நம்மில் பெரும்பாலோருக்கு தேவை கருதி கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு வாங்கும் கடனை முறையாக அடைத்து முடிக்கும் வரை நம் மனதில் நிம்மதி இருக்காது. கிடைக்கும் வருமானத்தில் முதல் செலவாக கடனை அடைத்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் தான் நம்மால் சரியாக கடனை அடைத்து முடிக்க இயலும். ஆனால் சில சமயங்களில் நாம் எண்ணுவது போல நடப்பதில் சில சிரமங்கள் இருக்கலாம். எப்பாடுபட்டாவது கடனை அடைத்து முடிக்க வேண்டும் என்று நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொள்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று கூறப்படுவதால் செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கடன் வாங்கி மன நிம்மதி இன்றி கடனில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு அதில் இருந்து மீள்வதற்கான எளிய வழியைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இன்று செவ்வாய்க்கிழமை. மேலும் பிரதோஷ நாள். பிரதோஷத்துடன் கூடிய செவ்வாய் அன்று கடன் நீங்க வழிபாடு செய்வது நல்லது. இது ஆடி மாதம் என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். மேலும் இன்று செவ்வாய்க்கிழமை எனவே, முருகப்பெருமான் வழிபாடு நல்ல பலன் அளிக்கும். மேலும் பிரதோஷ தினம் என்பதால் சிவ வழிபாடு நல்ல பலன் அளிக்கும். அதிலும் பிரதோஷம் அன்று கடன் தீர வழிபடுவது நன்று. இந்த வழிபாட்டை எளிமையாக மேற்கொள்ளலாம். இன்று உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் ஒரு வேளை உணவு உண்டு உபவாசம் இருக்கலாம்.
இன்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று சிவன், அம்பாள் மற்றும் முருகரை வழிபட்டு வருவது நல்லது. அவ்வாறு செல்லும் போது நீங்கள் கடன் வாங்கிய தொகையில் ஒரு பகுதியை கையோடு எடுத்துச் செல்லுங்கள். அது சிறு தொகையாக இருந்தாலும் சரி. உங்கள் கடன் தீர வேண்டும் என்று கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு யாருக்கு கடன் தீர்க்க வேண்டுமோ அவரிடம் நேரில் சென்று குறிப்பிட்ட தொகையை அளித்து விட்டு வாருங்கள். மீதி தொகையை விரைவிலேயே அடைத்து விடுகிறேன் என்று கூறிவிட்டு வாருங்கள்.ஒரு சிலருக்கு வங்கி மூலம் தான் கடன் தொகை செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் வங்கியில் இந்த தொகையை கட்டி விட்டு வரலாம். மேலும் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் தான் கடன் தொகையை அடைக்க வேண்டியிருக்கும். அதாவது EMI கட்டுபவர்கள் இன்றைய தினத்தில் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள். செவ்வாய்க்கிழமையில் வாங்கிய பணத்தை திரும்பத் தருவதன் மூலம் விரைவிலேயே கடனை அடைத்து விட முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரதோஷ நேரம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த நேர வழிபாடு பணமாக நாம் வாங்கிய கடன் மட்டும் இன்றி நமது பிறவிக் கடனையும் நீக்கும் நல்ல வழிபாடு ஆகும்.
இவ்வாறு செய்தால் உங்கள் கடன் விரைவில் அடையும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025