Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
துலாம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Thulam Rasi Palan 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Thulam Rasi Palan 2025

Posted DateFebruary 20, 2025

துலாம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2025

இந்த மாதம் செழிப்பான மாதமாக இருக்கும். நீங்கள் கடின உழைப்பை மேற்கொண்டு உங்கள் அலுவலகப் பணிகளில் வெற்றி காண்பீர்கள். என்றாலும் நீங்கள் அங்கீகாரம் பெறவும் வளர்ச்சி காணவும் சில தடைகளை கடக்க வேண்டியிருக்கும்.  இந்த மாதம் வேலை மாற்றம் ஏற்படும். உங்களுடைய நல்ல யோசனைகளை நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் சக ஊழியர்கள் பணியிடத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலக சந்திப்பு / கூட்டங்களில் மேல் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கும் துலாம் ராசிக்காரர்கள் அதிக பணத்தை முதலீடு செய்யாமல் குறைந்த மூலதனத்தில் தொடங்க வேண்டும். ஏற்கனவே தொழில் துவங்கி இருப்பவர்கள், பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரலாம். நீங்கள் மகிழ்ச்சி நிறைந்த ஒரு சிறந்த காதல் வாழ்க்கையைப் பெறுவீர்கள். திருமணமான தம்பதிகளிடையே நல்ல புரிதல் இருக்கும். அது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.உங்களுக்கு சர்க்கரை மற்றும் நீரிழிவு போன்ற சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். உணவு கட்டுப்பாடு நீரிழிவு பிரச்சினைகளில் இருந்து மீள உதவும்.கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள்  உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

காதல் / குடும்ப உறவு

நீங்கள் குடும்ப உறவினர்களுடன் சில வலுவான தொடர்புகளைக் கொண்டிருப்பீர்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதையும், கதைகளையும் அனுபவங்களையும் பகிர்வது மற்றும் நினைவு கூறுவது உங்களுக்கு அமைதியையும், ஆறுதலையும் தரும். குழந்தைகளுடனான உங்கள் உறவு அதிசயமாக அசாதரணமானதாக இருக்கும். கணவன் மனைவி ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நம்பிக்கை நிறைந்த பிணைப்பை உருவாக்குவீர்கள். நீங்கள் இந்த மாதம்  அன்பு,  மற்றும் கற்றலுக்கு அற்புதமான நேரங்கள் செலவிடுவீர்கள். உங்கள் பந்தம் உங்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக வடிவமைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீங்கள் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவீர்கள், அவற்றில் பெரும்பாலானவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துவீர்கள். அது  உங்கள் உறவுக்கு அழகை சேர்க்கும். திருமணமான  ​​தம்பதிகளுக்கு இடையே நல்ல பரஸ்பர புரிதல் இருக்கும். இந்த பரஸ்பர மரியாதை சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள வலிமையை உருவாக்கும். உங்களின்  பந்தம் மேலும் வலுவடைந்து, குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்க உதவும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை 

நிதிநிலை

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளிப்பார்கள். உபரி வருமானத்தை சேமிப்பது நல்லது. நல்ல லாபம் தரும் முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. அதற்கான இப்பொழுது கிடைக்கும் சிறந்த  வாய்ப்பு மீண்டும் உங்களுக்கு கிடைக்காது. பங்கு தரகர்கள்  தங்கள் வர்த்தகத்தில் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பங்குகளில் அதிக அளவு முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் நிதிநிலை மேம்பட: பிருகஸ்பதி பூஜை 

உத்தியோகம்

இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி காண்பீர்கள். என்றாலும் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிட்டலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு  இந்த மாதம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். விற்பனை மற்றும் தொழில்நுட்பப் பணியில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்திடமிருந்து உரிய  வெகுமதிகளைப் பெறுவது கடினம். ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறையில் உள்ளவர்களும் தங்கள் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்ய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் வெற்றியைப் பெற நேரம் எடுக்கும். உற்பத்தித் துறையில் இருக்கும் தொழில் வல்லுநர்கள் தங்களின் செயல் திறனுக்கு ஏற்ற நியாயமான வெகுமதியைப் பெறுவார்கள்.   இந்த மாதம் பதவி உயர்வு மற்றும் அங்கீகாரத்தின் காலமாகும். இந்த ராசியின்  கீழ் உள்ள சட்டப் பயிற்சியாளர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினம் மற்றும் அவர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவத் துறையில் உள்ள துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆராய்ச்சித் துறை துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு மகத்தான அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பெறுவார்கள். அவர்கள் விரைவில் நற்பலன்களைப் பெறுவார்கள்.

உத்தியோகத்தில் மேன்மை பெற: சூரியன் பூஜை 

தொழில்

புதிதாக தொழில் செய்ய விரும்பும் துலாம் ராசியினர், தொடக்க முதலீட்டை குறைவாக வைத்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  நிதி அபாயங்களை நிர்வகிக்க இது அவர்களுக்கு உதவும். ஏற்கனவே தொழில் துறையில் இருப்பவர்கள் , தொழிலில் வளர்ச்சி காண பொறுமையாக காத்திருக்க வேண்டியிருக்கும்.  வெளிப்படையான தன்மை பணப்புழக்கத்தால் எழும் எந்த தடைகளையும் கையாள அவர்களுக்கு உதவும். இந்த மாதம் கூட்டுத் தொழில் லாபம் அளிக்காது.  அனைவருடனும் நெருக்கமாகப் பணியாற்றுவதால் ஏற்படக்கூடிய சிரமங்கள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக  முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்.  எனவே, கூட்டாக செயல்படுவதை தவிர்த்து சுதந்திரமான முயற்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம்,  மிகவும் நிலையான, மென்மையான பணிச்சூழலை ஏற்படுத்திக் கொள்ள  முடியும்.

ஆரோக்கியம்

அதிக சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு நோயினால் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த சிக்கல்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை சீர்குலைக்கலாம். உண்ணும் உணவில் கவனம் அவசியம். முறையான உணவு  இரத்த சர்க்கரை அளவை வரம்பிற்குள் பராமரிக்கிறது. மற்றும் அஜீரணக் கோளாறு வராமல் காக்கலாம்.  முழு உணவுகளையும் விகிதாச்சாரத்தில் எடுத்துக்கொள்வது, இனிப்புகளை உட்கொள்வதைக் குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நேர்மறையான மாற்றத்தைக் கொண்டிருப்பது நல்ல ஆலோசனையாகும். இதை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் சிறந்த வாழ்க்கை வாழலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் பங்களிப்பை அறிவது ஒரு முக்கியமான விஷயம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை 

மாணவர்கள்

இந்த ராசியின்  கீழ் பிறந்த பட்டதாரிகள் உட்பட மாணவர்கள், உகந்த கல்வி செயல்திறனை அடைவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உயர்கல்வி மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கான ஒப்புதலைப் பெறுவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : கேது பூஜை 

சுப தேதிகள் : 1,3,5,6,7,8,10,11,12,14,15,17,18,19,21,23,24,25,26,27,29,31

அசுப தேதிகள் : 2,4,9,13,16,20,22,28,30