Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
முன்னோர் வழிப்படி உணவு உண்ணும் முறைகள் – ஆரோக்கியம் தரும் பழமையான வழிகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

முன்னோர் காட்டிய வழியைப் பின்பற்றி உணவு உண்டால் நல்ல ஆரோக்கியம் நிச்சயம்

Posted DateAugust 23, 2025

நாம் உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் உணவு உண்ணும் முறை மிகவும் ஆரோக்கியமானதும் இயற்கை சார்ந்ததுமாக இருந்தது. அவர்கள் உண்ணும் முறை உடல் நலம், காலநிலை, இயற்கை வளங்கள், மற்றும் பண்பாட்டு வழக்கங்களுக்கு ஏற்ப அமைந்திருந்தது. அவர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சியளிக்கும் உணவுகள் (பழங்கள், மோர், அரிசி கஞ்சி). உடகொண்டனர். குளிர்காலத்தில் சூடான உணவுகள் (மிளகு ரசம், சூடான கஞ்சி, நெய்) போன்றவற்றை உண்டனர். மேலும்  இயற்கையான ரசாயனமற்ற உணவுகளை உண்டனர். பச்சை காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் அனைத்தும் இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்டன. அவர்களின் உணவில் நாட்டு அரிசி (கருப்பரிசி, மாப்பிள்ளை சம்பா), கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகித்தன.

உணவு உண்ணும் முறை

இன்றைய காலத்தில் பெரும்பாலோனோர் வெளி உணவுகளையே விரும்புகின்றனர். மேலும் உணவைக் கையால் உண்ணாமல் கரண்டியால் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல தரையில் அமர்ந்து உண்ணாமல் மேஜையில் அமர்ந்து உண்ணும் வழக்கம் பெருகியுள்ளது. முற்காலத்தில்  தரையில் மட்டும் தான் அமர்ந்து உணவு உண்பார்கள். தரையில் அமரும்போது உடல் சற்று முன்னால் குனிந்து உணவு எடுக்கும். இந்த இயக்கம் செரிமான சாறு சுரப்பை தூண்டி செரிமானம் சுலபமாகும். தரையில் அமரும்போது இதயத்திலிருந்து இரத்த ஓட்டம் சமமாகும். யோக சாஸ்திரப்படி, தரையில் அமர்ந்து உண்ணுவதால் பிராண சக்தி சமநிலை காக்கப்படுகிறது. பனையிலை, வாழையிலை, மந்தார இலை போன்ற பெரிய இலைகளை உணவு பரிமாற பயன்படுத்தினர்.மேலும் கையால் உணவு உண்டனர் உணவை கையால் உண்ணுவதற்கான காரணங்கள் பல உள்ளன, அவை ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றுடன் தொடர்புடையவை:

நம் விரல்களில் பல நரம்பு முடிச்சுகள் உள்ளன. உணவு தொடும் போது அந்த நரம்புகள் மூளைக்கு சிக்னல்கள் அனுப்புகின்றன, இதனால் ஜீரண சாறு சுரப்பது அதிகரிக்கிறது.கையால் உணவு எடுத்தால் அது சூடா அல்லது குளிரா என்பதை உடனே உணர முடியும்; இதனால் வாயில் சூடு மற்றும் குளிர் தாக்குதல் தவிர்க்கப்படுகிறது.கரண்டி, ஸ்பூன் போன்றவற்றில் இருக்கும் கிருமிகள் வாய்க்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது, ஆனால் சுத்தமான கைகளை பயன்படுத்தினால் அந்த அபாயம் குறையும். கையால் உண்பது ஒரு வகையான மனபூர்வமான உணர்வை  தருகிறது. உணவை தொடுவதால் உணவின் அமைப்பு, வடிவம், ஈரப்பதம் ஆகியவற்றை அனுபவிக்க முடிகிறது.

பஞ்ச பூத தத்துவம்:

ஆயுர்வேதத்தின்படி, கையின் ஐந்து விரல்கள் பஞ்சபூதங்களை (பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாசம்) குறிக்கின்றன. கையால் உண்பது அந்த சக்திகளை உணவில் கலந்து உடலுடன் ஒன்றிணைக்கும் வழியாகக் கருதப்படுகிறது.இந்திய கலாச்சாரத்தில் உணவை கையால் உண்ணுவது ஆரோக்கியமானதாகவும்  அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. குடும்பத்துடன் அமர்ந்து கையால் உண்பது சமூகம் மற்றும் உறவை வலுப்படுத்தும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.

4அறிவியல் ஆதாரம்

சில ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், கையால் உண்பதால் மெதுவாக சாப்பிடும் பழக்கம் உண்டாகிறது. இது அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஜீரணத்திற்கு உதவவும் செய்கிறது. உணவை தொடும் போது நரம்புகள் மூளைக்கு தகவல் அனுப்பி, உணவு வரப்போகிறது என்று சுட்டிக்காட்டும்; இதனால் ஜீரண சாறு உற்பத்தி அதிகரிக்கும். கையால் சாப்பிடும் போது, நாம் உணவின் வடிவம், வெப்பம் ஆகியவற்றை உணர்ந்து மெதுவாக சாப்பிடுகிறோம். இது அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவும்.கரண்டியால் சாப்பிடும்போது சூடான உணவு வாயை சுட்டு விடலாம். ஆனால் கையால் சாப்பிடும்போது வெப்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. விரல் நரம்புகள் மூளையுடன் இணைந்துள்ளதால் உணவை தொடும் போது உணர்ச்சி, சுவை மற்றும் பசி பற்றிய தகவல் அதிகரிக்கிறது.

பஞ்சபூத தத்துவம் மற்றும் விரல் தொடர்பு

ஆயுர்வேதத்தின் படி, நம் கையின் ஐந்து விரல்கள் பஞ்சபூதங்களை பிரதிபலிக்கின்றன:

சுண்டு விரல் – நீர் தத்துவத்தைக் குறிக்கும். மோதிர விரல் பூமி தத்துவத்தைக் குறிக்கிறது. நடு விரல் ஆகாய தத்துவத்தைக் குறிக்கிறது. ஆள்காட்டி விரல்  வாயு தத்துவ்வத்தைக் குறிக்கிறது. கட்டை விரல் அக்னி தத்துவத்தைக் குறிக்கிறது.  கை விரல்களை குவித்து (முழுவதும் சேர்த்து) உணவு உண்பது பாரம்பரியமாகவும் ஆரோக்கிய ரீதியிலும் பல நன்மைகள் கொண்டது. மேலே கூறியவாறு நமது ஐந்து விரல்களும் பஞ்சபூதங்களை (பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம்) குறிக்கின்றன.விரல்களை குவித்து உண்பதால் இந்த பஞ்சபூத சக்திகள் ஒருங்கிணைந்து, உணவை உடல் ஏற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. கை விரல்களில் நிறைய நரம்பு முடிச்சுகள் உள்ளன.உணவை தொடும் போது, மூளை உணவின் வெப்பநிலை, வறுமை, ஈரப்பதம் ஆகியவற்றை உணர்ந்து சரியான ஜீரணத்திற்கு உடலைத் தயார் செய்கிறது. கைவிரல்களை குவித்து சிறு அளவுகளில் உண்பதால் உணவு நன்றாக மென்று, என்சைம்கள் சுரக்க உதவுகிறது. இது ஜீரணத்தை எளிதாக்கி, அமிலத்தன்மை (acidity) குறைக்கிறது.கைகளால் உண்பது ஒரு மனஅமைதி தரும் செயலாகும், இதனால் மன அழுத்தம் குறையும். மேலும்  விரல்களை குவித்து உண்பதால் வாயு, பித்தம், கபம் என்ற த்ரிதோஷா சமநிலை பெறுகிறது.