Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஆஸ்ட்ரோவேதில் நாடி ஜோதிடம் | Sri Agathiyar Nadi Jothidam
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆஸ்ட்ரோவேதில் நாடி ஜோதிடம்

Posted DateJune 16, 2025

ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று நாடி ஜோதிடம் ஆகும். இது மிகவும் பழமையான ஜோதிட முறை ஆகும். பண்டைய  ரிஷிகள் குறிப்பாக,  அகத்திய ரிஷி,  தங்களின் ஞான திருஷ்டி அல்லது தீர்க்க தரிசனம் மூலம் உலகில் பிறக்கும் ஓவ்வொரு மனிதருக்கும் இன்னின்ன விஷயங்கள் இன்னின்ன காலத்தில் நடக்கும் என்று எழுதி  வைத்து இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

இது கர்மா மற்றும் விதியின் மீதான ஆழமான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.  நமது கடந்த கால செயல்கள் (கர்மா) நமது தற்போதைய சூழ்நிலைகளை பாதிக்கின்றன மற்றும் நமது எதிர்கால நிகழ்வுகளை வடிவமைக்கின்றன என்ற கொள்கையின் அடிப்படையில் இது செயல்படுகிறது. ஒரு தனிநபரின் தனித்துவமான கட்டைவிரல் ரேகையை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நாடி ஜோதிடர்கள் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தின் மர்மங்களை வெளிப்படுத்த முடியும்.

நாடி சாஸ்திரம் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

கட்டைவிரல் ரேகை – நாடி ஜோதிடம் காண, வேத  ஜோதிடத்திற்கு தேவைப் படுவது போல பிறந்த இடம், தேதி, வருடம் ஊர், போன்றவை தேவை இல்லை. இதற்கு ஒருவரின் கை கட்டை விரல் ரேகையே போதுமானது. ஆண்கள் தங்கள் வலது கை கட்டைவிரல் ரேகையை வழங்க வேண்டும்.  பெண்கள் தங்கள் இடது கை கட்டைவிரல் ரேகையை வழங்க வேண்டும். இந்த உலகில் பிறந்த மனிதர்களுக்கு கை ரேகை ஒருவருக்கு இருப்பது போல மற்றவருக்கு இருக்காது.

சுவடியைக்  கண்டறிதல் – முன்பே கூறியது போல ரிஷிகளால் எழுதப் பட்டத்தால் பண்டைய தமிழ் மொழியில் இது ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு இருக்கும்.  பல ஓலைச் சுவடிகள் இருப்பதால் நாடி ஜோதிடம் காண வரும்  ஒருவர் அளிக்கும் கட்டைவிரல் ரேகையின் அடிப்படையில், ஜோதிடர் தொடர்புடைய நாடி இலையைத் தேடி எடுப்பார். அதனை ஊர்ஜிதம் செய்து கொள்ள நாடி ஜோதிடம் காண வந்தவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் அதற்கு ஆம் / இல்லை என்று மட்டும் கூறினால் போதுமானது.

படித்தல் மற்றும் விளக்கம் – ஜோதிடம் காண வந்தவரின் சரியான சுவடி கண்டுபிடிக்கப்பட்டதும், ஜோதிடர் பண்டைய தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொண்டு  உங்களுக்கு படித்துக் காட்டுவார். இது ஒரு வகையில் செய்யுள் வடிவில் இருக்கும். ஜோதிடர் அதன் பொருளைப் புரிந்து கொண்டு விளக்குவார். அதில் கூறப்பட்ட பலன்களை உங்களுக்கு படித்துக் காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

பரிகாரங்கள் மற்றும் வழிகாட்டுதல் – முதலில் உங்களுக்கு பொதுவான பலன்கள் கூறப்படும். ஏதேனும் சவால்கள் அல்லது கர்ம சிக்கல்கள் கண்டறியப்பட்டால், பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக தீர்வுகள் பரிந்துரைக்கப்படும்.

ஆஸ்ட்ரோவேதில் நாடி ஜோதிடம்

சென்னையில் ஆஸ்ட்ரோவேதில் நாடி ஜோதிட சேவைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்ட்ரோவேதின் நாடி ஜோதிட வாசிப்பாளர்கள் பல தலைமுறைகளாக நாடி ஜோதிடம் பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். பல வருட அனுபவங்களைப் பெற்றவர்கள். இந்த சேவைகள் வாரத்தின் ஏழு நாட்களிலும் வருடம் முழுவதும் அளிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு பெற்று எந்த நேரத்திலும் நீங்கள் நாடி ஜோதிடம் பார்த்துக் கொள்ளலாம். எங்கள் நாடி ஜோதிட மொழிபெயர்ப்பாளர்கள் உங்களுக்கு தேவைப்படும் மொழிகளில் சுவடிகளை வாசித்து மொழிபெயர்த்துக் கூறுவார்கள். அனுபவம் மிக்க நாடி ஜோதிடர்களைக் கொண்டு பலன்களைக் கூறும் எங்கள் மகத்தான சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள இன்றே நீங்கள் எங்களை அணுகலாம்.

நாடி ஜோதிடக் கலையில் ஆஸ்ட்ரோவேதின் சிறப்பம்சம்

ஆஸ்ட்ரோவேதில் பல  வருடங்களாக ஓலைச் சுவடியை பாதுகாத்து வருகிறார்கள்.  மற்றும் அதனை வாசித்து அளிப்பதை  நன்கு அறிந்த ஜோதிடர்கள்  இங்கு இருக்கிறார்கள். .

சிறந்த முறையில் ஓலைச் சுவடிகளை படித்து உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்குகிறார்கள்.

அவர்கள்  தெய்வீக பரிகாரங்கள் மூலம் ஜோதிடம் காண வருபவரின் வாழ்வில் இருக்கும். சவால்களைத் தீர்க்க உதவுகிறார்கள்.

நாடி ஜோதிடம் மூலம் உங்கள் முக்காலம் பற்றி அறியவும் வாழ்வில் கான்பப்டும் சிக்கலகளை தீர்க்கவும் ஆஸ்ட்ரோவேதை  அணுகுங்கள்.