தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமாக வருவது வைகாசி மாதம் ஆகும். ஒவ்வொரு மாத வெள்ளிக்கிழமைக்கும் சிறப்பு இருப்பது போல வைகாசி வெள்ளிக் கிழமையும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். நாளைய தினம் 30.5.2025 வளர்பிறை வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியோடு சேர்ந்து வந்திருப்பது மிகவும். சிறப்பு.
வெள்ளிக்கிழமை வழிபாடு வாழ்வில் செழிப்பைக் கொண்டு சேர்க்கும். வறுமை நீங்கும்; வாழ்வில் வளம் பெருகும். அதற்கு நாளைய தினம் செய்யவேண்டிய வழிபாடு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.நாளைய தினம் முக்கியமாக செய்ய வேண்டியது பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி கடவுளை வழிபடுவது ஆகும். பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா ? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.
பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது. பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது. அவ்வைந்து பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஒன்று : பசுஞ்சாணம்
இரண்டு : பசுவின் கோமியம்
மூன்று : பசும்பால்
நான்கு : பசுந்தயிர்
ஐந்து : பசுநெய்
முந்தைய காலங்களில் எல்லாம் அரசர்கள் தங்களது நாடு வளமாக இருக்க, நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேர்த்து, தங்களுடைய அரண்மனையில் பெரிய பெரிய யாகங்களையும், ஹோமங்களையும், சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து நடத்துவார்கள். அந்த யாகமும், ஹோமமும், மந்திரமும் மன்னரையும் அந்த ஊர் மக்களையும் சிறப்பாக வைத்திருக்கும். மன்னராட்சி காலத்தில் இந்த வழக்கம் இருந்தது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அடுத்ததாக காலம் மாறிய பின்பு பலர் தங்களது வீட்டிலேயே தனியாக வருடத்திற்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் இப்படி சிறிய ஹோமங்களை புரோகிதர்களை அழைத்து செய்து கொள்வார்கள். ஆனால் இதற்கான பணச்செலவும் வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். காலத்தின் மாற்றத்தால் இப்போதெல்லாம், வீடு கட்டும்போது முதன்முறையாக ஹோமம் நடத்துவதோடு சரி.
வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறொரு பரிகாரத்தை தான் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம். பஞ்சகவ்ய விளக்கு. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை. நாளை வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும். இந்த விளக்கு எரிவதனால் லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விளக்கை சாதாரண நாளில் வீட்டில் ஏற்றி வைத்தாலே அவ்வளவு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். நாளை வளர்பிறை சதுர்த்தி திதியில், வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கை ஏற்றுவது மிகவும் சிறப்பு. நாளைய தினம் இந்த விளக்கை வீட்டில் நீங்கள் ஏற்றி விட்டால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் நாளையோடு தீர்ந்தது என்று முடிவு செய்து கொள்ளலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்று தான் இந்த பஞ்சகவ்ய விளக்கு வழிபாடு.
இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி உங்கள் வேண்டுதலை பிராரத்தனையை செய்து கொள்ளுங்கள். பிறகு தூப தீப ஆராதனை காட்டுங்கள். இந்த விளக்கை நாளைய தினம் மட்டுமின்றி பிரதி வெள்ளிக்கிழமை ஏற்றுவதும் மிகச் சிறப்பு
September 19, 2025
September 17, 2025
September 15, 2025