மகாசிவராத்திரி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த புனிதமான நாள் சிவனை வழிபட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி என்பது கோடிக்கணக்கான சிவபக்தர்கள் விரதம் அனுசரித்து, மகாதேவரிடம் தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தி, இந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் கொண்டாடும் சிவபெருமானின் இரவு ஆகும். இந்த ஆண்டில், மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26, 2025 அன்று கொண்டாடப்பட உள்ளது மற்றும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றான மகா கும்பமேளாவின் கடைசி நாளாகும்.
• மகா சிவராத்திரி என்பது சிவபெருமானையும் பார்வதி தேவியையும் போற்றும் நாளாகும்.
• இது “சிவனின் இரவு” என்றும் அழைக்கப்படுகிறது.
• உண்ணாவிரதம் மற்றும் தியானம் மூலம் அறியாமை இருள் மற்றும் வாழ்க்கையின் தடைகளை கடக்கும் நாள்.
• இது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், சிவபெருமானுக்கு மரியாதை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு நாள்.
• இது குளிர்காலத்திலிருந்து வசந்த காலம் மற்றும் கோடைகாலத்திற்கு மாறுவதைக் குறிக்கும் நாள்.
கொண்டாட்டங்கள்
• பக்தர்கள் விரதமிருந்து, கோவிலுக்கு சென்று பூஜைகளில் பங்கு கொண்டு பக்தியை வெளிபடுத்தி வேண்டிக் கொள்வர்.
• பக்தர்கள் ருத்ராபிஷேகம் போன்ற சடங்குகளில் கலந்து கொள்வார்கள்.
• சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நூல்களை பக்தர்கள் பாராயணம் செய்வார்கள்.
• பக்தர்கள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துகின்றனர்.
• சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
• பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழிப்பார்கள்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.
சதுர்த்தசி திதி ஆரம்பம் – பிப்ரவரி 26, 2025 – 11:08 AM
நிஷித் கால பூஜை நேரம் – பிப்ரவரி 27, 2025 – 12:08 AMமுதல் 12:58 AM வரை
சிவராத்திரி பாரண நேரம் – பிப்ரவரி 27, 2025 – 06:47 AM முதல் 08:54 AM வரை
ராத்திரி முதல் கால பூஜை நேரம் – பிப்ரவரி 26, 2025 – 06:18 PM முதல் 09:25 PMவரை
ராத்திரி இரண்டாவது கால பூஜை நேரம் – பிப்ரவரி 27, 2025 – 09:25 PMமுதல் 12:33 AMவரை
ராத்திரி மூன்றாம் கால பூஜை நேரம் – பிப்ரவரி 27, 2025 – 12:33 AM முதல் 03:40 AM வரை
ராத்திரி நான்காவது கால பூஜை நேரம் – பிப்ரவரி 27, 2025 – 03:40 AMமுதல் 06:47 வரை
சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவா காயத்ரி மந்திரம் 1
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
சிவா காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரசோதயாத்
சிவ மந்திரம்
அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய
September 19, 2025
September 17, 2025
September 15, 2025