பொருளிலாருக்கு இவ்வுலகில்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை என்பது சான்றோர் வாக்கு. பொருளைக் கொண்டு இந்த உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் அடையலாம்.அதை அடைய லக்ஷ்மி தேவியின் அருள் வேண்டும் செல்வத்திற்கு தலைவியான மகா லக்ஷ்மி எப்பொழுதும் எல்லோராலும் பூஜிக்கத் தகுந்தவள்.லக்ஷ்மி தேவி பல வடிவங்களில் பூஜிக்கப் படுகிறாள். அனைவருக்கும் தனப் பிராப்தி மற்றும் சகல செல்வங்களையும் அளிக்கும் தன லஷ்மி ஸ்ரீ வைபவ லக்ஷ்மியாக போற்றப்படுகிறாள். முறையாக விரதம் இருந்து சரியான முறையில் அவளை பூஜித்தால் அன்னையின் அருளையும் வரத்தையும் நாம் பெறலாம். இந்த பூஜையை பெண்கள் தனியாகவும் செய்யலாம். குழுவாகவும் செய்யலாம். இந்த பூஜை பற்றிய சகல விவரங்களையும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
வைபவ லக்ஷ்மி பூஜை என்பது செல்வச் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மனநிறைவை அளிக்கும் லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பான விரதமும் பூஜையும் ஆகும். இந்த பூஜையை பெரும்பாலும் பெண்கள், சில ஆண்களும், குடும்ப நலனுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் செய்வார்கள். பூஜையின் வரலாறு பற்றி இங்கு காணலாம் வாருங்கள்.
ஒரு காலத்தில் ஷீலா என்ற பெண் மிகுந்த செல்வச் செழிப்புடன் வசித்து வந்தாள். அவள் கணவன் சிறப்பாக தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டி வந்தான். ஆனால் விதி செய்த சதியாக அவன் பாதை மாறிப் போக ஆரம்பித்தான். குடி, குதிரைப் பந்தயம் என அவனது வாழ்க்கை நிலை மாறிப் போனது. மனம் தளராத ஷீலா அவனை திருத்த முயற்சி செய்தாள். என்றாலும் அவள் அதில் தோற்றுத் தான் போனாள். ஆலயம் செல்வதற்கு கூட அவள் மனம் ஒப்பவில்லை. என்றாலும் வீட்டிலேயே அவள் லக்ஷ்மி பூஜை செய்து வந்தாள். அவள் பக்திக்கு மெச்சி சாட்சாத் வைபவ லக்ஷ்மியே ஒரு பெண் வடிவில் அவள் வீட்டிற்கு வந்து வைபவ லக்ஷ்மி பூஜை செய்யுமாறு கூறினாள். அவளும் அவ்வாறே பூஜை மேற்கொண்டு படிப்படியாக வறுமை நிலை மாறி செல்வம் அடைந்தாள்.
∙ வைபவ லக்ஷ்மி விரத கதை புத்தகம்
∙ அம்மன் விக்கிரகம் அல்லது படம்
∙ மலர், மாலைகள்
∙ தீபம் (விளக்கு), திரி, நெய் அல்லது எண்ணெய்
∙ அரிசி, மஞ்சள், குங்குமம்
∙ பழங்கள், நெய்வேதியம் (சர்க்கரை பொங்கல், பால் பாயசம், லட்டு போன்றவை)
∙ வெள்ளி/தாமிரக் கும்பம், தண்ணீர்
இந்த பூஜையை 11 அல்லது 21 வெள்ளிக்கிழமை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தினமும் செய்யக் கூடிய வீட்டு வேலை, தெய்வ வழிபாடு இவைகளை முடிக்க வேண்டும். அன்று முழுவதும் மனதை ஸ்ரீ மகா லட்சுமியிடம் வைத்து “ஜெய ஜெய லக்ஷ்மி என்று ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். கோபம் கொள்ளாமல் அதிகம் பேசாமல் இந்த ஜெபம் செய்வது நல்லது. காலையில் இருந்து உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் பூஜையை தொடங்க வேண்டும்.
ஒரு ஆசனப் பலகையை போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார வேண்டும். உங்களுக்கு முன்னால் கோலமிட வேண்டும். அதன் மேல் ஒரு வெள்ளித்தட்டு அல்லது வாழை இலையில் அரிசியை பரத்தி சதுர வடிவில் சரிசமமாக நிரவி அதன் மேல் கலசத்தில் பூர்ண கும்பம் வைக்க வேண்டும். கும்பத்தில் நீரை நிரப்பி ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், விலாம்புச்சி வேர் போன்றவற்றை சேர்க்க வேண்டும். கும்பத்தின் மேல் தங்கம், வெள்ளி அல்லது சாதாரண நாணயங்களால் நிரம்பிய ஓரு தட்டை வைக்க வேண்டும். அதன் மேல் அல்லது அருகில் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி படம் அல்லது சக்கரத்தை (யந்திரம்) வைக்க வேண்டும்.
கலசம் மற்றும் யந்திரத்தில் வைபவ லக்ஷ்மி இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும்.இவைகளுக்கு சந்தனம், கும்குமம், புஷ்பம் இவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். தேவிக்கு செய்ய வேண்டிய எல்லா உபசார பூஜைகளையும் செய்து ஸ்ரீ வைபவ லக்ஷ்மி தியான ஸ்லோகத்தை பதினொன்று அல்லது இருபத்தி ஒரு முறை பாராயணம் செய்ய வேண்டும்.
“அம்மா என் கவலைகள் அனைத்தையும் தீர்த்து செல்வமும் மகிழ்ச்சியும் தந்து காத்திடு, என் போன்று எல்லாரும் நலமாக வாழ அனுக்கிரகிக்க வேணும் தாயே” என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அன்னைக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பதினோரு முறை :ஜெய மாம் லக்ஷ்மி” என்று கூறி வழிபட வேண்டும். பிரசாதத்தை கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
கும்பத்தின் மீது வைத்துள்ள நாணயத்தையே ஒவ்வொரு பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும். அந்த கலசத்தில் உள்ள தீர்த்தத்தை உட்கொண்டு பிறருக்கும் கொடுத்து மீதியை துளசி செடி அல்லது கிணற்றில் ஊற்ற வேண்டும். அரிசியை அரிசி பானையில் போட வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீ வைபவ லக்ஷ்மியை முறையாக பூஜித்து தான் இன்பம் அடைவது மட்டும் இன்றி பலரையும் இந்த பூஜையில் ஈடுபாத்தினால் அம்பாள் மனம் மகிழ்ந்து எல்லாருக்கும் அருள் புரிவாள்.
∙ பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று செய்யப்படுகிறது, ஏனெனில் வெள்ளி லக்ஷ்மி தேவியின் தினமாக கருதப்படுகிறது.
∙ சுபமுகூர்த்தம், சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி நாட்களிலும் செய்யலாம்.
பூஜையின் முக்கிய நோக்கம்
∙ குடும்பத்தில் ஆரோக்கியம், அமைதி, செல்வம் நிலைத்திருக்க.
∙ கடன், வறுமை, தடை போன்றவை நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட.
∙ உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்க
∙ நன் மக்கட் பேறு அடைய
∙ வியாபாரம் சிறப்பாக நடக்க
∙ இல்லற வாழ்வில் சமாதானம் நிலைத்திருக்க.
∙ பொதுவாக விரதம் விரும்பியபடி கடைப்பிடிக்கலாம்: முழு உபவாசம், பழவகைகள், பால் மட்டுமே, அல்லது ஒரு நேரம் சாப்பிடுவது போன்ற முறைகள்.
∙ குறைந்தது 11 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
∙ 11வது நாளில் மகளிருக்கு புத்தகம், பூஜை பொருட்கள், மாலை, பழங்கள் கொடுக்கலாம்.
∙ செல்வம், சமாதானம், குடும்பத்தில் நல்லிணக்கம்
∙ தொழிலில் முன்னேற்றம்
∙ கடன் நீக்கம்
∙ விருப்பமான காரியங்கள் நிறைவேறுதல்
Bottom of Form
பூஜை ஆரம்பிப்பதற்கு முன் மூன்று முறை சொல்லப்படும் பொதுவான சுலோகம்:
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹா லக்ஷ்ம்யை நம:”
(பிரார்த்தனை செய்வது – செல்வம், ஆரோக்கியம், அமைதி தருவாள் என்ற நம்பிக்கையுடன்)
தீபம் ஏற்றும் போது:
“ஓம் தீப ஜ்யோதிஷே நம:”
ஆரத்தி செய்யும்போது:
“ஓம் வைபவ லக்ஷ்மி தாயே நம:” (மூன்று முறை சொல்லவும்)
Bottom of Form
September 11, 2025
September 10, 2025
September 10, 2025