Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
குருபூர்ணிமா 2025 தேதி, நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குருபூர்ணிமா தேதி, நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்

Posted DateJune 26, 2025

குருபூர்ணிமாவைக் கொண்டாடி குருவின் அருளைப் பெற்றிடுங்கள்

குரு பூர்ணிமா என்றால் என்ன? குரு பூர்ணிமா தெய்வீகத் தன்மை மிகுந்த நாள் இதனை வியாச பூர்ணிமா என்றும் கூறுவார்கள். மகாபாரதம் மற்றும் வேதங்கள் போன்ற பல அடிப்படை இந்து நூல்களைத் தொகுத்து அளித்த  பெருமைக்குரிய வியாச முனிவரை இந்த நாள் கௌரவிக்கிறது. என்றாலும்  நமக்கு அறிவொளியை வழங்கிய அனைவரையும் நினைவில் வைத்து கொண்டாடும் நாளே குரு பூர்ணிமா நாள் ஆகும்.  மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். நமக்கு உயிர் அளித்தவள் அன்னை. உலக அறிவை அளித்தவர் தந்தை.நமக்கு வித்தை கற்றுக் கொடுத்து  நல்ல நெறிமுறைகளைப் பின்பற்ற  நல்வழி காட்டுபவர் குரு.குரு பூர்ணிமா, இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். வழிகாட்டும் விளக்குகளாகவும் அறிவை வழங்குபவர்களாகவும் செயல்படும் குருக்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் நன்றியைத் தெரிவிக்கும் நேரம் இது. ‘குரு’ என்ற வார்த்தையே ‘இருளை அகற்றுபவர்’ என்று பொருள் தரும். இது அறியாமையை அகற்றி ஞானத்தை நோக்கிய பாதையை ஒளிரச் செய்வதில் அவர்கள் வகிக்கும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

குரு பூர்ணிமா 2025: தேதி, நேரம்

ஜூலை 10, 2025 அன்று காலை பௌர்ணமி திதி 01.36 மணிக்கு தொடங்குகிறது

ஜூலை 11, 2025 அன்று  அதிகாலை 02:06 பௌர்ணமி திதி முடிகிறது

 

குரு-சீடர் உறவு

இந்த நாள் குரு – சீடர் உறவை எடுத்துக் காட்டுகிறது கண் போன்ற கல்வி அறிவைப் புகட்டும் குருவை, அறியாமை இருளை நீக்கி ஒளி பாய்ச்சும் குருவிற்கு ஒரு சீடர் கடன் பட்டிருப்பதை இந்த நாள் எடுத்துக் காட்டும். குருவால் பெறப்பட்ட அறிவுக்கு ஈடு இணையாக எதையும் அளிக்க முடியாது என்றாலும் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் சீடர்கள் தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்துவார்கள். அதன் மூலம் அவர்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் நாடுகிறார்கள்.

குரு பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது.?

குரு பூர்ணிமா தொடர்பான பல புராண வரலாறு கூறப்படுகிறது. இந்த நாளில் தான் சிவ பெருமான் தனது போதனைகளை பிறருக்கு அளித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு கதை மூலம் வேத வியாசர் தனது ஞானத்தை  தனது நான்கு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. . புத்த மதத்தில், புத்தர் இந்த நாளில் சாரநாத்தில் தனது சீடர்களுக்கு தனது முதல் பிரசங்கத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சமண மத்தில் மகாவீரர் தனது முதல் சீடரைப் பெற்ற நாளாக. கூறப்படுகிறது. மொத்தத்தில் குரு பூர்ணிமா என்பது ஒரு நபரை அறியாமை என்னும் இருளில் இருந்து நீக்கி வழிகாட்டும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக கருதப் படுகிறது.

குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம்

இந்த விழா ஒரு மத அல்லது ஆன்மீக நிகழ்விற்கு அப்பாற்பட்டது. இது சமூக மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்த நாளில், சுற்றியுள்ள தனிநபர்கள் தங்கள் ஆசிரியர்களையும் வழிகாட்டிகளையும் கௌரவிப்பதற்காக ஒன்றிணைந்து கூட்டுப் பாராட்டுதலின் ஒரு அழகான காட்சியை நாம் காண்கிறோம். ஆசிரியர்கள், அவர்களின் பல்வேறு பாத்திரங்களில், நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை,  ஏற்படுத்தும் தாக்கத்தை இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டும் நாளாக இருக்கிறது. குரு பூர்ணிமா என்பது தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் வடிவமைப்பதில் கல்வியாளர்கள் வகிக்கும் அடிப்படைப் பங்கை ஒப்புக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். ஆலயம் செல்வதன் மூலமாகவோ, ஆசிரமங்களில் ஆசீர்வாதம் பெறுவதன் மூலமாகவோ அல்லது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துவதன் மூலமாகவோ, குரு பூர்ணிமா நம் மனதையும் நம் ஆர்வங்களையும் ஒளிரச் செய்பவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான அங்கீகாரமாக ஆதரிக்கிறது. இந்த கொண்டாட்டம் குரு பூர்ணிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, அவர்கள் தன்னலமின்றி அறிவையும் ஞானத்தையும் வழங்குகிறார்கள், நமது பாதைகளையும் விதிகளையும் வடிவமைக்கிறார்கள், அவர்கள் நமது ஆசிரியர்கள், வழிகாட்டிகள். இந்த நன்னாளில் அத்தகைய வழிகாட்டிகளுக்கு மரியாதை செலுத்தி நன்றியை வெளிப்படுத்துகிறார்கள்.

வேத வியாசர்

வேத வியாசர்  பராசர முனிவருக்கும், சத்யவதிக்கும் யமுனை நதியில் உள்ள கல்பி என்ற தீவில் பிறந்தவர் என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராசர முனிவர் வசிஷ்ட முனிவரின் பேரன். பராசர முனிவரின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அவருக்கு பிறக்கும் மகன் வசிஷ்ட முனிவருக்கு இணையான பிரம்மரிஷியாக இருக்கவும் ஒரு வரத்தை அவருக்கு வழங்கினார். வேத வியாசரின் தாயார் சத்யவதி  கருத்தரித்து வியாசரைப் பெற்றெடுத்ததாக புராணக்கதை கூறுகிறது. வேத வியாச முனிவர் ‘தீவில் பிறந்தவர்’ என்று பொருள்படும்வகையில்  த்வைபாயனர் என்றும் அழைக்கப்பட்டார், வேதங்களை எழுத்து வடிவமாக மாற்ற விஷ்ணு விரும்பினார். அந்தப் பணியை பரந்த அறிவு வாய்ந்த வேத வியாசருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. உபநிடதங்கள், வேதங்கள் மற்றும் தர்மசாத்திரங்களைப் பற்றிய அறிவு அவருக்கு  இயல்பாகவே இருந்தது, அவர் விஷ்ணுவின் விருப்பப்படி வேத வியாசராகப் பரிமளித்தார்.

 

குரு பூர்ணிமா ஏன் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது?

இந்த நாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மகத்தான படைப்பான மகாபாரதத்தின் ஆசிரியரும் கதாபாத்திரமுமான வேத வியாசரின் பிறந்த நாளாக நினைவுகூறப்படுகிறது. இந்து மதத்தில் குறிப்பிடத்தக்க குருக்களில் சிலர் ஸ்ரீ மத்வாச்சாரியார், ஆதி சங்கரர் மற்றும் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா.இவர்களைக் கொண்டாடும் விதமாகவும் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. கௌதம புத்தரை கௌரவிக்கும் விதமாக பௌத்தர்களும் குரு பூர்ணிமாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் உத்தரபிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் புத்தர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. உங்கள் உண்மையான குரு உண்மையிலேயே உள்ளே இருக்கிறார். அவர்தான் அனைத்து பயத்தையும் அறியாமையையும் அகற்றுபவர். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது போல், உண்மையான அறிவின் ஒளியால் ஒளிரும் உண்மையான ஆசிரியர் அவர் மட்டுமே. உங்கள் குரு உங்களுக்குள் இருக்கும் குருவுடன் இணைவதற்கு உதவுகிறார்.

 

குருபூர்ணிமா விரத முறை

காலையில் எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணியுங்கள். விரதத்திற்காக ஒரு சுத்தமான பலிபீடம் அல்லது புனித இடத்தை அமைக்கவும். பலிபீடத்தில் உங்கள் குருவின் படம் அல்லது சிலையை வைக்கவும். ஒரு விளக்கு மற்றும் தூபத்தை ஏற்றி வைக்கவும். குருவுக்கு பூக்கள், பழங்கள், இனிப்புகள் மற்றும் பிற பிரசாதங்களை படைக்கவும். குரு மந்திரத்தை  (ஓம் குருப்யோ நமஹ) பக்தியுடன் சொல்லுங்கள். குருவைப் புகழ்ந்து பாடல்கள் அல்லது பஜனைகளைப் பாடும்போது ஆரத்தி  செய்யுங்கள். குருவிடமிருந்து ஆசீர்வாதம், வழிகாட்டுதல் மற்றும் ஞானத்திற்கான பிரார்த்தனைகளுடன் விரதத்தை முடிக்கவும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கவும்.

குரு பூர்ணிமா அன்று தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். ஆலயம் சென்று தட்சிணாமூர்த்திக்கு பூஜை அர்ச்சனை செய்ய வேண்டும். நல்ல ஞானமும் அறிவும் பெற அவரை வேண்டி வழிபட வேண்டும்.

மேலும் நமக்கு அறிவு புகட்டிய அனைவரையும் குருவாக நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக இந்த நாள் அமைகிறது. வாழ்க்கையில் வழிகாட்டியாக இருப்பவர்களும் நமக்கு குருவே. அவர்களுக்கு  தக்க காணிக்கை அல்லது வேண்டிய உதவி அளித்து அவரை மகிழ்ச்சிபடுத்த வேண்டும். உங்களது நல்வாழ்வு மற்றும் வெற்றியே நீங்கள் குருவுக்கு அளிக்கும் மிகச் சிறந்த காணிக்கை ஆகும்.