Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்

Posted DateJuly 2, 2025

நாம் பல உலோகங்களை நமது வாழ்வில் பயன்படுத்தினாலும் அவற்றுள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்கம் மற்றும் வெள்ளி கருதப்படுகிறது. ஏனெனில் இவற்றில் தான் நாம் ஆபரணம் செய்து அணிந்து கொள்கிறோம். வெள்ளியுடன் ஒப்பிட்டால் தங்கள் விலை அதிகம் என்பதால் பெரும்பாலோர் வெள்ளி நகைகளை வாங்கி அணிகிறார்கள். அவற்றுள் முக்கியமானதாக இருப்பது  வெள்ளி மோதிரம்  எனலாம். வெள்ளி மோதிரங்கள் மிகவும் மலிவானவை. இது அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வாங்கக்கூடியதாக அமைகிறது. மேலும், வெள்ளி மோதிரங்களை பராமரிப்பது எளிது. அதில் அழுக்கு படிந்தால் கூட  சோப்பு நீரால் சுத்தம் செய்யலாம். அதன் பளபளப்பை மீண்டும் பெற, மெருகு ஏற்றிக் கொள்ளலாம். இதனால், நீண்ட காலத்திற்கு அதன் அழகைப் பாதுகாக்க முடியும்.

வெள்ளியும் சந்திரனும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வெள்ளி ஒரு புனிதமான உலோகம்.  மற்றும் பல்வேறு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி அணிவதால் மன அமைதி, உணர்ச்சி சமநிலை, மற்றும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், வெள்ளி அணிவது உள்ளுணர்வை வெளிப்படுத்தவும், செல்வத்தை ஈர்க்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஜோதிடத்தில் சந்திரனுக்கும் வெள்ளிக்கும் தொடர்பு உண்டு. சந்திரனை மனோகாரகன் என்று கூறுவார்கள். ஏனெனில் சந்திரன் நமது மனம் மற்றும் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் தங்களுக்கு என சில உலோகங்களைக் கொண்டுள்ளன. சந்திரனுக்கு உரிய உலோகமாக வெள்ளி கருதப்படுகிறது  எனவே, வெள்ளி அணிவது மன அமைதி மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி அணிவது உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.  எதிர்மறை ஆற்றல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. சிலர் வெள்ளி அணிவதால் செல்வம் மற்றும் செழிப்பு உண்டாகும் என்று நம்புகிறார்கள்.

வெள்ளியும் உடல் ஆரோக்கியமும்.

மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு அம்சமாக கருதப்படுகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். என்பது போல மன ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான்  உடல் ஆரோக்கியத்தை ஓரளவு பராமரிக்க இயலும். வெள்ளி அணிவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் செரிமானத்திற்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. வெள்ளி உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்கிறது. கோபக்காரர்கள் அல்லது முன்கோபம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளியில் மறைந்திருக்கும் சந்திரனின் அமைதிப்படுத்தும் பண்புகள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக்  கையாள்வதில் ஒரு நபருக்கு பொறுமை, பணிவு மற்றும் நல்லிணக்கத்தை அளித்து அவரை அமைதிப்படுத்துகின்றன.

வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்

ஜோதிடத்தின் படி, உலோகங்கள் மற்றும் ரத்தினங்களால் செய்யப்பட்ட மோதிரங்கள் நம் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு உலோகமும் நவ கிரகத்துடன் தொடர்புடையது. அப்படி, முக்கியமான உலோகங்களில் ஒன்று வெள்ளி. வெள்ளி மோதிரம் அணிவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.வெள்ளி நமது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். குளிர்ச்சி மிகுந்த உலோகம் என்பதால் வெள்ளி மோதிரம் உடல் சூட்டைக் குறைத்து உடலை சமநிலைப் படுத்துகிறது. குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் சூட்டு உபாதைகளை தவிர்க்கலாம். நாம் குளிக்கும் போது வெள்ளி மோதிரம் மீது பட்டு நமது உடலில் ஓடும் நீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும்  மனதை அமைதிப்படுத்தி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இது மனநிலையை சீராக்கி, பதட்டம் மற்றும் கோபத்தைக் குறைத்து, நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும். மேலும், இது ஒருவரது ஆளுமைத்திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வெள்ளி செல்வச் செழிப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. வெள்ளி நகை அணிவதன் மூலம் நிதிநிலை மேம்படும். பொருளாதார ரீதியாக வாழ்க்கை மேம்படும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிவது பணவரவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

வெள்ளி அணிய ஏற்ற ராசிகள்:

கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது மிகவும் மங்களகரமானது என்று கருதப்படுகிறது.

ரிஷபம், துலாம் மற்றும் மகரம்: இந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவதால் நல்ல அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.