அக்னி நட்சத்திரம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும் காலம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அக்னி பகவான் தன்னுடைய வெப்பத்தை தணித்து, தன்னை புதுப்பித்துக் கொள்வதற்காக வெப்பத்தை வெளியிட்டு காண்டவ வனத்தை எரித்த காலமே அக்னி நட்சத்திரம் என குறிப்பிடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன.
அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21 ஆம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15 ஆம் தேதி வரை இருக்கும். இந்த ஆண்டு (2025) மே 4 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது. சூரிய பகவான், பரணி நட்சத்திரத்தில் துவங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை பயணிக்கும் இந்த 25 நாட்களையே அக்னி நட்சத்திரம் என்கிறோம். வெப்பம் தகிக்கும் இந்த காலக்கட்டத்தை கத்தரி வெயில் காலம் என்றும் கூறுவார்கள். முதல் ஏழு நாட்களுக்கு வெயில் கூடிக் கொண்டே போகும். இருபத்தியோராம் நாள் வெயில் உச்சம் தொடும். பிறகு படிப்படியாகக் குறையும்.
அக்னி நட்சத்திர காலத்தில், அக்னி பகவானை வழிபடுவதுசிறப்பு. முருகப்பெருமானை மலைகளில் சென்று கிரிவலம் செய்து வழிபடுவது நன்மை அளிக்கும். அக்னி நட்சத்திரம், அதிக வெயில் இருக்கும் காலம் என்பதால், தான-தர்மங்கள் செய்யலாம். அக்னி நட்சத்திரத்தில், நீர் தானம் செய்வது மிகவும் சிறப்பானது. ஏரி, குளங்கள், கிணற்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பி, அவற்றை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம், நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம், ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.
அக்னி நட்சத்திர காலங்களில் செய்யக் கூடியவை:
∙ திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம்
∙ கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிபோகலாம்
∙ வாடகை வீடு மாறுதல்
∙ சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள்
∙ எலுமிச்சை, தயிர் போன்ற தானங்கள்
∙ பூஜை அறையில் மலர்களால் அர்ச்சனை
அக்னி நட்சத்திர காலங்களில் செய்யக்கூடாதவை:
∙ கிணறு, குளம், தோட்டம் அமைத்தல்
∙ மரம் வெட்டுதல், செடி கொடிகள் வெட்டுதல், நார் உரிக்கிறது
∙ விதை விதைத்தல்
∙ வீடு கட்டுதல், பூமி பூஜை செய்தல்
∙ முடி இறக்குதல், காது குத்துதல்
∙ கிரகப்பிரவேசம்
∙ வாகனங்களில் நெடுந்தூரம் பயணம்
∙ நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு
∙ புதிய வாகனம் வாங்குதல்
∙ தேவத் திருவுருவங்களை பிரதிஷ்டை செய்தல்
∙ அக்னி நட்சத்திர காலத்தில் எந்தக் … – Kalki Online
September 12, 2025
September 12, 2025
September 11, 2025