பிரதிபட ஸ்ரேணி பீஷண-வர குண ஸ்தோம பூஷண
ஜனி பய ஸ்தான தாரண ஜகதவ ஸ்தான காரண
நிகில துஷ் கர்ம கர்சன நிகம சத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன –1-
தன் பக்தர்களுக்கு அநீதி இழைப்பவர்களின் கடுமையான எதிரியாக இருப்பவர்,நல்ல செயல்களைச் செய்பவர்கள் அனைவருக்கும் ரத்தினம் போன்றவர்,வாழ்க்கையின் ஆழமான மற்றும் நிலையற்ற கடலைக் கடக்க மனிதனுக்கு உதவுபவர்,முழு பிரபஞ்சத்தையும் முழுமையாக நிலைப்படுத்தும் எஜமானர்,எல்லாத் தவறுகளையும் பாவங்களையும் நீக்குபவர்,நமக்கு நீதியான நடத்தையைக் கற்றுக்கொடுப்பவர்.அந்த தெய்வீக சுதர்சனத்திற்கு வணக்கம்,அந்த தெய்வீக சுதர்சனத்திற்கு வணக்கம்.
ஸூ ப ஜகத்ரூப மண்டன ஸூர கண த்ராச கண்டன
சதமக ப்ரஹ்ம வந்தித -சத பத ப்ரஹ்ம நந்தித
பிரதித வித்வத் சபஷித-பஜத ஹிர்ப்புந்த்ய லஷித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–2-
பிரபஞ்சத்தின் உன்னத எஜமானரால் அலங்கரிக்கப்பட்டவர், எல்லாவற்றிலிருந்தும் தீமையான அனைத்திற்கும் பயத்தை நீக்குபவர்.பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மா மற்றும் பிற கடவுள்களால் வணங்கப்படுபவர்,எல்லா ஞானிகளாலும் வணங்கப்படுபவர், பக்தர்கள் தங்களை எதிர்ப்பவர்களை வெல்ல உதவுபவர். சிவபெருமானால் வணங்கப்பட்டு வியக்கப்படுபவர், பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்து தீமைகளையும் அழிப்பவர்.அந்த தெய்வீக சுதர்சனனுக்கு நமஸ்காரம், அந்த தெய்வீக சுதர்ஷனாவுக்கு நமஸ்காரம்.
ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர-ப்ருததர ஜ்வலா பஞ்ஜர
பரிகத ப்ரத்ன விக்ரஹ -படுதர ப்ரஞ்ஜ துர்க்ரஹ
ப்ரஹரண க்ராம மண்டித -பரி ஜன த்ராண பண்டித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூதர்சன–3-
பிரகாசிக்கும் மின்னல் கூட்டம் போலே சிவந்த பொன் வண்ணம் கொண்டவர். மிகப் பெரிய அக்னி கொழுந்துகளாலான ஸமூஹத்தை உடையவரேர் யந்த்ரத்திலும் சுற்றிலும் சிறந்த திரு மேனியை உடையவர். மிகக் கூர்மையான அறிவு உடையாராலும் அரிய முடியாதவர். திவ்ய ஆயுத ஸமூஹங்களால் அழகு படுத்தப் படுபவர். ஆஸ்ரித ரக்ஷணத்திலே பண்டிதர். இத்தகு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்
நிஜ பத ப்ரீத சத் கண நிரு பதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர் வ்யூட வைபவ நிஜ பர வ்யூஹ வைபவ
ஹரி ஹய த்வேஷி தாரண ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–4-
தனது திருவடிகளில் பக்தி உடைய நல்லவர்களின் ஸமூஹங்களை உடையவரே, ஸ்வாபாவிக பரி பூர்ண ஞானாதி ஷட் குணங்களை உடையவரே, ,தங்களால் ஸ்தாபிக்கப் பட்ட பெருமையை உடையவரே
தனது பரம் வ்யூஹம் ஆகிய திரு மேனியின் பெருமையை உடையவரே,இந்திரனது விரோதிகளை ஒழித்தவரே, சிவனது பட்டணம் வெந்து எரிவதற்கு காரணம் ஆனவர். ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
தநுஜ விஸ்தார கர்த்தன ஜநி தமிஸ்ரா விகர்த்தன
தநுஜ வித்யா நிகர்த்தன பஜத வித்யா நிவர்த்தன
அமர த்ருஷ்ட ஸ்வ விக்ரம சமர ஜுஷ்ட ப்ரமி க்ரம
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–5-
அசுரர்களின் வளர்ச்சியை அறுப்பவரே, சம்சாரமாகிய இருண்ட இரவுக்கு ஸூர்யன் போன்றவரே, அசுரர்களின் மாயையை ஒழிப்பவரே
பக்தர்களின் அறியாமையைப் போக்குபவரே, தேவர்களால் காணப்பட்ட தமது வீர்யத்தை உடையவரே, போரில் கையாளும் சுழற்சி முறைகளை உடையவரே, ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
ப்ரதி முகா லீட பந்துர ப்ருது மஹா ஹேதி தந்துர
விகட மாயா பஹிஸ்க்ருத விவித மாலா பரிஷ்க்ருத
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–6-
திருவடிகளை முன்னும் பின்னும் வைத்து அழகாக இருப்பவரே
மிகப் பெரிய திவ்ய ஆயுதங்களால் சூழப் பட்டு இருப்பவரே
கொடிய மாயைகளுக்கு அப்பால் பட்டவரே
பல மாலைகளால் அலங்கரிக்கப் படுபவரே
நிலையான பெரிய யந்திரத்தில் இருப்பவரே
உறுதியான கருணை என்னும் கட்டுத் தறியில் கட்டுப் பட்டவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
மஹித சம்பத் சத ஷர விஹித சம்பத் ஷட ஷர
ஷடர சக்ர ப்ரதிஷ்டித சகல தத்வ ப்ரதிஷ்டித
விவித சங்கல்ப கல்பக விபுத சங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–7-
மிக உயர்ந்த செல்வமான ஞானத்தை உடைய சாதுக்களுக்கு அழியாத மோக்ஷம் அளிப்பவரே, அளிக்கப்பட்ட செல்வங்களை உடைய ஆறு எழுத்து மந்த்ரத்தை உடையவரே, ஆறு கோணங்களை உடைய சக்கரத்தில் நிலையாக இருப்பவரே, எல்லா தத்துவங்களின் உள்ளே நிற்பவர் ஸமஸ்த அபேக்ஷைகளையும் அளிப்பவரே, கற்பக வ்ருஷம் போன்றவரே, ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
புவன நேத்ர த்ரயீ மய சவன தேஜஸ் த்ரயீ மய
நிரவதி ஸ்வாது சின்மய நிகில சக்தே ஜகன் மய
அமித விஸ்வ க்ரியா மய சமித விஷ்வக் பயாமயா
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–8-
உலகங்களுக்கு கண் போன்றவரே, மூன்று வேதங்களின் வடிவம் ஆனவரே, யாகங்களில் மூன்று அக்னிகளின் வடிவம் ஆனவரே
அபரிமித ஞான ஆனந்த திவ்ய வடிவம் ஆனவரே, சர்வ சக்தியும் ஆனவரே, உலக வடிவம் ஆனவரே, அளவற்ற சர்வ கர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவரே, எங்கும் பரந்த நோயையும் அச்சத்தையும் ஒழித்தவரே, ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
இதி ஸூ தர்சன அஷ்டகம் சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே
ஸ்ரீ மாதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ
September 19, 2025
September 17, 2025
September 15, 2025