பழங்காலத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அணிவது மிகவும் பிரசித்தம். பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் நகை அணியும் வழக்கத்தை நாம் காணலாம். தங்கமும் வெள்ளியும் அதன் பிரகாசத்திறகு பெயர் போனவை. தங்க உலோகம் அணிவது ஜோதிட ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மிக ரீதியாகவும் நன்மை அளிக்கிறது. அதாவது நேர்மறை சக்திகள், நல்ல ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய வல்லமை தங்கத்திற்கு உண்டு. அதனால் தான் நேர்மறை சக்திகள், மற்றும் ஆற்றல்கள் நிறைந்த கோயிலுக்கு செல்லும் போது தங்க நகை அணிந்து செல்வதால், நம் உடலும், உள்ளமும் நேர்மறையான சக்திகளைப் பெற்றிடலாம். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, மன அமைதி, ஆன்மிக அமைதி உள்ளிட்ட பல காரணங்களுக்காக தங்கத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தங்கம் அனைத்து கிரகங்களுடன் தொடர்புடையது என்றாலும் முக்கியமாக சுக்கிரனுடன் தொடர்புடைய உலோகம் ஆகும். அதனால் சுக்கிர தோஷம் உள்ளவர்கள், சுக்கிர பலம் குறைந்தவர்கள் தங்கத்தை பயன்படுத்துவது நல்லது. தங்கம் ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர் துரதிர்ஷ்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். மகாலட்சுமியின் அம்சமாகவும், விலைமதிப்பற்ற உலோகமாக பார்க்கப்படும். தங்க நகை அணிவது சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைத் தரும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. தங்கம் சுக்கிரனுடன் தொடர்புடைய உலோகம் என்பதால், சுக்கிர தோஷம் உள்ளவர்கள், சுக்கிர பலம் குறைந்தவர்கள் தங்கத்தை பயன்படுத்தலாம்.. இதனால், அதிர்ஷ்டம் கூடும்
உங்களின் ஆன்மீக சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் தங்க மோதிரத்தை, மோதிர விரலில் அணிய வேண்டும். அதன் மூலம் மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தீய சக்திகளால் ஏற்படும் தடைகள் விலகும்.
பெண்கள் ஆன்மீக பலத்தைப் பெற தங்க மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும்.
சமூகத்தில் கலந்து உறவாடும் போது மற்றும் பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை தொடர்பாக பிரச்சனைகளை எதிர்கொண்டால் தங்க மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும்.
கவனச் சிதறல் அதிகம் ஏற்பட்டால், அடிக்கடி உங்களின் கவனம் திசை திரும்புகிறது என்றால், மனதில் அமைதி இல்லாத நிலை இருந்தால் தங்கத்தை ஆட்காட்டி விரலில் அணியலாம்.
திருமணத்தில் பிரச்சனையா? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நெருங்கிய உறவு ஏற்படவில்லையா? அப்படியானால் கழுத்தில் செயினாகவோ அல்லது ஏதாவது ஒரு ரூபத்திலோ தங்கத்தை அணிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக குழந்தை பிறப்பில் பிரச்சனை உள்ளவர்கள் மோதிர விரலில் தங்கத்தை அணியலாம்.
தங்க நகை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
தீய சக்திகள் உடலுக்குள் நுழைவதைத் தடுப்பது, உடலுக்குள் ஆன்மீக உணர்வை செலுத்துதல், ஆன்மீக வழியில் குணப்படுத்துதல் மற்றும் எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தங்க நகைகள் அணிவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளாகும். ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது மனம் ஒருநிலைப் படும். மற்றும் ராஜ யோகத்தை அடைய உதவும். மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்கு சளி-குளிர் அல்லது சுவாச நோய் இருந்தால், தங்க நகைகளை சிறிய விரலில் அணிய வேண்டும்.
தங்கம், மகால்டசுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இடுப்புக்கு கீழ் தங்கம் அணிவது மகாலட்சுமியை அவமதிக்கும் செயலாகும். மேலும், இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக் கூடாது, அவ்வாறு அணிந்தால் பல நோய்களுக்கு வழிவகுக்கும். இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்பார்கள்.. தொடையிலிருந்து காலின் பாதப்பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்பார்கள். ஆக, நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சமாக கருதப்படுகிறது. தங்கம் குரு ஆதிக்கம் கொண்டது. குருவும் சனியும் பகைக்கிரகங்களாகும்.. எனவே, கால்களுக்கு வெள்ளி அணியலாமே தவிர, தங்கம் அணிய கூடாது. தங்கக் கொலுசு அணிவதால், நன்மையை விட தீமைதான் அதிகமாகிவிடும். இடுப்புக் கீழே தங்கத்தை அணிய கூடாது என்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு. நம்முடைய உடல் இயக்கம் என்பது உஷ்ணம், குளிர்ச்சியை சமமாக கொண்டது. தங்கம் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே, காது, கை, கழுத்தில் அணியலாம். இதனால், நமக்கு குளிர்ச்சி கிடைக்கிறது. ஆனால், காலில் தங்கம் அணியும்போது, உடலில் வாதம் அதிகமாகிவிடும். வாதம் அதிகரித்தால் உடல் எடை கூடிவிடும். இது கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025