Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
சோடசக்கலை நேரம் – பூரண சந்திரனின் சிறப்பு நேரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சோடசக்கலை நேரம்

Posted DateAugust 13, 2025

சோடசக் கலை என்றால் என்ன?

அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் முடிவிற்கு   ஒரு மணி நேரம் முன்னும் ஒரு மணி நேரம் பின்பும் ஆக இரண்டு மணி நேரமும் சோடசக்கலை நேரம். அதாவது அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் திதி நேரம் சோடசக்கலை ஆகும். இந்த நேரத்திற்குள் வரும் ஒரு ஐந்து நொடிகள் மிக முக்கியமானவை. ஆனால் அவற்றைக் கணித்துக் கூறுவது கடினம். இந்த நேரம்  அற்புதமான நேரம் ஆகும். சித்தர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தித் தான் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்கள் என்பதாக ஐதீகம். ஆனால் சாதாரண மனிதர்களாகிய நமக்கு இந்த பேராற்றல் மிக்க ஐந்து நொடிகள் எதுவென்று கணித்துக் கூற இயலாத காரணத்தால் முழு நேரத்திலும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது

சோடசக்கலை – 16 கலைகள்

இவை சந்திரன் படிப்படியாகப் பெருகும் நிலைகளை குறிக்கும்போதும், வேதாந்தத்தில் மனிதனின் முழுமை பெற்ற குணங்களாகவும் எடுத்துரைக்கப்படுகின்றன.

  1. ஆஹார கலா – உயிர் வாழ்வதற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவு.

  2. வ்யாயாம கலா – உடல் வலிமை, உடற்பயிற்சி, ஆரோக்கியம் பேணுதல்.

  3. சங்கீத கலா – இசை, ராகம், தாளம், குரல் நயம்.

  4. நாட்டிய கலா – நடனம், அசைவின் அழகு, கலைநடை.

  5. வாத்ய கலா – இசைக்கருவி வாசிக்கும் திறம்.

  6. லேகந கலா – எழுதும், வரையும் நயம்.

  7. சில்ப கலா – சிற்பம், உருவாக்கும் கலை.

  8. வாஸ்து கலா – கட்டிடக் கலை, தளவமைப்பு அறிவு.

  9. சாயாச்சித்ர கலா – ஓவியம், நிறநயம், சாயம்-ஒளி பயன்பாடு.

  10. மந்திர கலா – மந்திரங்கள், ஜபம், உச்சரிப்பு நயம்.

  11. யுத்த கலா – போர்த் திறன், ஆயுத நயம், ராணுவ அறிவு.

  12. தனுர்வேத கலா – வில்லியுத்தம், துல்லிய குறி அடைவது.

  13. நீதி கலா – நியாயம், அரசியல் அறிவு, நெறி.

  14. வைத்ய கலா – மருத்துவம், நோய் தீர்க்கும் திறம்.

  15. காலவித்ய கலா – காலக்கணிதம், ஜோதிடம், பருவ அறிவு.

  16. ஆத்மவித்ய கலா – ஆன்மிக அறிவு, இறைவனுடன் ஒன்றிணையும் நிலை.

ஒவ்வொரு நாளும் சந்திரனில் ஒரு புதிய கலை சேர்ந்துக் கொண்டு, பௌர்ணமி அன்று பதினாறு கலையும் பூரணமாய் இருக்கும். பௌர்ணமிக்கு பின், இந்தக் கலைகள் படிப்படியாகக் குறைந்து அமாவாசை நாளில் மறைந்து விடும். இதே முறையில், மனித வாழ்க்கையிலும் அறிவும் ஆற்றலும் வளர்ந்து, பின்னர் குறையும் — இது இயற்கையின் சுழற்சி.

 சோடசக் கலை நேரத்தின் சிறப்பு என்ன

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் மொத்தம் 30. அதில் வளர்பிறை திதி 14. தேய்பிறை திதி 14 மற்றும் அமாவாசை & பௌர்ணமி.  இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதி தான் சோடசக்கலை. இது 5 நொடிப்பொழுதுகள் மட்டுமே இருக்குமாம். இந்த நேரம் திரிமூர்த்திகளின் ஆளுகைக்குள் இருக்கும் என்பது ஐதீகம். இந்த ஐந்து நொடி எப்போது எனத்தெரியாததால் இரண்டு மணி நேரமும் சோடசக்கலை தியானத்தில் இருக்க வேண்டும். அதாவது அமாவாசை முடிவதற்கு முன்பான ஒரு மணி நேரம் மற்றும் அமாவாசை முடிந்த பிறகு ஒரு மணி நேரமும் ( பிரதமை தொடங்கி ஒரு மணி நேரம்) தியானத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ப்படுகிறது. .

சோடசக் கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எளிய வழிபாடு தான். திதி முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இதனை செய்ய வேண்டும். திதி முடிந்த பிறகான ஒரு மணி நேரம் வரை தியானம் செய்ய வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளுங்கள். தீபத்தை ஒரு மனைப் பலகை அல்லது தாம்பாளத் தட்டின் மீது வைத்துக் கொள்ளுங்கள. பிறகு அந்த அகலில் ஒரு துளி தேன், இரண்டு மிளகு, சிறிது மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு தீபம் ஏற்றுங்கள். தீபம் ஏற்றி வழிபட்ட பின் உங்கள் வேண்டுதலை கூறிக் கொள்ளுங்கள். அதிலேயே மனம் லயித்து தியானம் மேற்கொள்ளுங்கள். ஒரு  தடவை ஒரே ஒரு வேண்டுதலைத் தான் வைக்க வேண்டும்.

 சோடசக் கலை நேர தியானத்தின் பலன்:

சக்தி வாய்ந்த இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த இந்த பூஜை அல்லது தியானம் மூலம் நீங்கள் வேண்டியதைப் பெறலாம் என்பது ஐதீகம். உங்கள் நியாயமான வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை இந்த நேரத்தில் நீங்கள் தியானித்து வேண்டுவதன் மூலம் கிடைக்கும். உங்கள் கடன் தீரும்.  பொருளாதார முன்னேற்றம் காணலாம். திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் வேண்டுபவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும். இப்படி உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும். ஆனால் உங்கள் வேண்டுதல் ஒன்றைப் பற்றி மட்டும் தான் இருக்க வேண்டும்.

சோடசக் கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பது மட்டும் இன்றி நீங்கள் லட்சுமி கடாட்சம் பெற்று பணக்காரர் ஆகவும், நிரந்தர செல்வம் பெறவும் சோடசக் கலை நேரத்தில் பின் வருவனவற்றை தவறாமல் செய்து பாருங்கள்.

∙ அன்றைய தினம் உங்கள்  மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதம்  அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுங்கள்.

∙  அமாவாசை  அல்லது பௌர்ணமி திதி முடிவதற்கு    ஒரு மணி நேரத்துக்கு முன்பு   ஆரம்பித்து    திதி முடிந்து  ஒரு மணி நேரம்   வரை  2 மணி நேரம்  தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.

∙ இந்த இரண்டு மணி நேர  சோடசக்கலை நேரத்தில்  ஏதாவது  ஒரு  5 நொடிப்பொழுதுகள்  திருமூர்த்தி  (மும்மூர்த்தி) இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும்   தனது அருளை   பொழிகிறார்.

∙  தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது  உங்கள்  கோரிக்கை நிறைவேறும்.  சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும். அது   உங்கள்   உடல் மற்றும் னதை   ஒரு  நிலைப்படுத்தி    தியானிக்கும்  வலிமையைப் பொறுத்தது.

∙ வடகிழக்கு  நோக்கி  அமர்ந்து   தியானம் அல்லது ஜபம்  செய்யவேண்டும்.   வெறும் தரையில் உட்காரக்கூடாது.

∙ வயிறு காலியாக இருக்க வேண்டும்.

∙ சோடசக்கலை  நேரத்தில்  மும்மூர்த்திகளை   வணங்கி தியானம் மேற்கொள்ளலாம். அல்லது  மும்மூர்த்திகள் இணைந்த அம்சமான  ஸ்ரீ தத்தாத்ரேயரை    வணங்கி  தியானம்  செய்யலாம்.

 இந்த  தியான நேரத்தில்   கீழே உள்ள  மந்திரத்தை ஜெபிக்கவும்.

  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

  ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ