ஒரு சிலருக்கு படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்து விடும். ஒரு சிலருக்கு படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கும். வேறு சிலருக்கோ வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும். வேலை கிடைக்காதவர்கள் மற்றும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதன் மூலம் நல்ல வேலை பெறலாம். வியாழக்கிழமைகளில், குரு ஹோரையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்ல வேலை கிடைக்கவும் பதவி உயர்வு பெறவும் உதவும்.பிரதி செவ்வாய் ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி வழிபாட்டு வந்தால் கூடிய சீக்கிரம் வேலை கிடைக்கும்;
சம்பளம் வாங்கியவுடன் அதை வரும் வழியிலேயே செலவு செய்யாமல் நேரடியாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த பணத்தை வைத்து ஒரு எளிய பரிகாரம் மேற்கொள்ள வேண்டும். அது பல மடங்கு பணத்தை பெருக்கித் தரும். ஒரு சிறிய பித்தளை தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிகப்பு நிற துணியைப் போட்டு அதன் மீது பச்சரிசி பரப்பி விடுங்கள் அதன் மீது உங்கள் சம்பளப் பணத்தை வைக்க வேண்டும். அதன் மீது ஒரு நாணயம் வைத்து விடுங்கள். பிறகு குல தெய்வத்தை நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள். அந்தப் பணத்தை அப்படியே ஒரு மூன்று மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு அதில் இருந்து உங்கள் சக்திக்கு ஏற்ப ( அது நூறு ரூபாயாகக் கூட இருக்கலாம்) பணத்தை எடுத்து குல தெய்வம் கோவிலுக்கு அளியுங்கள். அல்லது ஏழை எளியோர்க்கு உதவ பயன்படுத்துங்கள். இதுவே அந்த மாத சம்பளத்தின் முதல் செலவாக இருக்க வேண்டும்.இதனை செய்வதன் மூலம் உங்கள் வருமானம் உயரும். குறிப்பு: பச்சரிசியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்)
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவும் பரிகாரங்கள்
ஒரு சிலருக்கு அலுவலகத்தில் தொடர்ந்து சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். தொடர்ந்து வேலைப் பளு, பதவி உயர்வு மறுப்பு அல்லது வேலை இல்லாத தன்மை, ஊதிய உயர்வு மறுப்பு இவற்றை சந்திப்பவர்கள் கீழ்க்கண்ட இந்த பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை நினைத்து “ ஓம் அங்காரகனே போற்றி போற்றி”: என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வழிபடவும். விநாயகப் பெருமானுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட அலுவலகப் பிரச்சினைகள் தீரும். வேலை சம்பந்தமான பிரச்சினை தீர வேண்டுதல் வைத்து அது நிறைவேறியதும் அந்த பொருளை உண்டியலில் சேர்த்து விடலாம்.
அலுவலகத்தில் வேலைப் பளு குறைக்க சூரிய நமஸ்காரம்!
அலுவலகத்தில் உண்டாகும் பணிச்சுமையை போக்கி, மன நிறைவான பணி அனுபவத்தை பெற, தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். சூரிய நமஸ்காரம் எனில், காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, சூரியனை பார்த்தப் படி நின்று நீர் தானம் செய்து, பின் வணங்குவது அவசியம். சூரியனுக்கு நீரை அளிக்கையில் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவது அவசியம். மேலும் இந்த பரிகாரத்தின் போது “ஓம் ஹ்ரிணி சூர்ய ஆதித்ய ஓம்” அல்லது “ஓம் ஹ்ரிணி சூர்ய நமஹ” எனும் மத்திரத்தை உச்சரிப்பது அவசியம். தினமும் காலை சூரியனை இவ்வாறு வணங்குவதன் மூலம், ஜாதகத்தில் சூரியனின் எதிர்மறை விளைவுகள் குறையும்.அந்த வகையில் பணியிடத்தில் வேலை பளு குறைந்து, நிம்மதியாக பணியை செய்து, அடுத்தடுத்த நிலைக்கு உயர்வீர்கள்.
அலுவலகப் பணி மற்றும் தொழிலில் தடைகள் நீங்க பரிகாரம்
விநாயகர் தடைகளை நீக்கும் கடவுள்.தினமும் விநாயகருக்கு விளக்கு போட்டு அவரை வணங்க தடைகள் யாவும் நீங்கும். ஜோதிடத்தில் சனி பகவானை கர்மகாரகன் என்று கூறுவார்கள். கர்மகாரகனான சனி பகவானை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து எள் சாதம் நிவேதனம் செய்து வர தொழிலில் காணப்படும் தடைகள் நீங்கும்.
இலக்குகளில் வெற்றி பெற உதவும் சிவ மந்திரம்!
பணியிடத்தில் உள்ள தடைகளை போக்கி உங்கள் இலக்குகளை எட்டவும், தொழில் வாழ்க்கையில் வெற்றி காணவும் இந்த சிவ மந்திரம் உதவி செய்யும். ஜாதகத்தில் ஒவ்வொரு வீடும் தனி ஒரு ராசியுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிலையில், உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் வீடு எந்த ராசி என்று காண வேண்டும். அந்த ராசியுடன் தொடர்புடைய சிவ மந்திரம் என்ன? என்பதை அறிந்து, அந்த சிவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். புது தொழிலை தொடங்க விரும்பும் நபர்களுக்கும் இந்த மந்திரம் உதவி செய்யும்.
ஒவ்வொரு ராசிக்கான சிவ மந்திரம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்:
∙ மேஷம்: ஓம் நமசிவாய
∙ ரிஷபம்: ஓம் நமசிவாய
∙ மிதுனம்: ஓம் நமசிவாய
∙ கடகம்: ஓம் சந்திரமௌலீஷ்வர நம
∙ சிம்மம்: ஓம் நமசிவாய காலம் மகாகால் காலம் கிருபாலம் ஓம் நமஹ
∙ கன்னி: ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ
∙ துலாம்: ஓம் நமசிவாய
∙ விருச்சிகம்: ஓம் ஹௌம் ஜூம் சஹ்
∙ தனுசு: ஓம் நமோ பகவதே ருத்ராய
∙ மகரம்: ஓம் நமசிவாய
∙ கும்பம்: ஓம் நமசிவாய
∙ மீனம்: ஓம் நமசிவாய குரு தேவாய நம
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு சிவப்பு நிற ஆடையை சாற்றி சிவப்பு நிற குங்குமம் மற்றும் சிவப்பு வளையல் வைத்து வழிபடுங்கள். எலுமிச்சை பழத்தில் இந்த கிராம்பை குத்தி பின் கையில் வைத்து “ஓம் ஸ்ரீ ஹனுமதே நமஹ” எனும் மந்திரத்தை சரியாக 21 முறை உச்சரிக்க வேண்டும். பின் இந்த எலுமிச்சை பழத்தை உங்கள் அலுவலக பையில் அல்லது அலுவலக மேசையில் வைத்துக்கொள்ளலாம்.
பணியிடத்தில் நிலைத்தன்மை, புதிய வேலை மற்றும் பணியிட பிரச்சனைகளை தவிர்க்க காயத்திரி மந்திரம், மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உதவும். குறித்த இந்த மந்திரங்களை தினமும் பூஜை நேரத்தில் சரியாக 31 முறை உச்சரிக்க வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வர, உங்கள் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வாழ்க்கையில் உண்டாகும் தடைகளும் நீங்கும்.
வேலை நிரந்தரமாக இருக்க சூரிய நமஸ்காரம் மற்றும் குரு பகவான் வழிபாடு செய்யலாமாம். ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய ஒளி உங்கள் மீது படும்படி கிழக்கு நோக்கி அமர்ந்து, ஒரு பாத்திரத்தில் உள்ள நீரை பார்த்து, “ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம் அதுமட்டுமின்றி, ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ என்ற மந்திரத்தை ஜெபிப்பது செல்வம் மற்றும் நல்ல நிரந்தரமான வேலை கிடைக்க உதவும் என சொல்லப்படுகிறது
September 11, 2025
September 10, 2025
September 10, 2025