நாம் வசிக்கும் வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுவோம். அவ்வாறு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நமது அன்றாட பணிகளில் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி நாம் காணலாம் வாருங்கள்.
தினமும் நமது வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இது எளிய விஷயம் என்றாலும் இதனை நாம் தவறாமல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவே பூஜை அறை மற்றும் சமையல் அறையை சுத்தமாக துடைத்து மெழுகி கோலம் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி நமது வீட்டில் தங்குவாள் என்பது ஐதீகம்.
காலை மற்றும் மாலை நிலை வாசலின் முன் அல்லது வீட்டின் வெளியே துடைத்து மெழுகி கோலம் இட வேண்டும். பண்டிகை நாளாக இருந்தால் காவி இட வேண்டும். அதாவது செம்மண் இட வேண்டும். முற்காலங்களில் சாணம் கலந்து நீர் தெளிப்பார்கள். அது இந்தக் காலத்தில் சாத்தியம் இல்லை என்பதால் நல்ல மஞ்சள் தூளை நீரில் கரைத்து வாசலில் தெளிக்க வேண்டும். பிறகு கோலம் இட வேண்டும்.
தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் விளக்கு ஏற்ற வேண்டும். காலை என்பது பிரம்ம முகூர்த்தத்தைக் குறிக்கும். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை. இந்த காலகட்டத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு 6 மணிக்குள்ளாக வீட்டில் விளக்கேற்றிட வேண்டும். இயலாவிடில் குறைந்த பட்சம் சூரிய உதயத்திற்குள் விளக்கு ஏற்ற வேண்டும். அதே போல மாலை 6 மணி அளவில் விளக்கு ஏற்ற வேண்டும். சூரிய அஸ்தமனம் ஆனவுடன் ஏற்றுவது நல்லது.
தினமும் எளிய முறையிலாவது பூஜை செய்ய வேண்டும். முக்கியமாக விநாயகர் பூஜை செய்து குல தெய்வ பூஜை செய்ய வேண்டும். பூஜை என்றால் நீங்கள் நீண்ட நேரம் எடுத்து செய்ய நேரம் இல்லை என்று எண்ணலாம். சாமிக்கு மஞ்சள், குங்குமம், அட்சதை சாற்றி வாசமுள்ள மலர்களை சாற்ற வேண்டும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி விட்டு ஸ்லோகங்கள், மந்திரங்கள் சொல்லி இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பாடல்கள் அல்லது மந்திரங்கள் ஜெபிக்க நேரம் இல்லாவிட்டால் ஒலிப்பெருக்கியில் ஒலிக்க வைத்து கேட்கலாம்.
எப்போதும் வீட்டில் நல்ல நறுமணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கோயில்களில் பூ, விபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, பன்னீர் வாசத்தால் நிரம்பியிருக்கிறதோ அதே போன்று வீடும் அப்படியே இருக்க வேண்டும். நாம்ள் வாழும் வீட்டை கோவில் போல பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே வீட்டில் சாம்பிராணி போட வேண்டும். வீடும் மணக்க வேண்டும். காலை, மாலை இரு நேரங்களில் வீட்டில் ஊதுவத்தி, சாம்பிராணி, தூபம் ஏற்ற வேண்டும்.
தினமும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த இறைவனுக்கு உகந்த பொருட்களை நெய்வேத்தியம் செய்யலாம். நாம் அன்றாடம் சமைக்கும் உணவையும் நைவேத்தியம் செய்து விட்டுத் தான் உண்ண வேண்டும். அதற்கு குளித்து முடித்து சமைக்க வேண்டும்.
அமைதியான சூழல்
வீட்டில் எப்போதும் அமைதி குடி கொண்டிருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது. அதற்கு உறவில் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். சண்டையிடாமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
துளசி செடி
வீட்டில் துளசி செடியை வளர்க்க வேண்டும்.தினமும் நீர் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பும் கோலம் இட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
மேலே சொன்ன எளிய செயல்களை நாம் தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் நமது வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025