Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
இந்த ராசி முதலாளிகள் கிடைத்தால் வெகுமதியும், பரிசும் வாரி கொடுப்பார்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்த ராசி முதலாளிகள் கிடைத்தால் வெகுமதியும், பரிசும் வாரி கொடுப்பார்கள்

Posted DateJanuary 3, 2025

இந்த உலகில் பணத்திற்கு அடுத்தபடியாக நாம் எதிர்பார்ப்பது பிறரின் பாராட்டும் ஊக்குவிக்கும் சொற்களும் தான். வீடாக இருந்தாலும் சரி அலுவலகம் அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி நம்மை யாராவது பாராட்டிவிட்டால் நமக்குள் ஒரு உற்சாகம் பொங்கும். அது மேலும் நாம் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும். அதிலும் குறிப்பாக நாம் வேலை செய்யும் இடத்தில் நமது முதலாளி அல்லது மேலதிகாரி அல்லது குழுத் தலைவர் நம்மை உற்சாகப் படுத்தினால் அதற்கான வெகுமதி அளித்தால் நாம் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்.

சில ராசியில் பிறந்தவர்கள் ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்தால், அவரின் ஊழியர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதோடு, எதிர்பார்க்காத வகையில் பரிசு, ஊக்கத்தொகை அளித்துப் பாராட்டக்கூடிய நபராக இருப்பார்.அப்படிப்பட்ட ராசிகள் எவை என்று இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தனித்தும் மிகச் சிறப்பாகவும்  செயல்படக்கூடியவர்கள். இவர்கள் பிறரை மதிக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழில் அதிபராகவோ அல்லது நிறுவனத்தின் மேல் அதிகாரிகளாகவோ இருந்தால் இவர்களின் கீழ் பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஏனெனில் தனது கீழ் பணிபுர்பவர்களின் திறமையை வெளிக்கொணர இவர்கள்  உதவுவார்கள். மற்றும் மனம் திறந்து  பாராட்டுவார்கள். பணியாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிபார்கள். அவர்களின் தேவைக்கேற்ற மாற்றங்களை செய்யவும், ஒவ்வொரு கால இடைவெளியில் அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக வெகுமதி, பாராட்டுகளை அளிக்க தவறுவதில்லை. அவ்வப்போது விருந்து, விழாக்களைத் தாண்டி பாராட்டும், நம்பிக்கை தரக்கூடிய நபராக இந்த ராசி முதலாளிகள் இருப்பார்கள்.

 ரிஷப ராசி

இவர்கள் தலைமைத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும் நட்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். வேலை என்று வரும் போது இவர்கள் மேலாளராக இருந்தாலும் தனது சக பணியாளர்கள் மற்றும் கீழ் பணி புரிபவர்களிடம் நட்புணர்வுடன் பழகுவார்கள். அதே சமயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சிகளை வழங்குவார்கள்.  கீழ் பணிபுரிபவர்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்வதோடு, அவர்களின் செயல்பாடு, சிக்கல்களை நேரடியாக கேட்டு அறிந்து அதனை தீர்த்து வைப்பார்கள். இவர்கள் அக்கறை கொண்டு திட்டுவதை விட, அதிகமாக தட்டிக் கொடுத்து, பாராட்டி சிறப்பாகச் செயல்பட வைப்பார்கள்.

 சிம்ம ராசி

இவர்கள் ராசியின் பெயருக்கு ஏற்றவாறு கம்பீரமாக செயல்படுபவர்கள். பொதுவாகவே இவர்களிடம் ஆளுமைத் திறன் அதிகம் காணப்படும். இவர்கள் முதலாளியாக, மேலதிகாரிகளாக வரும் போது, தன்னுடைய நிர்வாகத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவதோடு, தன் ஊழியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், அவர்களின் சிறப்பான செயல்களுக்கு பாராட்டுதலும், ஊக்கத்தொகை அளிப்பதற்கு தயங்குவதில்லை. தானும் சிறப்பாக செயல்பட்டு பிறரையும் சிறப்பாக செயல்பட வைப்பார்கள். தனது கீழ் பணி புரிபவர்களின் செயலதிறனை பாராட்டவும் தயங்க மாட்டார்கள். குழுவாக எதை செய்தாலும் அதில் சிறப்பான முடிவுகளை தருவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எனவே இவர்கள் பெரும்பாலும் குழுத் தலைவர்களாக பரினமிப்பார்கள்.

 விருச்சிக ராசி

இவர்கள் மனதின் ஆழத்தில் இருப்பதை யாராலும் அறிய முடியாது என்றாலும் ஒரு நிறுவனத்தின் தலைவராக மேலதிகாரியாக, ஒரு குழவின் தலைவராக இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அது  மட்டும் இன்றி தனது முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பவர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்கமும் பரிசும் வழங்குவார்கள். சக பணியாளர்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களை ஊக்குவித்து அவர்கள் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இவர்கள் எந்த கடினமான சூழலையும் கடக்க நினைப்பார்கள். மேலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஒருதலைப்பட்சமான முறையில் நடக்காமல் நியாயமானவர்களாக இருக்க முயல்வார்கள். அதிகாரத்தை விட  பிறரை பாராட்டி ஊக்குவிப்பது சிறந்தது என நினைக்கக்கூடியவர்கள்.