புரட்டாசி மாதம் வந்தாலே பெருமாள் வழிப்பாட்டுடன் நவராத்திரி பண்டிகையும் களை கட்டும். புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.அம்பிகைக்கு உரிய ஒன்பது நாட்களும் ஒன்பது இரவுகளும் வழிபாட்டிற்கு உரியதாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்து வழிபாடு நடக்கும். நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரிய நாட்களாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியாக விளங்கும் முப்பெருந்தேவியரைப் போற்றி வழிபடும் இந்த நவராத்திரி நாளில் கடைசி மூன்று நாட்கள் ஞான ஸ்வரூபமாக விளங்கும் சரஸ்வதி தேவிக்கு உரிய நாட்களாக வழிபடப்படுகிறது. இந்த பூஜை நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை இந்து மதத்தில் ஒரு பெரிய மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சரஸ்வதி பூஜை நவராத்திரி கொண்டாட்டங்களின் குறிப்பிடத்தக்க பகுதியாகும், மேலும் இது ஒன்பது நாள் திருவிழாவின் ஆறாவது அல்லது ஒன்பதாம் நாளில் செய்யப்படுகிறது. இந்த விழா சாரதிய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் பெற பக்தர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். அன்னை சரஸ்வதி கற்றல், படைப்பாற்றல், அறிவு, ஞானம், கலை மற்றும் இசை ஆகியவற்றின் தெய்வம்.
சரஸ்வதி கற்றல், ஞானம், கலைகள் மற்றும் அறிவு ஆகியவற்றின் தெய்வம். அறிவு, ஞானம், படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றுக்கான ஆசிகளைப் பெற பக்தர்கள் அவளை வணங்குகிறார்கள். இந்த சடங்கு சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறவும், கல்விக்கான தேவியின் அருளால் ஞானம் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
பல பெற்றோர்கள் இந்த நாளில் தங்கள் குழந்தைகளின் புத்தகங்களை, பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள் நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை சரஸ்வதி தேவியின் முன் வைத்து பூஜை செய்கிறார்கள். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.
சில பிராந்தியங்களில், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையாகவும் அனுசரிக்கப்படுகிறது, அங்கு கருவிகள்,ஆயதங்கள் போன்றவை வைத்து வணங்கப்படுகின்றன.
கொண்டாட்டங்கள்
அம்மனை வழிபட்டு ஆசிர்வாதம் பெறுவதற்கான முக்கிய நாள் தென்னிந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சரஸ்வதியுடன் தொடர்புடைய மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, அம்மனுக்கு மஞ்சள் பூக்கள் சாற்றி இனிப்புகளை நைவேத்தியம் செய்கிறார்கள். பக்தர்கள் சரஸ்வதி வந்தனை, தேவியின் பெயரில் பாடலைப் பாடுகிறார்கள். வெள்ளைப் பூக்கள், மற்றும் எள், அரிசி, தேங்காய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரசாதப் பொருட்கள் சரஸ்வதிக்கு சமர்பிக்கப்படுகின்றன.
சரஸ்வதி பூஜையின் கடைசி நாள் சரஸ்வதி விசர்ஜன் என்று அழைக்கப்படுகிறது.
வீட்டில் சரஸ்வதி பூஜை செய்ய சில வழிமுறைகள்:
பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரிக்கவும்.
பூஜை பீடத்தை அமைக்கவும்.
பிரசாதங்களை தயார் செய்யுங்கள்.
மஞ்சள், குங்குமம், அட்சதை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும். சரஸ்வதி தேவிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தூப தீப ஆரத்தி செய்ய வேண்டும். ஆரத்தி செய்யவும். பிறகு பிரசாதம் நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்குங்கள்.
பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா முதலானவற்றை வாங்கி அளிக்கலாம்..
September 19, 2025
September 17, 2025
September 15, 2025