ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அவற்றுள் ஒன்றாகத் திகழ்வது எண் கணித ஜோதிடம். எண் கணிதம் அடிப்படையில் நமது வாழ்வில் சில விஷயங்களை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லது அதனைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று கூறுவார்கள்.
உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு சாதகமான கிரகம் எது என்பதையும் உங்கள் எண்ணிற்கான எளிய பரிகாரங்களையும் இந்தப் பதிவில் நாங்கள் அளித்துள்ளோம். படித்துப் பயன்பெறுங்கள்.
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 1 ஆகும். எண் 1 என்பது சூரியனுக்கு உரிய எண் ஆகும். எண் 1 அல்லது கூட்டு எண் 1 வரப் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு சூரிய பகவானின் அருள் நிறைந்திருக்கும். எனவே இந்த எண்ணில் பிறந்த நீங்கள் தினமும் சூரிய பகவான் வழிபாடும், சூரியனுக்கு நீர் செலுத்தி அர்க்கியம் செய்து வர உங்கள் வாழ்க்கையில் செல்வமும், ஆரோக்கியமும் நிச்சயம் பெருகும்.
எண் 1க்கான பரிகாரங்கள்:
தங்க மோதிரம்அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும். பொருளாதார நிலை மேம்படும். வாழ்வில் வெற்றிகள் குவியும்.
மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெல்லம் சாப்பிடுதல் அல்லது கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டி, வெல்லம் ஆகியவற்றை பசுக்களுக்கு உணவளிப்பதால் உங்களுக்கு ஐஸ்வர்யம் பெருகும்.
பசுக்களுக்கு கோதுமை சப்பாத்தி மற்றும் வெல்லம் கொடுக்கவும்.
காலையில் சூரிய பகவானுக்கு நீர் செலுத்துங்கள் மற்றும் சூரியநமஸ்காரம் செய்யுங்கள்
உங்கள் தந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து செயல்படுங்கள்
சூரிய பகவானுக்கு பூஜை செய்யவும்
சிவ வழிபாட்டை மேற்கொள்ளவும்
2,11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 2 ஆகும். எண் 2 என்பது சந்திரனுக்கு உரிய எண் ஆகும். எண் 2 அல்லது கூட்டு எண் 2 வரப் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 2,11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு சந்திர பகவானின் அருள் நிறைந்திருக்கும். சந்திரன் மனம் மற்றும் தாயைக் குறிக்கும். எனவே இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் தாயிடமிருந்து ஆசி பெற்று அவர் கையால் ஒரு வெள்ளி நாணயத்தை வாங்கி உங்களிடம் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
எண் 2க்கான பரிகாரங்கள்:
நீங்கள் வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி வளையல் அல்லது வேறு வெள்ளி நகைகள் அணிவது நல்லது.
திங்கட் கிழமைகளில் சிவலிங்க வழிபாடு செய்வதும், பச்சரிசி தானம், பால் அபிஷேகம் செய்வதன் மூலம் உங்களுக்கு செல்வமும், அதிர்ஷ்டமும் சேரும்.
திங்கள் மற்றும் பௌர்ணமி இரவுகளில் பால் தானம் செய்யவும்.
வெள்ளை ஆடைகளை அணியுங்கள்.
உங்கள் புத்தகங்களிலோ அல்லது அறையிலோ மயில் தோகை வைத்துக் கொள்ளுங்கள்.
சந்திர பூஜை செய்யவும்
திங்கட்கிழமை துர்கா பூஜை செய்வது நல்லது. வெங்கடாசலபதியை வணங்குவதன் மூலம் மன சஞ்சலங்கள் நீங்கும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 3 ஆகும். எண் 3 என்பது குருவிற்கு உரிய எண் ஆகும். எண் 3 அல்லது கூட்டு எண் 3 வரப் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு குரு பகவானின் அருள் நிறைந்திருக்கும். குருவின் ஆசியால், வாழ்க்கையில் மங்களகரமான பலன்கள் நிறைந்திருக்கும். குருவின் நல்லருள் சிறப்பாக பெற்றிட வியாழக்கிழமை தோறும் நெற்றியில் மஞ்சள் திலகம் இடுவதும், ஆல மரம், அரச மரத்திற்கு கீழ் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யவும்
எண் 3க்கான பரிகாரங்கள்:
நீங்கள் குருமார்கள், பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
மஞ்சள் நிறக் கைக்குட்டையை எப்பொழுதும் கையில் அல்லது கைப் பையில் வைத்திருக்கவும். அதன் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றி காணலாம்.
ஏழை எளியோருக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உதவுங்கள்.
வெள்ளி மூக்குத்தி அல்லது காதணி அணியவும்.
உடல் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்களுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.
குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுங்கள்
முல்லை மலரால் அர்ச்சித்து மஞ்சள் வஸ்திரம் சாற்ற வேண்டும்
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 4 ஆகும். எண் 4 என்பது ராகுவிற்கு உரிய எண் ஆகும். எண் 4 அல்லது கூட்டு எண் 4 வரப் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு ராகு பகவானின் அருள் நிறைந்திருக்கும். சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் எண் 4 நபர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த நிறங்களில் ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிவது பெரும்பாலும் இந்த நபர்களுக்கு உதவும். எண் 4 ஆனது ஒழுங்கு மற்றும் ஒழுக்கம் தொடர்பான முக்கிய குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, எனவே ஒழுக்கமாக இருப்பது எண் 4 நபர்களுக்கு செழிக்க உதவும் என்று சொல்வது பாதுகாப்பானது. இந்த தேதியில் பிறந்தவர்கள் ராகுவின் நல்லருளை சிறப்பாக பெற்றிட துர்கா தேவி வழிபாடு செய்வதும், எப்போதும் துர்கா தேவியின் புகைப்படத்தை உங்களுடன் வைத்துக் கொள்வதும் நல்லது.
எண் 4க்கான பரிகாரங்கள்:
ஒரு மர பென்சிலை வைத்துக் கொள்வது நல்லது. படிக்கும் மாணவர்களுக்கு பென்சிலை தானமாக வழங்கலாம்.
மீன்களுக்கு உணவளிக்கவும்.
சனிக்கிழமைகளில் உளுந்து மற்றும் கருப்பு ஆடைகளை கொடுங்கள்.
சிவபெருமானை வணங்குங்கள்.
ராகு பூஜை செய்யவும்
செவ்வாய் வெள்ளி ஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழம் விளக்கு ஏற்ற வேண்டும்.
ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
5,14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 5 ஆகும். எண் 5 என்பது புதனுக்கு உரிய எண் ஆகும். எண் 5 அல்லது கூட்டு எண் 5 வரப் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு புத பகவானின் அருள் நிறைந்திருக்கும். நீங்கள் உங்கள் தாய் அல்லது மனைவியிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள்.
புதன் பகவானுக்கு பச்சை நிறம் உகந்தது. பச்சை நிற பணப் பையைக் கையில் வைத்திருங்கள். வேலை வியாபாரம் செய்யும் இடத்தில் பச்சை நிற பர்சை பயன்படுத்துங்கள். மேலும் புதன் கிழமைகளில் பச்சை நிற உடை அணிவது உங்களுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
எண் 5க்கான பரிகாரங்கள்:
ஞாயிற்றுக் கிழமைகளில் பசுக்களுக்கு பச்சைப் புல் அல்லது பச்சை காய்கறிகளை வழங்கலாம்.
விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.
புத பகவானை வழிபடவும்
ஏழை சிறுமியர்களுக்கு அன்னதானம் வழங்கவும்
எண்ணெயில் உங்கள் பிம்பத்தை (முகம்) பார்த்து விட்டு அதனை தானமாகக் கொடுக்க வேண்டும்.
6,15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 6 ஆகும். எண் 6 என்பது சுக்கிரனுக்கு உரிய எண் ஆகும். எண் 6 அல்லது கூட்டு எண் 6 வரப் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 6,15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு சுக்கிர பகவானின் அருள் நிறைந்திருக்கும்.
எண் 6க்கான பரிகாரங்கள்:
நீங்கள் தினமும் சுத்தமான ஆடையை அணிவதும், வாசனைத் திரவியங்கள் போட்டுக் கொள்ளுதலும் நல்லது.
வெள்ளிக்கிழமைகளில் கருப்பு பசுவிற்கு உணவளித்தல் நல்லது.
வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உதவுதல், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதால் செல்வத்தை ஈர்க்கவும், உங்களின் செயல்களில் வெற்றி பெற்றிடலாம்.
வைரத்தை அணிந்து கொள்வது நல்லது. வைரத்தை அணிய முடியாதவர்கள் ஜிர்கானா அணியலாம்.
வெள்ளிக்கிழமை ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்.
துளசி இலையை வாயில் வைத்துக் கொள்ளவும்.
மாலையில் துளசி செடியின் முன் தீபம் ஏற்றவும்.
சுக்ரனுக்கு பூஜை செய்யவும்
வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்வது நல்லது.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 7 ஆகும். எண் 7 என்பது கேதுவிற்கு உரிய எண் ஆகும். எண் 7 அல்லது கூட்டு எண் 7 வரப் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு கேது பகவானின் அருள் நிறைந்திருக்கும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள், வாழ்க்கையில் செல்வமும், வளமும் பெற்றிட 11 எண்ணிக்கையில் பூக்களை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இவர்கள் தங்க நிறத்தில் கடிகாரம் அணிவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கருப்பு வெள்ளை நிற நாய்களுக்கு உணவளிப்பதும் நல்ல பலனை அள்ளித் தரும்.
எண் 7க்கான பரிகாரங்கள்:
தெருநாய்களுக்கு உணவளிக்கவும்.
பைரவரை வணங்குங்கள்.
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களை அதிகம் அணியுங்கள்.
கேது பூஜை செய்யவும்
சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது
சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது
கணபதியை வணங்குவதன் மூலம் செல்வம் செல்வாக்கு பெருகும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 8ஆகும். எண் 8 என்பது சனிக்கு உரிய எண் ஆகும். எண் 8 அல்லது கூட்டு எண் 8 வரப் பிறந்தவர்கள் சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு சனி பகவானின் அருள் நிறைந்திருக்கும்.
எண் 8க்கான பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் கோயிலுக்குச் செல்லுங்கள்; சனி பகவானுக்கு எள்ளு கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
ஆலமரத்திற்கு அருகில் கருப்பு நிற எறும்புகளுக்கு இனிப்புபோடுங்கள்
ஏழைகளுக்கு கருப்பு ஆடைகளை கொடுங்கள்.போர்வை அளியுங்கள்
சனிக்கிழமைகளில் கோவிலுக்கு வெளியே கருப்பு எள்ளை விநியோகிக்கவும்.
சனி (சனி) பூஜை செய்யவும்
சனிக்கிழமை தோறும் அனுமன் சாலிசாவை தவறாமல் பாராயணம் செய்வது நல்லது.
தினமும் காக்கைக்கு அன்னம் வைக்க வேண்டும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உரிய எண் 9ஆகும். எண் 9 என்பது செவ்வாய்க்கு உரிய எண் ஆகும். எண் 9 அல்லது கூட்டு எண் 9 வரப் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்கு உள்ளானவர்கள். எந்த மாதமாக இருந்தாலும் நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் உங்களுக்கு செவ்வாய் பகவானின் அருள் நிறைந்திருக்கும்.
எண் 9க்கான பரிகாரங்கள்:
செவ்வாய் கிழமைகளில் அருகில் உள்ள முருகன் ஆலயம் சசென்று வழிபடுங்கள்
செவ்வாய்க் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு தவறாமல் சென்று வழிபாடு செய்வதும் இனிப்புகளை வழங்கி, அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து வருவது நல்லது.
உங்கள் கையில் எப்போதும் சிவப்பு நிற கயிறை கட்டிக் கொள்வது, சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் தரக்கூடிய பலன்கள் கிடைக்கும்.
முருகப்பெருமானை வணங்குவது நல்லது
சஷ்டி விரதம் இருக்க வேண்டும். கந்தர் சஷ்டி கவசம் தினமும்படிக்க வேண்டும்
ராமரை வணங்குங்கள்.
செவ்வாய் (அங்காரகன்) பூஜை செய்யவும்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025