சனி பகவானை வழிபாடு செய்தால், நம் ஜாதக கட்டத்தில் இருக்கும் சனி தோஷங்கள் விலகும். ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஷ்டமத்து சனி என்று எந்த சனி தோஷம் உங்கள் ஜாதக கட்டத்தில் இருந்தாலும், சனிபகவானால் உங்களுடைய வாழ்க்கையில் பல கெடுதல்கள் நடக்கும் பட்சத்தில், சனிபகவானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக சனி தோஷம் குறையும்.
சிலருக்கு கடினமாக உழைத்தாலும் புத்திசாலித்தனமாக உழைத்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டாலும் சாதுரியமான அணுகுமுறையை மேற்கொண்டாலும் வெற்றி என்பது கிட்டவே கிட்டாது. இவர்கள் அனைவரும் கடந்த பிறவியில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த பிறவியில் வெற்றியை ருசிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த பிறவியில் பாவம் செய்திருந்தால் இந்த பிறவியில் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றாலும் கடந்த ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்களை இந்த பிறவியில் தொலைக்க வேண்டும்
ஓர் எளிய பரிகாரத்தின் மூலம் இதனை அதனை நிறைவேற்றலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கைப்பிடி பச்சரிசி, கைப்பிடி அளவிற்கு உலர் திராட்சை.
கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமையில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான சனி ஹோரையில் வீட்டை விட்டு வெளியில் வந்து கிழக்கு திசை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு பிறகு அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும்.
வலம் வரும்போது உங்களுடைய கைப்பிடியில் இருக்கும் பச்சரிசி பொடியை சிறிது சிறிதாக தூவிக்கொண்டே வாருங்கள். உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி பச்சரிசி மாவு மூன்று சுற்றுக்குள் தீர்ந்துவிடும்.
அதன் பிறகு விநாயகரிடம், ‘கடந்த பிறவியில் செய்த பாவங்கள் தொலைய வேண்டும். இப்பிறவியில் எமக்கான நற்பலன்களை பெறுவதற்கு அருள வேண்டும்’ என பிரார்த்திக்க வேண்டும்.
உங்களுடைய அரிசி மாவினை அந்த ஆலயத்தை சுற்றியுள்ள எறும்புகள் எந்த அளவிற்கு உணவாக எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவிற்கு உங்களுடைய பாவங்கள் படிப்படியாக குறைந்து விடும். இதனை தொடர்ச்சியாக எட்டு சனிக் கிழமைகள் வரை மேற்கொண்டால் உங்களுடைய கடந்த பிறவி பாவங்கள் தொலைந்து இந்த பிறவியில் உங்களுக்கான நற்பலன்கள் கிடைக்கும்.
சிலர் எட்டு வாரம் அல்ல அதற்கு மேலும் நான் தொடர்ச்சியாக பச்சரிசி மாவு பரிகாரத்தை மேற்கொண்டு இருக்கிறேன். ஆனால் வெற்றி மற்றும் கிடைத்தபாடில்லை என்பவர்கள் சனிக்கிழமையில் காலையில் எழுந்ததும் கைப்பிடி அளவிற்கு உலர் திராட்சையை எடுத்து காகத்திற்கு உணவாக இட வேண்டும். அந்த உலர் திராட்சையை காகம் எடுத்து செல்லத் தொடங்கினால் உங்களுடைய பாவங்கள் குறைய தொடங்குகிறது என பொருள். இதனையும் தொடர்ச்சியாக 48 நாட்கள் அல்லது எட்டு சனிக்கிழமைகளில் இதனை காலையில் சனி ஹோரையில் மேற்கொள்ளும்போது உங்களுக்கான பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு அதிகரித்து, இந்த பிறவியில் நீங்கள் பெறவேண்டிய நற்பலன்கள் அதிவிரைவாக கிடைக்கும்.
இந்த பரிகாரம் செய்து முடித்தவுடன் உங்கள் வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் எங்கு இருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை முதலில் வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோவிலா, அம்மன் கோவிலா, பிள்ளையார் கோவிலா, எந்த கோவிலாக இருந்தாலும் அந்த தெய்வத்திடம் முதலில் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, பிறகு நவகிரகத்திடம் செல்லுங்கள். சனி பகவானுக்கு 2 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நீல நிற சங்குப்பூ வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சனியின் பிடியில் இருந்து தப்பிக்க்கலாம். சனி தோஷம் உங்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை அளிக்காது.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025