Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
108 kubera potri | 108 kuberar potri in Tamil | 108 குபேரர் போற்றி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

108 Kubera Potri | 108 kuberar potri in Tamil | 108 குபேரர் போற்றி

Posted DateNovember 17, 2023

லட்சுமி குபேரர் 108 போற்றி

  1. ஓம் லக்ஷ்மி குபேரரே போற்றி
  2. ஓம் தனாகர்ஷனரே போற்றி
  3. ஓம் நவநிதிகதிபதியே போற்றி
  4. ஓம் அழகாபுரி அரசியே போற்றி
  5. ஓம் உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
  6. ஓம் அளிப்பவரே போற்றி
  7. ஓம் எளியோனுக்கு அருள்பவரே போற்றி
  8. ஓம் ஏழ்மைநிலை அகற்றுவாய் போற்றி
  9. ஓம் ஐஸ்வர்யம் அளிப்பவரே போற்றி
  10. ஓம் ஒன்பது நிதி பெற்றவரே போற்றி
  11. ஓம் ஓங்கார நிதியே போற்றி
  12. ஓம் கருத்தில் நிறைந்தவரே போற்றி
  13. ஓம் கனகராஜரே போற்றி
  14. ஓம் கனகரத்தினமே போற்றி
  15. ஓம் காசுமாலை அணிந்தவரே போற்றி
  16. ஓம் கின்னரர்கள் தலைவரே போற்றி
  17. ஓம் கீர்த்தி அளிப்பவரே போற்றி
  18. ஓம் கீரிப்பிள்ளைப் ப்ரியரே போற்றி
  19. ஓம் குருவாரப் பிரியரே போற்றி
  20. ஓம் குணம் தரும் குபேரரே போற்றி
  21. ஓம் குறைதீர்க்கும் குபேரரே போற்றி
  22. ஓம் கும்பத்தில் உறைபவரே போற்றி
  23. ஓம் குண்டலம் அணிந்தவரே போற்றி
  24. ஓம் குபேரலோக நாயகரே போற்றி
  25. ஓம் குன்றாத நிதி அளிப்பவரே போற்றி
  26. ஓம் குலதனம் அளிப்பவரே போற்றி
  27. ஓம் கேட்டவரம் அளிப்பவரே போற்றி
  28. ஓம் கோடி நிதி அளிப்பவரே போற்றி
  29. ஓம் சங்க நிதியைப் பெற்றவரே போற்றி
  30. ஓம் சங்கரர் தோழரே போற்றி
  31. ஓம் சங்கடங்கள் தீர்ப்பவரே போற்றி
  32. ஓம் சமயத்தில் அருள்பவரே போற்றி
  33. ஓம் சத்திய ஸ்வரூபரே போற்றி
  34. ஓம் சாந்த ஸ்வரூபரே போற்றி
  35. ஓம் சித்திரலேகாப்ரியரே போற்றி
  36. ஓம் சித்திரலேகா மணாளரே போற்றி
  37. ஓம் சிந்தையில் உறைபவரே போற்றி
  38. ஓம் சிந்திப்போர்க்கு அருள்பவரே போற்றி
  39. ஓம் சந்தான தனம் அளிப்பவரே போற்றி
  40. ஓம் சிவபூஜை ப்ரியரே போற்றி
  41. ஓம் சிவபக்த நாயகரே போற்றி
  42. ஓம் சிவமஹா சிஷ்யரே போற்றி
  43. ஓம் சுந்தரர் பிரியரே போற்றி
  44. ஓம் சுந்தர நாயகரே போற்றி
  45. ஓம் சூர்பனகா சகோதரரே போற்றி
  46. ஓம் செந்தாமரை ப்ரியரே போற்றி
  47. ஓம் செல்வ வளம் அளிப்பவரே போற்றி
  48. ஓம் செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
  49. ஓம் ஸ்வர்ண வளம் அளிப்பவரே போற்றி
  50. ஓம் சொக்கநாதர் ப்ரியரே போற்றி
  51. ஓம் சௌந்தர்யராஜரே போற்றி
  52. ஓம் ஞான குபேரரே போற்றி
  53. ஓம் தனம் அளிக்கும் தயாபரரே போற்றி
  54. ஓம் தான்யலஷ்மியை வணங்குபவரே போற்றி
  55. ஓம் திரவியம் அளிப்பவரே போற்றி
  56. ஓம் திருவிழி அழகரே போற்றி
  57. ஓம் திருவுரு அழகரே போற்றி
  58. ஓம் திருவிளக்கில் உறைபவரே போற்றி
  59. ஓம் திருநீறு அணிபவரே போற்றி
  60. ஓம் சொர்ணாகர்ஷனரே போற்றி
  61. ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
  62. ஓம் தூயமனம் படைத்தவரே போற்றி
  63. ஓம் தென்னாட்டில் குடிகொண்டாய் போற்றி
  64. ஓம் தேவராஜரே போற்றி
  65. ஓம் பதுமநிதி பெற்றவரே போற்றி
  66. ஓம் பரவசநாயகரே போற்றி
  67. ஓம் பச்சை நிறப் பிரியரே போற்றி
  68. ஓம் பௌர்ணமி நாயகரே போற்றி
  69. ஓம் புண்ணிய ஆத்மரே போற்றி
  70. ஓம் புண்ணியமளிப்பவரே போற்றி
  71. ஓம் புண்ணிய புத்திரரே போற்றி
  72. ஓம் பொன்நிறம் உடையோரே போற்றி
  73. ஓம் பொன்நகை அணிபவரே போற்றி
  74. ஓம் புன்னகை அரசரே போற்றி
  75. ஓம் பொறுமை கொடுப்பவரே போற்றி
  76. ஓம் போகம் பல அளிப்பவரே போற்றி
  77. ஓம் மங்களமுடையோரே போற்றி
  78. ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
  79. ஓம் மங்களத்தில் உறைபவரே போற்றி
  80. ஓம் மீன லக்கினத்தில் உதித்தாய் போற்றி
  81. ஓம் முத்துமாலை அணிபவரே போற்றி
  82. ஓம் மோகன நாயகரே போற்றி
  83. ஓம் வறுமை தீர்ப்பவரே போற்றி
  84. ஓம் வரம் பல அருள்பவரே போற்றி
  85. ஒம் நவரத்ன காப்பாளரே போற்றி
  86. ஓம் வேதம் போற்றும் வித்தகரே போற்றி
  87. ஓம் வைரமாலை அணிபவரே போற்றி
  88. ஓம் வைகுண்டவாச பிரியரே போற்றி
  89. ஓம் நடராஜர் பிரியரே போற்றி
  90. ஓம் நவதானியம் அளிப்பவரே போற்றி
  91. ஓம் நவரத்தினப் பிரியரே போற்றி
  92. ஓம் நித்தியநிதி அளிப்பவரே போற்றி
  93. ஓம் நீங்காத செல்வ நாயகரே போற்றி
  94. ஓம் வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
  95. ஓம் ராவணன் சகோதரனே போற்றி
  96. ஓம் வடதிசை அதிபதியே போற்றி
  97. ஓம் ரிஷி புத்திரரே போற்றி
  98. ஓம் ருத்ர ப்ரியரே போற்றி
  99. ஓம் இருள் நீக்கும் இன்பரே போற்றி
  100. ஓம் வெண்குதிரை வாகனரே போற்றி
  101. ஓம் கயிலாய ப்ரியரே போற்றி
  102. ஓம் மனம் விரும்பும் மன்னரே போற்றி
  103. ஓம் மணிமகுடம் தரித்தவரே போற்றி
  104. ஓம் மாட்சிமை பொருந்தியவரே போற்றி
  105. ஓம் யந்திரத்தில் உறைபவரே போற்றி
  106. ஓம் யவ்வன நாயகரே போற்றி
  107. ஓம் வற்றாத ஸ்ரீநிதியே போற்றி
  108. ஓம் ஸ்ரீ லஷ்மி குபேரரே போற்றி

லட்சுமி குபேர பூஜை செய்யும் போது, ஒவ்வொரு மலர்களாய் தூவி, இந்த மந்திரங்களைக் கூற அனைத்து கஷ்டங்களும் விலகி நன்மை பிறக்கும்.