Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Viruchigam Rasi Palan 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Viruchigam Rasi Palan 2025

Posted DateFebruary 25, 2025

விருச்சிகம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2025

இந்த மாதம் நீங்கள் செழிப்புடன் இருப்பீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் சில பின்னடைவுகளுக்குப் பின்னர் உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். அலுவலக முன்னேற்றத்திற்கான உங்கள் பணிகளுக்கு சக பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்குவார்கள். சொந்தமாக புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை செயலாற்றலாம் என்றாலும் குறைந்த மூலதனத்தில் ஆரம்பிப்பது நல்லது. ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டிருந்தால் இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.தலைவலி, தோள்பட்டை வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறப்பாகக்  கல்வி பயில்வார்கள்.

காதல் / குடும்ப உறவு

இந்த மாதம் குடும்பத்தில் வயதில் மூத்த உறுப்பினர்களுடனான உங்கள் உறவு சில சங்கடங்களை சந்திக்க நேரும். நீங்கள் உங்கள் குடும்பத்தாரால் அலட்சியப்படுத்தப்படலாம். குழந்தைகளுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நம்பிக்கை காரணமாக பிணைப்பு நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்து உரையாட வேண்டும். இதனால் உங்கள் பிணைப்பு நெருக்கமாகும். பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். அந்தப் பசுமையான நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம். காதலர்களுக்கு இடையேயான உறவு மேம்படும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை

உங்கள் பொருளாதார நிலை மிதமாக இருக்கும். உங்களிடம் பணம் இருக்கும் என்றாலும் அது அதிக அளவில் இருக்க வாய்ப்பில்லை. தேவையற்ற பண முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகள் இந்த மாதம் பலனளிக்கத் தொடங்கும். அதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டுவீர்கள். அது உங்கள் எதிர்கால நலனுக்கு பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் காலம் முழுவதும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் உங்கள் சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை 

உத்தியோகம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு வளர்ச்சி இருக்கும் என்றாலும் நீங்கள் சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அதற்குப் பிறகு அங்கீகாரம் காணலாம்.  விற்பனை மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள  விருச்சிக ராசி அன்பர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் நீங்கள் அதற்கான வெகுமதிகளை நிறுவனத்தின் மூலம் பெறுவீர்கள்.  ஊடகங்கள் மற்றும் சினிமாத் துறையினர் இந்த மாதம்  வெற்றிக்கான அற்புதமான நேரமாக இருப்பதைக் காணலாம். உற்பத்தி துறையில் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வை இந்த மாதம் பெறலாம். வழக்கறிஞர்கள் இந்த மாதம் வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் பெறுவதைக் கடினமாகக் காணலாம். மருத்துவத் துறையில் உள்ள விருச்சிக ராசிக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கும். R&D வல்லுநர்கள் தங்களின் புதுமையான யோசனைகளுக்கு சிறந்த அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெறுவார்கள.

உங்கள் உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை 

தொழில்

இந்த மாதம் உங்கள் மனதில் புதிய தொழில்  தொடங்கும் எண்ணம் வரலாம். அதனை செயலாற்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஆனால் குறைந்த மூலதனத்தில் மேற்கொள்வது சிறப்பு.  சிறிய அளவிலான முதலீடு மூலம் உங்கள் முயற்சிகளை ஆரம்பியுங்கள் அது எவ்வாறு உங்களுக்கு பலன் அளிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு இது வளர்ச்சிக்கான நேரம். இந்த மாதம் தொழில் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கும்.  செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் இது சரியான நேரம். சரியான திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளால் மட்டுமே நீங்கள் உங்கள  தொழிலில்  குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண இயலும்.  மொத்தத்தில், புதிய வணிக முயற்சிகளை அமைக்க அல்லது ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்த  இந்த மாதம் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம் என்றாலும் சிறு உடல் உபாதைகளை நீங்கள் அதிகமாக சந்திக்க நேரும். இது உங்கள் அன்றாட பணிகளை பாதிக்கலாம். தலைவலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற பொதுவான பிரச்சினைகள் காரணமாக பணியில் உங்கள் கவனம் சிதறலாம்.  மன அழுத்தம், அல்லது நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது  இந்த அசௌகரியங்கள் ஏற்பட வழிவகுக்கும். அடிக்கடி ஏற்படும் தலைவலி உங்களின் செயல் திறனைப் பாதிக்கலாம். சிறிய பிரச்சினை என்றாலும் உடனடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குறிப்பாக, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்வி பதிவுகள் இருக்கும். மேலும் அவர்கள் நல்ல கல்வி சாதனைகளையும் அடைவார்கள். ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விரைவில் அறிவியல் சமூகத்தால் தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வெற்றி பெறுவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை 

சுப தேதிகள் : 1,4,5,6,8,9,10,11,12,13,15,17,18,19,20,21,23,25,29,30,31

அசுப தேதிகள் : 2,3,7,14,16,22,24,26,27,28