இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். செல்வச் செழிப்பு என்பது பணத்தை மட்டும் குறிப்பது அன்று. உதாரணமாக சொந்த வீடு ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர் அந்த வீட்டில் இருந்து அனுபவிக்க வேண்டும். அதை விடுத்து உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக அந்த வீட்டை விடுத்து, வேறு இடத்தில் இருப்பது செழிப்பைக் குறிக்காது. அவர் அந்த வீட்டை பிறருக்கு வாடகைக்கு கொடுத்து இருக்கலாம். அங்கு வாடகைக்கு இருப்பவர் தான் அந்த வீட்டை அனுபவித்து மகிழ்வார்கள். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் மூலம் செல்வச் செழிப்பு அபரிமிதமாக இருக்கும். பிறருக்கோ கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற முடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள்.
நாளைய தினம் 22/06/2025 அன்று ஏகாதசி திதி ஆகும். ஏகாதசி என்பது பதினொன்றாவது திதி ஆகும். ஏகாதசி விஷ்ணுவிற்கு உகந்த நாள் ஆகும். அன்று விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளமும் நலமும் பெருகும். அன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம் ஒன்றைப் பற்றிக் காண்போம். இந்த எளிய பரிகாரத்தை முறையாக மேற்கொள்வதன் மூலம் கோடீஸ்வர யோகத்தை பெறலாம்.
இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். மேலும் இது ஏகாதசி அன்று செய்ய வேண்டிய பரிகாரம் என்பதால் அன்றைய தினம் விரதம் இருந்து இதனை மேற்கொள்ளலாம். இந்த விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று விஷ்ணு பகவானை வழிபடுவதோடு அவரது திருமார்பில் உறையும் மகா லடசுமியையும் வழிபட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்ய அவசியமான பொருள் துளசி மற்றும் பச்சை கற்பூரம் ஆகும். ஒரு தாம்பாளத் தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். துளசி இலை அல்லது துளசி மாலை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிது பச்சை கற்பூரம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டை வீட்டு நிலை வாசலுக்கு வெளியே கோலம் போட்டு அதன் நடுவே வைத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டு ஒரு மணி நேரம் நிலை வாசலுக்கு வெளியேவே இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அந்த தட்டை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்று இரவு முழுவதும் அது பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் பச்சை கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்திலும் பர்சிலும் வைத்து விட வேண்டும். துளசி இலையை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் ஏகாதசி அன்று பரிகாரம் செய்வதன் மூலம் நம் வீடு தேடி நமக்கு அதிர்ஷ்டமும், யோகமும் வந்து சேரும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025