்.  சந்தனம் – சுகம் அளிக்கும் வாழைப்பழம் – சகல வசியம பலாப்பழம் உலக வசியம் திராட்சை – பயம்  நீக்கும் திட சரீரம் சரீரம் மாதுளம் பழம் -பகை நீக்கும் தேங்காய் துருவல்- அரசு உரிமை  பெற்றுத் தரும். சர்க்கரை – பகை நீக்கும்.   பஞ்சாமிருதம்-தீர்க்க ஆயுள்   தேன்- சங்கீத வன்மை நெய்- மோட்சம் ம் பால்- ஆயுள் விருத்தி இளநீர் புத்திரப் பேறு; எலுமிச்சை சாறு – யம பயம் நீக்கும். மஞ்சள் – ராஜ வசியம் அன்னாபிஷேகம் – ஆயுள் ஆரோக்கியம் அளிக்கும்.

 பொதுவாகவே சிவபெருமான் வேண்டும் வரங்களை வேண்டிய படி அருளுபவர். அதிலும் அவருக்கு உகந்த நாளான ஆனி திருமஞ்சனம் போன்ற நாட்களில் அபிஷேகம் செய்து அவரை வேண்டுவதன் மூலம் நமது விருப்பங்களை அவர் நிறைவேற்றித் தருவார். பிரப்பஞ்ச நாயகனாக விளங்கும் சிவபெருமான் தானும் ஆடி நம்மையும் ஆட்டுவிப்பதால் ஆடல் வல்லான் என்று கூறுவார்கள்.அம்பலத்தில் அதாவது பஞ்ச சபைகளில் குடி கொண்டு இன்றும் அற்புதமான  அருளாட்சி புரிந்து வருகிறார்.  அவரை வணங்கி அவர் அருளைப் பெற்று இன்புற்று வாழுங்கள்.