ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், இராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.
சிலருக்குக் கிரக நிலைகள் காரணமாக படிப்புக்கேற்றபடி நல்ல வேலை அமையாமல் சிரமப்படுவார்கள். அவர்கள், மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம். தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.
நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் உறவினர்களின் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.
இவை எல்லாம் வேலை கிடைக்க உதவிகரமாக இருக்கும் என்றாலும் அதற்கான எளிய பரிகார முறையும் உள்ளது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். நல்ல வேலை கிடைக்கவும், கிடைத்த வேலை நிலையாக இருக்கவும், மற்றும் வேலையில் உள்ள பிரச்சினைகள் தீரவும் ஸ்ரீ பைரவரை மிளகு தீபம் ஏற்றி, ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடலாம். பின்னர், பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்
∙ பைரவர் சிலைக்கு முன் விளக்கேற்றி, மிளகு தீபம் ஏற்றவும்.
∙ பைரவர் மந்திரங்களை ஜெபிக்கவும்.
∙ பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை போன்ற வழிபாடுகளைச் செய்யவும்.
∙ பைரவரை மனதில் நினைத்து, நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று காலை நீராடி விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு 7 மணிக்குள் பைரவர் சன்னதிக்கு சென்று அங்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து சிவப்பு நிற பழங்கள் நிவேதனம் செய்து விட்டு ஒரு புதிய அகல் விளக்கு ஒன்றை வங்கி வைத்து கொள்ளுங்கள். அதற்கு மூன்று முகங்களில் சந்தனம், குங்குமம் இட்டு கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற சுத்தமான நூல் துணி ஒன்றை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.
அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகுகளை ஒவ்வொன்றாக போட்டு கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மூட்டை போன்று நன்கு இறுக்கமாக நூல் கொண்டு கட்டி விடுங்கள். மிளகுகள் வெளியே வந்து விடக்கூடாது. பின்னர் அகல் விளக்கில் வைத்து விடுங்கள். இலுப்பை எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இலுப்பை எண்ணெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றலாம். மிளகு மூட்டையின் திரியிலும் எண்ணெய் படும்படி ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் தீபம் ஏற்றி பைரவர் மூல மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம்: “ஓம் பைரவாய நமஹ”
September 19, 2025
September 17, 2025
September 15, 2025