Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
திருமணத்திற்கு புறம்பான உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? – ஜோதிட விளக்கம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருமணத்திற்கு புறம்பான உறவை ஜாதகம் மூலம் அறிய முடியமா?

Posted DateAugust 13, 2025

திருமணத்திற்குப் புறம்பான உறவு என்பது, ஒரு நபர் திருமணமானவராக இருக்கும்போது, தனது துணையுடன் அல்லாமல் வேறொருவருடன் பாலியல் அல்லது உணர்ச்சி ரீதியான உறவைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இதை ஆங்கிலத்தில் “extramarital affair” என்று கூறுவார்கள். இது திருமண பந்தத்திற்குள் நம்பிக்கைத் துரோகமாகக் கருதப்படுகிறது.

திருமணத்திற்குப் புறம்பான உறவிற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

திருமண உறவு நிலைத்து இருக்க, கணவன் மனைவி  இருவருக்கும் இடையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உறவு திருப்திகரமாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி அதிருப்தி நிலவினால் உறவில் கசப்பான நிலை ஏற்படும். அதிருப்தியும் காதல் குறைபாடும் வேறு உறவை நாடத் தோன்றும். திருமண வாழ்க்கையில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ,  வேறு ஒருவருடன் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை நாடலாம்.மேலும் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலோ அல்லது உற்சாகம் குறைந்தாலோ, அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறவும், புதிய உறவை நாடவும் வாய்ப்புகள் அதிகம். சுயமரியாதை இல்லாமை, பயம் போன்ற தனிப்பட்ட குறைபாடுகளும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு வழிவகுக்கலாம். சில சமயங்களில், வேலை அல்லது சமூக சூழ்நிலைகள் காரணமாக, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் உருவாகலாம்.  திருமணத்திற்குப் புறம்பான உறவு, திருமண பந்தத்தை உடைக்கலாம். சில சமயங்களில் விவாகரத்து வரை கூட செல்லலாம். இந்த உறவுகள் குழந்தைகளின் மனதையும் பாதிக்கும். அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.இது போன்ற உறவுகள் சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தும். சில சமயங்களில் சட்ட ரீதியான பிரச்சனைகளிலும் சிக்கலாம்.

திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தடுப்பது எப்படி:

திருமணமான தம்பதிகள் தங்கள் உறவை நிலை நிறுத்திக் கொள்ள தங்கள்  துணையுடன் ஆரோக்கியமான உறவைப் பேணுவது அவசியம். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதும், புரிதலுடன் நடந்து கொள்வதும் உறவை வலுவாக்கும். திருமண உறவில் வெளிப்படையான தொடர்பு மிகவும் முக்கியம். உங்கள் உணர்ச்சிகளையும், தேவைகளையும் உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.உங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். இது உறவை வலுவாக்கும். இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு அற்ற வாழ்க்கை திருமண உறவில் மகிழ்ச்சியை அளிக்கும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் இனிய இல்லற வாழ்க்கை அமையும். அதனால் எந்தவொரு மூன்றாம் நபர் வந்தாலும் உறவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

ஜாதகத்தில் திருமணத்திற்கு மீறிய உறவைக் குறிக்கும் முக்கியமான காரகங்கள்:

  1. 7-ம் பாவம் களத்திர ஸ்தானம் /திருமணம்7-ம் பாவம் அல்லது அதில் உள்ள கிரகங்கள் திருமண வாழ்க்கையின் நிலையை கூறும்.

7-ம் பாவம் மீது அசுப கிரகங்கள் பார்வை இருந்தால்,  அது  உறவில் சந்தேகத்தன்மை, விரிசல்கள், உணர்வுப்பூர்வமான பிணைப்பின் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும்.

  1. 7-ம் பாவாதிபதி  – 7-ம் பாவத்தின் அதிபதி எங்கு உள்ளது, யாருடன் சேர்ந்து உள்ளது, பாப கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

7-ம் பாவாதிபதி 8-ம் பாவம் அல்லது 12-ம் பாவத்தில் இருந்தால், இரகசிய உறவுகள் அல்லது விபச்சார இயல்பு குறிக்கலாம்.

  1. சுக்ரன் -சுக்ரன் காதல், வசீகரம், விஷய சுகங்கள், காம இச்சைகள்  ஆகியவற்றை குறிக்கின்றது.

சுக்ரன் பாப கிரகங்களுடன் இணைவது, 6-ம், 8-ம், 12-ம் பாவத்தில் இருப்பது, ராகு அல்லது கேதுவின் பார்வையால் பாதிக்கப்படுவது இவை அனைத்தும் ஒழுக்கக்கேடான அல்லது ரகசிய உறவுகளின் சாத்தியத்தைக் குறிக்கலாம்.

4. சந்திரன் -சந்திரன் மனதை குறிக்கும். அது எந்த பாவத்தில் உள்ளது, யாருடன் சேர்ந்து உள்ளது என்பதும் முக்கியம்.

சந்திரன் 7-ம் பாவத்தில் ராகுவுடன் இருந்தால் அல்லது பாப கிரகங்களால் தாக்கப்பட்டால், மனதின் இழுப்பு  தவறான பாதைக்கு செல்லும் சாத்தியம் உள்ளது.

5. ராகு- ராகு 7-ம் பாவத்தில் இருப்பது அல்லது சுக்ரனுடன்

சேரும்போது, திருமணத்திற்கு மீறிய ஆசைகள், மரபின்மை ஆசைகள் உருவாகும்.

6.  12-ம் பாவம் – அயன சயன போக ஸ்தானம்

12-ம் பாவம் என்பது துயில், தனிப்பட்ட வாழ்வு, இரகசியம் என்பவற்றை குறிக்கும்.

12-ம் பாவம் பாதிக்கப்படுவதும், சுக்ரன்/ராகு அதில் இருப்பதும் கூட ஒழுங்கல்லாத உறவுகளுக்கான சாத்தியங்களை குறிப்பிடலாம்.

  1. ராகு சுக்கிரன் சந்திரன் அல்லது செவ்வாய் ஜாதகத்தில் 3,5,7,11,12 வீடுகளுக்கு அதிபதியாக இருப்பது அல்லது வீடுகளுடன் இணைந்து அல்லது தொடர்பு கொண்டு இருப்பது ரகசிய  அல்லது திருமணத்திற்கு புறம்பான உறவுகளை ஏற்படுத்தும்.

மேலே கூறிய யாவும் பொதுவானவை ஆகும். இந்த அமைப்பு உள்ள எல்லாருக்கும் இது பொருந்தி விடாது. இதில் விதி விலக்குகளும் உண்டு. உதாரணமாக குரு பார்வை அல்லது குரு சேர்க்கை இருந்தால் இவை சுப பலன்களையே அளிக்கும். எனவே இவற்றை மட்டும் வைத்து முடிவுக்கு வரக் கூடாது. அனுபவம் வாய்ந்த ஜோதிடர்  மூலம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு மீறிய உறவுகள் (extra-marital affairs) அல்லது அதற்கான சாத்தியங்களை ஜாதகத்தில் (கிரக நிலைகள், கிரகங்களின் பார்வை, திசை-புக்தி, முதலாதாரங்கள்) அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்வது ஒரு ஜோதிடக் கணிப்பாகும். இது நிச்சயமான தீர்ப்பல்ல; மனிதர் தனது சுய அறிவால் திசை மாற்ற முடியும் என்பதும் உண்மை. இருப்பினும், சில குறிப்பிட்ட யோகங்கள் மற்றும் கிரக அமைப்புகள்  திருமணத்திற்கு பிறகு கூட உள்ள உறவுகளில் சிக்கல்களோ, விலகல்களோ, அதற்கு மேல் தவறான உறவுகளோ ஏற்பட வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டக்கூடும்.