Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2025 | February Matha Kadagam Rasi Palan 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2025 | February Matha Kadagam Rasi Palan 2025

Posted DateJanuary 22, 2025

கடகம்  பிப்ரவரி  மாத பொதுப்பலன்கள் 2025

இந்த மாதம் அலுவலக நிர்வாகம் உங்கள் பணிகளை அங்கீகரிக்கும். அலுவலக நிர்வாகம் உங்களுக்கு பல வழிகளில் ஆதரவாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் சிறந்த ஒத்துழைப்பை அளிப்பார்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரலாம். எனவே குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது நல்லது. ஏற்கனவே தொழில் செய்பவர்கள் லாபம் காண சிறிது பொறுமை காக்க வேண்டும். காதலர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் காதல் விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது. கணவன் மனைவி உறவில் சில சச்சரவுகள் எழலாம் என்பதால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியுடனும் அனுசரித்தும் நடந்து கொள்வது நல்லது.  இந்த மாதம் முழுவதும் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்கள் நிதிநிலை மேம்பட வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட நல்ல வாய்ப்பு உள்ளது.

காதல் / குடும்ப உறவு

காதலர்கள் தங்கள் உறவுகளில்  வெளிப்புற தாக்கங்களை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவு சார்ந்த முடிவெடுக்கும் விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது. கணவன் மனைவி உறவில் சில சவால்கள் இருக்கலாம். எனவே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான தொடர்புகளில்   அமைதியான உணர்வுடன் அணுகுவது விவேகமானது. பழைய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் இணக்கமாகவும் நிறைவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, குழந்தைகளுடனான தொடர்புகள் ஓரளவு சவாலானதாக இருக்கலாம்.  அவர்களின்  தொந்தரவான நடத்தைக்கு பொறுமையான அணுகுமுறை தேவை. அக்கம் பக்கத்தாருடனான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். .

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை

உங்கள் பொருளாதார சூழலில் ஏற்றம் இருப்பதை இந்த மாதம் நீங்கள் காணலாம். உங்களில் பலர் தங்கள்  வங்கியிருப்பு கணிசமாக உயர்வதை  காணலாம். முன்பிருந்ததை விட இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கலாம்.  நிதி நிலையில் இந்த சாதகமான மாற்றம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியும். அவர்கள் உங்களுடன் இந்த முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு கொண்டாடுவார்கள். உங்கள் நிதி இலக்குகளை அடைவதில் அவர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.  உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வரும் ஊக்குவிப்பு, கவனம் செலுத்துவதற்கும், விவேகமான நிதித் தேர்வுகளை செய்வதற்கும் உங்களை ஊக்குவிக்கும். இறுதியில் மிகவும் வளமான நிதி எதிர்காலத்தை வளர்க்கும். உங்கள் நிதி நிலைமை தொடர்ந்து வளர வளர, ஊக்கம் நிறைந்த இந்த காலக் கட்டத்தில் உங்கள் சமூக நட்பு வட்டாரத்தின் ஆதரவு கூடுதல் நம்பிக்கையையும் உறுதியையும் வழங்கும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம்

இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் வளர்ச்சி காணலாம். இந்த மாதம் உங்கள் வருமானம் கணிசமாக உயரலாம். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் மேலதிகாரிகளும் உங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கலாம். சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் தங்கள் கடின  உழைப்பின் மூலம்  ஆதாயம் காணலாம். உங்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெறலாம். ஊடகம் மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் அங்கீகாரம் பெற பொறுமை காக்க வேண்டும். சில பின்னடைவுகள் இருக்கும் என்றாலும் நீங்கள் இறுதியில் வெற்றி காணலாம். சட்டத் துறையில் இருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை  திருப்திபடுத்தலாம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் அதிக வருமானம் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் சில சவால்களை சந்தித்த பிறகே வெற்றி காண்பீர்கள். உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் கணிசமான முன்னேற்றம் காணலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம்  தங்கள் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.

 உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை  

 தொழில்

புதிய தொழில் தொடங்குவதில் நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். மற்ற ராசியினரைக் காட்டிலும் இந்த ராசிக்காரர்கள் தொழில் நடவடிக்கைகளில்  சில சவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும். குறைந்த அளவில் முதலீடு செய்ய வேண்டும். முயற்சிகளில் அதிக கவனம் தேவை. சிறிய அளவில் தொடங்குவது மன அழுத்தத்தைத் தணித்து, மேலும் நிலையான வளர்ச்சியை எளிதாக்கும். ஏற்கனவே தொழில் செய்பவர்கள் பல தடைகளை சந்திக்க நேரலாம். இந்த மாதம் லாபம் காண்பது கடினமாக இருக்கும். சிறந்த தொழில் உத்திகளைப் பின்பற்ற வேண்டும். ஏற்ற இறக்கங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக இருக்கலாம். குடும்பத்தில் காணப்படும் அமைதியான சூழல் உங்களுக்கு மன அமைதியை அளிக்கலாம். என்றாலும் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள்

உயர் கல்வி மாணவர்கள் மற்றும் ஆரம்பக் கல்வி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்து உதவிகரமாக இருப்பார்கள். அதன் காரணமாக  மாணவர்கள் சாதனைகளைப் புரியலாம். வெளிநாட்டில் சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். மாணவர்கள் வெளி நாடு செல்வதற்கான விசா கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைக்கான ஒப்புதல் பெற இந்த மாதம் ஏதுவாக இருப்பதைக் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

 சுப தேதிகள் :  1,5,7,9,10,11,13,15,17,19,20,21,23,24,25,26,27

அசுப தேதிகள் : 2,3,4,6,8,12,14,16,18,22,28