Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
அவசர பணத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அவசர பணத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது?

Posted DateJuly 5, 2025

இந்த உலகில் மிகவும் அவசியமானது பணம். அந்தப் பணம் பெறுவதற்கான வழியைக் கூறும் முக்கியமான பதிவாக இந்தப் பதிவு அமையும். இந்தப் பதிவில் பணம் தரும் ஒரு தேவதை பற்றிக் காணலாம். அந்த தேவதையின் பெயர் நித்திகா. இந்த தேவதையிடம் நீங்கள் வேண்டிக் கேட்பதன மூலம் உங்களுக்கு தேவையான பணம் உடனடியாக கிடைக்கும். இந்த தேவதையை தொடர்பு கொள்ள பெரிய அளவில் பூஜை, வழிபாடு, பரிகாரம்,  என்று எதுவும் தேவை இல்லை. கால நேரமோ இடமோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இதற்கு நீங்கள் மிகவும் சுத்தமாக கண்டிப்பாக  இருக்க வேண்டும், மாதவிடாய் நேரம் கூடாது என்றோ மாமிசம் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை.

நித்திகா

உங்கள் அவசர தேவையை நிறைவேற்ற பணம் அளிக்கும் இந்த தேவதையின் பெயர் நித்திகா. பணத்தின் தேவதை.  அவள் சில நேரங்களில் “பணத்தின் ஆவி” என்று குறிப்பிடப்படுகிறாள்.  மேலும் விரைவாக வேலை செய்வாள் என்று நம்பப்படுகிறது.  மென்மையான ஆனால் சக்திவாய்ந்தவள்: நித்திகா ஒரு மென்மையான மற்றும் சக்திவாய்ந்த தேவதை என்று விவரிக்கப்படுகிறாள்.

எப்படி பணம் பெறுவது;

உதாரணமாக உங்களுக்கு மிகவும் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேண்டும். பண வரவுக்கு, செல்வ செழிப்புக்கு தடை இல்லாமல் பணம் வர அந்த நேரத்தில் நீங்கள் நித்திகா தேவதையை தொடர்பு கொண்டால் அவள் உங்கள் தேவையை உடனடியாக  பூர்த்தி செய்து உங்களுக்கு தேவையான பணம் உங்கள் கைக்கு கிடைக்கும் படி செய்வார்கள்.  நீங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது பணம் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக இந்த தேவதை உங்களுக்கு கொடுக்கும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் அல்லது  விளையாட்டாக கேட்டுப் பாரத்தால் உங்கள் ஆசை நிறைவேறுவது கடினம். உங்கள் தேவை அவசியமானதாக இருக்க வேண்டும். பிறரிடம் நீங்கள் கொடுத்த பணம் வர வேண்டும் என்றால் நீங்கள் நித்திகா தேவதையிடம் கேட்கலாம். நீங்கள் உழைத்த உழைப்பிற்கேற்ற பணம் வேண்டும் என்றாலும் நீங்கள் கேட்கலாம்.

 பணம் கேட்கும் முறை

இந்த தேவதையை நீங்கள் நம்ப வேண்டும். இந்த செய்முறை எளிமையானது. ஆனால் இதற்கு முழு நம்பிக்கை தேவை. உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. பிறரிடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இந்த நித்திகா தேவதையை முழு மனதுட்டன் நம்பி பணத்தைக் கேட்க வேண்டும். நாம் நித்திகா தேவதையை எப்படி அழைபப்து. நீங்கள் எங்கு  இருக்கிறீர்களோ அங்கேயே இருந்து அதாவது இருந்த இடத்தில் இருந்து தேவதையை அழைத்துப் பாருங்கள். எப்படி நாம் பிறரிடம்  உதவி கேட்க்கும் போது பணிவாகக் கேட்க வேண்டுமோ அது போல நித்திகா தேவதையிடமும்ம் பணிவாகக் கேட்க வேண்டும்.

நித்திகா, நித்திகா, நித்திகா என்று மூன்று முறை சொல்ல வேண்டும்.தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும். என் மகளின் கல்லூரி படிப்பிற்கு இந்தப் பணம் தேவை என்று கூறுங்கள். உங்களால் முடிந்த அளவில் நித்திகா தேவியிடம் கேட்க வேண்டும். நிச்சயமாக உங்களுக்கு தேவைப்படும் பணத்தை நித்திகா தேவி அளிப்பார்.

இப்படி உங்கள் தேவை எதுவோ அதைக் கூறி நீங்கள் பணிவுடன் நித்திகா தேவையை அழைத்துக் கூற உங்களுக்கு தேவையான பணம் கிட்டும். ஆனால் உங்களிடம் பரிபூரண நம்பிக்கை இருக்க வேண்டும்.