Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

Posted DateJuly 1, 2025

நாம் தூங்கி விழித்து எழும் ஒவ்வொரு நாளும் நமக்கு வரம் என்று கூறலாம். ஒவ்வொரு நாளும் நல்ல விதமாகப் போக வேண்டும் என்ற  எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஒரு வருடம் தொடங்கும் போது, ஒரு மாதம் தொடங்கும் போது,ஒரு வாரம் தொடங்கும் போது ஒரு நாள் தொடங்கும் போது என ஒவ்வொரு தொடக்கமும் நமக்கு நல்லதாக இருந்து விட்டால் மீதி இருக்கும் காலநேரம்  முழுவதும் நல்லதாகவே இருக்கும் என நம்பலாம்.

*மாதம் பிறக்கும் போது இந்த கயிறை கையில் கட்டிக் கொண்டால் போதும். அந்த மாதம்  முழுவதும் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும்.

ஆன்மீகம் சார்ந்த இந்த கயிறு பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, வாழ்க்கையில் வெற்றியை எப்படி சீக்கிரம் அடைவது, நம் குறிக்கோளில் தடைகள் வராமல் இருக்க என்ன செய்வது, நம்முடைய எண்ணங்களை எப்படி மாற்றினால், முயற்சிகளில் தடை வராமல் இருக்கும் என்பதை பற்றிய ஒரு சின்ன மேனிஃபேஸ்டேஷன் (manifestation) மெத்தடை முதலில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிறகு அந்த ஆன்மீகம் சார்ந்த கயிறு பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

 எண்ணம் போல வாழ்க்கை என்பார்கள். நமது எண்ணங்கள் தான் நமக்கு வினையாக நமது வாழ்கைக் கேள்விகளுக்கு விடையாக வருகிறது. எனவே நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு எப்படி இருக்கிறதோ, நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொண்டு, நேர்மறையான விஷயங்களை சிந்திக்கும் போது, நம்முடைய வாழ்க்கை பாதை நல்லபடியாக செல்லும்.

 உதாரணத்திற்கு காலை எழுந்தவுடன் அவசர அவசரமாக வீட்டு வேலைகளை செய்யும் போது தாமதம் ஆகி விடுமோ முடிக்க முடியுமா அல்லது டிராஃபிக்கில்  சிக்காமல் வண்டி ஓட்டிக்கொண்டு நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணம் நமது மனதில் இருக்கும். செல்கின்றோம். டிராஃபிக்கில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் நம் ஆழ் மனதிற்குள் இருக்குமே தவிர, டிராபிக் இல்லாமல் சென்றடைய வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்று அடைவோம் என்ற நம்பிக்கை நமக்கு குறைவாகவே இருக்கும். இந்த நம்பிக்கையை உயர்த்தக் கூடியது தான் மேனிஃபேஸ்டேஷன். நேர்மறையான எண்ணத்தோடு டிராபிக்கில் சிக்கிக் கொள்வோமோ, என்ற எண்ணத்தை தவிர்த்து விட்டு, நம் செல்லக்கூடிய இடத்திற்கு சரியாக சென்று விடுவோம் என்ற நம்பிக்கை உங்களுடைய ஆழ் மனதில் எப்போது தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள்.

இந்த பரிகாரத்தை நீங்கள் மாத முதல் நாளில் ஒரு கோவிலில் அமர்ந்து செய்யலாம். இதனை நீங்கள் வாரா வாரம் மேற்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சியை வளர்த்துக் கொள்ளலாம். மாத முதல் நாளில் இறைவனை பிரார்த்தனை செய்து, அந்த கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால், இந்த வாரம் உங்களுக்கு எப்படி செல்கிறது என்று நீங்களே பாருங்கள். கடந்த வாரம் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும், இந்த வாரம் தீர்வு கிடைத்து விடும். இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக திகழும். அதற்கு இந்த 7 முடிச்சு போட்ட கயிறு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 நீங்கள் மனதில் எந்த குறிக்கோளை வைத்து 7 முடிச்சு போட்டீங்களா அதை இந்த வாரத்திற்குள் நீங்கள் செய்து முடித்து விடுவீர்கள். இந்த கயிறை பார்க்கும் போதெல்லாம் முடிச்சு போட்ட வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் உங்களுடைய சுறுசுறுப்புக்கு தூண்டுதலாக இருக்கும். பிள்ளையார் கோவில் சிவன் கோவில் அம்மன் கோவில் எந்த கோவிலில் அமர்ந்தும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.  அடுத்த வாரம் கோவில் சென்று கயிற்றை புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதாவது பழைய கயிறை நீக்கி புதியதை கட்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு நான்கு வாரம் செய்வதன் மூலம் அந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சுபமானதாக இருக்கும். வாரா வாரம் செய்ய முடியாதவர்கள் மாதம் ஒருமுறை செய்தால் கூட போதும். இது ஒரு சின்ன, நம்பிக்கை தரும் பரிகாரம் தான். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.