Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை அம்பிகையை இப்படி வழிபடுங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை அம்பிகையை இப்படி வழிபடுங்கள்

Posted DateJuly 20, 2025

பொதுவாகவே வெள்ளிக்கிழமை பெண்களுக்கு மிகவும் வேண்டிய நாள் ஆகும். அதிலும் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனை கொண்டாடும் நாளாகும். ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகிறது. மற்ற நாட்களைக் காட்டிலும் ஆடி வெள்ளி அன்று அம்மன் அருள் எங்கும் நிறைந்து இருக்கும். நவகிரகங்களுள் சுக்கிரன் வெள்ளிக்கிழமை நாளை ஆளும் கிரகம் ஆகும். எனவே வெள்ளிக்கிழமை வழிபாடு சுக்கிரனின் காரகமான சுகமான வாழ்க்கையை அளிக்கும். வெள்ளிக்கிழமை செய்யக் கூடிய தீப வழிபாடு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

சுக்கிரன் தான் நமது சுகமான வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது. ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின்  நிலை சரியாக இருக்க வேண்டும்.சுக்கிரன் தோஷம் தரும் நிலையில் இருந்தால் வாழ்க்கையின் சுக போகம் பாதிக்கப்படும். திருமண வாழ்க்கை பாதிக்கும். இவற்றில் இருந்து மீண்டு வருவது எப்படி?சுக்கிரன் தோஷம் நீங்கவும், மகா லட்சுமியின் அருள் பெறவும் அம்பிகையின் அருளைப் பெறவும் வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு வழிபாடு செய்யலாம். இன்று மேற்கொள்ளும் வழிபாடு முப்பெரும் தேவியரின்  அருளைப் பெற்றுத் தரும்.

ஆடி வெள்ளி அம்மனை வேண்டிக் கொள்ள நாம் கேட்பதெல்லாம் கிடைக்கும். நமக்கு உற்ற துணையாக இருக்கும் அம்பாளை கொண்டாடும் திருநாளான ஆடி வெளி அன்று அம்மனுக்கு என்ன செய்ய வேண்டும்? இது இரண்டாவது ஆடி வெள்ளி ஆகும். இன்று அன்னையை மங்கள கௌரியாக பாவிக்க வேண்டும். மங்கள கெளரி என்றால் லக்ஷ்மி, சரஸ்வதி, துர்கா என முத்தேவியரின் அம்சம் ஆகும். எனவே இன்றைய தினம் அம்பிகையை மங்கள கெளரியாக பாவித்து விரதம் இருந்து வழிபட வேண்டும்.

ஒரு தாம்பாளம் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், தேங்காய் வாழைப்பழம், ரவிக்கைத் துணி, தட்சிணை போன்றவற்றை அம்பிகையின் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். மாலை 4.30 முதல் 6..00 மணி வரையிலான நேரத்தில் இந்த பூஜை செய்வது நல்லது. அம்பகையின் திருவுருவப் படத்திற்கு முன் ஒரு வாழை இல்லை அல்லது வெள்ளித் தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை பரப்பி அதன் மீது குத்து விளக்கை அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து திரிகளைப் போட்டு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். குத்து விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள். அதனையே அம்மனாக பாவித்தும் நீங்கள் பூஜை செய்யலாம். மஞ்சள், குங்குமம், சந்தனம் சாற்றி வாசனை மிக்க  சிகப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். லலிதா சஹஸ்ரநாமம் படிக்கச் வேண்டும். அல்லது ஒலிநாடாவில் கேட்கலாம்.  துர்கை பாடல், மகிஷாசுர மர்தினி சுலோகம்  அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடலாம். தூப தீய ஆராதனை செய்து, ஆரத்தி எடுக்க வேண்டும்.  பூஜை முடிந்த பிறகு தாம்பாளத் தட்டில் வைத்திருக்கும் பொருட்களை சுமங்கலிக்கு வெற்றிலை பாக்குடன் அளிக்க வேண்டும்.

இந்த தீப வழிபாடு அம்மனின் அருளைப் பெற்றுத் தருவதோடு மட்டும் அல்லாமல் சுக்கிர தோஷத்தையும் போக்க வல்லது. எனவே இந்த வெள்ளிக்கிழமை தீப வழிபாடு அம்பிகையின் அருளைப் பெற்றுத் தருவதோடு சுக்கிர கிரகத்தின் அருளையும் அளிக்கும்.