நம்மைச் சுற்றி ஒரு ஆற்றல் இருந்து கொண்டே இருக்கும். அது நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ஆற்றல் நேர்மறை ஆற்றலாகவும் இருக்கலாம். எதிர்மறை ஆற்றலாகவும் இருக்கலாம். அதன் தாக்கத்தை பொறுத்து நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள் அமையும். அதனைப் பொறுத்தே அதன் விளைவுகளும் இருக்கும். ஆனால் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலே நம்மைச் சுற்றி இருக்கும் என்று கூறி விட இயலாது எதிர்மறை ஆற்றலும் பல நேரங்களில் இருக்கும். அவ்வாறு எதிர்மறை ஆற்றல் இருக்கும் போது நம்மால் எதிலும் ஆக்கப் பூர்வமாக செயல்பட இயலாது. அது நமது முன்னேற்றத்தில் தடைகளாகவும் தாமதங்களாகவும் உருவெடுக்கும். இந்த எதிர்மறை ஆற்றல் பல காரணங்களால் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இது நாமே சில பயம் காரணமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்கலாம். அல்லது பிறரின் கண் திருஷ்டி கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இதற்கு பொதுவாக நமது கர்ம வினைகளே காரணமாக அமைகிறது.
எனவே தான் அந்த நாட்களில் நமது முன்னோர்கள் இந்த எதிர்மறை ஆற்றல் நம்மை விட்டு நீங்கள் சில எளிய பரிகாரங்கள் அல்லது திருஷ்டி கழித்தல் என்பதை மேற்கொள்வார்கள். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
நமக்கு வரும் திருஷ்டி மற்றும் தீவினைகளை நீக்கக் கூடியவள் இந்த பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அன்னை பராசக்தி. அவளை நாம் பல வடிவங்களில் வணங்குகிறோம். இப்பொழுது நடை பெறும் ஆடி மாதம் அன்னைக்கு உரிய மாதம் ஆகும். ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு அம்மனுக்கு உகந்த நாட்கள். அவளுக்கு உகந்த நாட்களில் நாம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அவள் அருளால் எதிர் மறை ஆற்றல் நீங்கும். இந்த பரிகாரம் அம்மனுக்கு உகந்த ஆடி ஞாயிறு அன்று செய்யலாம். வரப் போகும் ஞாயிறு ஆடி கடைசி ஞாயிறு. அன்றைய தினம் செய்யப் போகும் பரிகாரம் பற்றித் தான் நாம் இந்தப் பதிவில் காணப் போகிறோம்;
ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று திருஷ்டி கழிப்பதாக பலரும் பரிகாரங்கள் செய்வார்கள். இந்த பரிகாரத்தை ஆடி மாதம் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஒரு மாதத்தின் எந்த ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமனம் ஆகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய மூன்று பொருட்கள் இருந்தால் போதும். பெரிதாக வேறு எதுவுமே தேவைப்படாது. இதற்கு சிறிதளவு நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய கல் உப்பு, சிறிது வெண் கடுகு மற்றும் மிளகாய் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் அன்று எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதாவது திருஷ்டி சுத்தும் பொழுது வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும். இந்த காய்ந்த மிளகாய் நீட்டு மிளகாயாக தான் இருக்க வேண்டும். உடைந்திருக்கக் கூடாது. காம்பு இருக்கக்கூடிய மிளகாயாக பார்த்து தான் வைக்க வேண்டும். திருஷ்டி சுத்தும் பொழுது எத்தனை நபர்கள் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில்தான் காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும். அனைவரையும் கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர சொல்லி அவர்கள் அனைவருக்கும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்.
அதேபோல் திருஷ்டி எடுப்பவர்கள் தமக்கு தாமே வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து ஒரு கொட்டாங்குச்சியில் நெருப்பை பற்ற வைத்து அதில் போட்டு விட வேண்டும். இது முழுமையாக வெடித்து எரியும். இப்படி எரிவதன் மூலம் நம் வீட்டிலும் நம்மிடமும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025